Tuesday, May 26, 2009

இந்திய அரசியல் அமைப்பு

15 ஆவது நாடாளுமன்றம் கூடவிருக்கும் இன்றைய நிலையில், நமது இந்திய அரசியல் அமைப்பை பற்றி சில துளிகள்...
இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது.

அவை மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை.

மாநிலங்களவையின் (Rajya Sabha) 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் (Legistative Assembley) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

மக்களவை (Lok Sabha), மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

இந்திய நாடாளுமன்றம், கழுகின் பார்வையில்...

அமைச்சரவை:
வெளிவிவகாரம், நிதி, சட்டம், மனிதவள மேம்பாடு, விவசாயம், ரயில்வே என நாற்பதுக்கும் மேற்பட்ட துறைகளை கொண்டுள்ளது இந்திய அரசாங்கம். அதில் 30 முதல் 35 அமைச்சகங்களுக்கு ஒரு காபினெட் (Cabinet Minister) மற்றும் இரு இணை அமைச்சர்கள் (Minister Of State) நியமிக்க படுவார்கள்.

இந்திய தொழிலாளர் ம்ற்றும் வேலைவாய்ப்பு, மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, உணவு மற்றும் பதப்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி துறை, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு , உள்நாட்டு விமான அமைச்சகம், புள்ளி விவரம் மற்றும் திட்டக்குழு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் என 8 துறைகளுக்கு காபினெட் அமைச்சர்கள் இல்லாமல் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் (Independent MOS) மட்டுமே நியமிக்க படுகிறார்கள்.
தகவல்கள் தொடரும்...

No comments: