Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, September 6, 2010

அவனும் அவளும்

அவன்
சிணுங்கும் அலைபேசியை

செல்லமாய் எடுத்தனைக்க

யாரோ ஏதோ எதற்கோ பேச

தாமரை இலை தழுவும் நீராய்

ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக

அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்

அமிர்தச் சுவை தேடி அள்ளி

காது மடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தை

அடடே, உனக்கு வந்திடுச்சா

மாத்தி பண்ணிட்டேனா”துடிதுடிக்கத்

துண்டிக்கிறாய் இணைப்பை

கூடவே நம்பிக்கை நரம்பையும்

அவள்

சிணுங்கும் இதயத்தை செல்லமாய் தட்டி

அமைதிப்படுத்தி நின்று, நிதானமிழந்து

உன் எண் ஒத்திஏதோ இணைப்பில் இருக்கும்

உன்னை தொடமுடியாமல் துவண்டு

இன்னொரு முயற்சியில் இணையும் இணைப்பில்

காது மடலோடுஇனிக்கும் உன் குரல்தேட

பதட்டத்தில் உதடு உதறி

பொய் உதிர்கிறது ”அடடே, உனக்கு வந்திடுச்சா,

மாத்தி பண்ணிட்டேனா” துவண்டு துண்டிக்கிறேன்

இணைப்பை தோல்வி வலையில் இறுக பிணைந்தபடி

---- ஈரோடு கதிர் -----

Tuesday, July 7, 2009

தபுசங்கர் மொழி


நான் ரசித்த டாப் 3 தபுசங்கர் கவிதைகள்


எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்......?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,

போதும்!



'என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்றுவிடுகிறாய்?'
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!








உனக்கு வாங்கி வந்த

நகையைப் பார்த்து'

அய்......எனக்கா இந்த நகை'

என்று கத்தினாய்.
நகையோ,
'அய்......எனக்கா இந்தச் சிலை'

என்று கத்தியது.

Monday, March 16, 2009

காதல் க(வி)தை


ஆம் என் காதலும் கண்களில் தான் ஆரம்பமானது ...


ஜன்னல் ஓர பயணம் ,


அதில் சில்லென்ற தென்றலாய் அவள் முகம்


நாணமென்னும் நூல் தொடுத்து எய்தாள் கள்ள பார்வை


மீண்டும் அதே ஜன்னலோரம் ,


காத்திருந்தேன் அழுக்கு சட்டைக்கு பதில் அழகான சட்டையுடன்


அதே பார்வை ,


பரிட்சையத்தின் பரிசாய் சிறு புன்னகையும் சேர்ந்தது


அரை புன்னகையோ ஆள் கொள்ளும் பூகம்பம்பார்வையும் புண்ணகையும் சில நாள் தொடர ,


hello என்றேன் ஒரு நாள்பதிலாய் வெட்கம் தின்ற அரை வார்த்தை ,


ஆராய்ந்து பார்த்தால் hai என்றாள்அரை வார்த்தையும் ஆயிரம் வார்த்தை ஆனது


தேநீர் சந்திப்பில்தற்செயலாய் சில நேரமும் , தன் செயளாய் பல நேரமும் மெல்ல உறசினோம்


நாணம் சிவக்கும் உன் முகமும் ஆயிரம் கதை கூறும்விரல் பற்றியே நடக்கலானோம் ,


கை பற்றியே கடற்கரையும் அலங்தூம்சின்ந சின்ன சில்மிசமும் ,ஒரு நொடி முத்தமும் என் உயிர் எங்கும் கலந்தது


இதுவே சுவர்கம் என்று நினைத்தேன்


ஆம் என் காதலும் திருமணத்தில் தான் முடிந்தது ...


மீண்டும் ஜன்னல் வழியே என் பார்வை ,


மணவறையில் நீ யாருடனோதந்தை பாசம் என்றாய் , தாய் சொல் என்றாய் , சூழ்நிலை கைதி என்றாய்உன்னை கைதி என்று சொல்லி


என்னை தனிமை சிறையில் தள்ளி விட்டாய்கடற்கரையில் உன் காலடி தேடும் பைத்தியக்காரனும் ஆனேன்


உறக்கம் இல்லா இரவுகளும் கவிதையாய் மொழி பெயர்த்தேன்ஆண்டுகள் சில உருண்டன ,


அகவையும் அதிகரித்துபிள்ளை பாசம் , பேரன் ஆசை , நலம் கருதிய நண்பர்கள் நச்சரிப்புகலியாண ஏற்பாடும் தீவிரமானது ,


மணம் முடிப்பதற்கு முன்கடைசியாய் ஒரு முறை அவளை சந்திப்பது என்னும் விபரதீமான முடிவு


அறை மனதாய் அழுத்தினேன் அழைப்பு மணியை


அதே முகம் , சில்மிச பார்வையும் இன்று வினா பார்வை ஆனது
சின்ன சிரிப்பும் அவள் முகத்தில் மெல்ல உலர்ந்து தான் போனது


ஏன் இருதயமும் வேகமாய் உறைந்து தான் போனது பரிட்சையத்தின் அடையாளமும் இல்லாமல் வரவேற்றாள் மரியாதை நிமித்தமாக


மறந்து தான் போனாள் போல் , நிலை குலைந்து தான் போனேன் நானும் ,ஏதேதோ சொல்ல துடித்தவள் மௌனமாய் நின்றால்


நிற்க பிடிக்காமல் புறப்பட எத்தனித்தேன்


மேலே பேசியது , நான் பரிசாய் தந்த அவள் கால் கொழுசுமௌனத்தின் இடையே


அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர் என் இதயமும் மெள்ள விக்கித்து தான் போனது


நெஞ்சினில் காதலையும் , கண்ணில் கணவுகளையும் புதைத்து வாழும்


ஆயிர கணக்கான இந்திய பெண்களில் முகவரியும் ஆனாய் , முதல் வரியும் ஆனாய் .


நானும் அந்த வாக்கியத்தில் ஒரு வார்த்தையாக விரும்பவில்லை


மனதில் உன்னை காதலித்து , மற்றொரு வாழ்கையும் விரும்பவில்லை


நீ இல்லாத காதலையும் கனவுகளாய் மாற்றி காதலித்தேன்


அர்த்தம் அறியா சந்தோஷம் , ஆயினும் சிறு கண்ணீரும் வந்தது


ஆம் என் காதலும் கண்ணீரில் தான் முடிந்தது ...

Saturday, February 14, 2009

காதலர் தினம்

சிணுங்கல்கள் :

அடியே
நீ சினுங்குகிறாயா இல்லை
என்னை சினுங்க வைக்கிறாயா?
உன் சினுங்கலில் சிக்கி
சிற்பமாய் நிற்கிறேன்..
உளி கொண்டு கல்லை செதுக்கும் கலை அறிவேன்
உன் சினுங்கல் கொண்டு
எனை செதுக்கிய வித்தை இன்றே உணர்ந்தேன்

நல்ல வேலை நீ வாஜ்பாய் பேத்தியாக பிறக்கவில்லை
இல்லையேல்
உன்னை சினுங்க சொல்லியே
அந்த பாகிஸ்தானையே வென்று இருப்பார்...

நெருப்பை விட வலிமையனது உண்டா...?
அடித்து சொல்வேன்
நெருப்பை விட வலிமையானது உன் சிரிப்பு...
நெருப்பை கொண்டு எதையும் எரிக்கலாம்
ஆனால் சிரிப்பால் அந்த நெருப்பையே கூட அணைக்கலாம்....


என்னை காதலித்துவிடாதே

என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ


நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது


நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.


நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது


என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.