Thursday, July 23, 2009

சட்டமன்ற உறுப்பினர்கள் - ஒரு பார்வை

உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டிருப்பது நமது இந்தியாவில்தான். நமது அரசியல்வாதிகள், எந்த அளவுக்கு மக்கள் தரும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதற்குத் தமிழக சட்டப் பேரவையின் உறுப்பினர்கள் தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை உயர்த்திக் கொண்டிருப்பது ஓர் அதிர்ச்சி தரும் எடுத்துக்காட்டு.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ஐந்து முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2005-ல் ரூ. 12 ஆயிரமாக இருந்த அவர்களது ஊதியம் ரூ. 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே மேலும் ரூ. 4,000 அதிகரிக்கப்பட்டு ஊதியம் ரூ. 20 ஆயிரமாக உயர்ந்தது.


அடுத்த நிதியாண்டில் ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்ட ஊதியம் 2008 மே மாதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டு ரூ. 30 ஆயிரமாகியது. 2009 பிப்ரவரியில்தான் ரூ. 15 ஆயிரம் உயர்வு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ. 45 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்தார். இதோ இப்போது மீண்டும் ஓர் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு மொத்த ஊதியம் ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, நமது சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் மூன்று மடங்கு அதிகரிக்கவும் செய்திருக்கிறது. இப்படி இத்தனை முறை ஊதிய உயர்வும், இந்த அளவுக்கு ஊதிய அதிகரிப்பும் தமிழகத்தில் வேறு எந்தத் தொழிலிலாவது, நிறுவனத்திலாவது யாருக்காவது அளிக்கப்பட்டிருக்குமா?



ஓர் அரசு ஊழியருக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமானால் சம்பளக் கமிஷன் அமைத்து அதன் பரிந்துரையின்மீது நிதி அமைச்சகம் பல விளைவுகளையும் அலசி ஆராய்ந்து அதற்குப் பிறகு நான்கோ, ஐந்தோ, ஆறோ வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஷயத்தில் அப்படி எதுவுமே தேவையில்லை. எப்போதெல்லாம் முதல்வராக இருப்பவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஓர் அறிவிப்பை வெளியிடுவார். அத்தனை உறுப்பினர்களும் கட்சி மனமாச்சரியங்களை மறந்து உற்சாகமாக மேஜையைத் தட்டி வரவேற்பார்கள். இடதுசாரிகள் இந்த விஷயத்தில் சற்று வித்தியாசமானவர்கள். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டே ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்வார்கள்.

இதற்கு முன்பே ஒருமுறை நாம் குறிப்பிட்டிருந்தபடி, தாங்களே தங்களது ஊதியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொள்ளும் கேலிக்கூத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி விழ வேண்டும். எந்த ஊதிய உயர்வும் அடுத்து வரும் சட்டப்பேரவைக்குத்தான் பொருந்தும் என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டும்தான் இப்படிப்பட்ட விபரீதத்திற்கு முற்றுப்புள்ளி விழும்.

ஊதிய உயர்வைவிட அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை இப்போதைய சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் முதல்வர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தனி காலனி அமைக்கப் போவதாகவும், ஒவ்வொருவருக்கும் தலா இரண்டரை கிரவுண்டில் வீட்டு மனை வழங்கப்படும் என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பு.

முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வந்ததுதான் தாமதம், கட்சி மனமாச்சரியங்களை மறந்து நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவசர அவசரமாக ஒரு கோரிக்கை மனுவில் கையெழுத்துப் போட்டு முதல்வரிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்கள். கிடைப்பதை வாங்கிக் கொள்வதிலும், உறுதிப்படுத்திக் கொள்வதிலும் அத்தனை அவசரம்.

என்ன கொடுமை இது?சோழிங்கநல்லூர் பகுதியில் சந்தை மதிப்புப்படி ஒரு கிரவுண்ட் வீட்டு மனை குறைந்தது அரை கோடி ரூபாய் என்கிற நிலைமை இருக்கும்போது உறுப்பினர்களுக்குத் தலா இரண்டரை கிரவுண்ட் அரசு வழங்குவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான விஷயம். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்து அங்குள்ள மக்களால் தங்களது தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீட்டு மனை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன?

மக்கள் சேவையில் (?) ஈடுபடும் உறுப்பினர்களின் குடியிருப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய அவரவர் தொகுதியில் வீட்டுமனை அளிக்கிறோம் என்று சொன்னால்கூட அர்த்தம் உண்டு. சென்னையில், அதுவும் மிக அதிகமான சந்தை விலையுள்ள இடத்தில் இவர்களுக்கு எதற்காக வீட்டுமனைகளை அரசு ஒதுக்கித் தர வேண்டும்?

இப்போதெல்லாம் இன்னொரு விபரீதமும் அரங்கேறுகிறது. ஒவ்வொரு கூட்டத் தொடரின் முடிவிலும் முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விருந்து அளிப்பது எங்கே தெரியுமா? ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்! ஆண்டுதோறும் இதற்காகும் செலவு எத்தனை லட்சங்கள் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது என்ன அவலம் என்று குரல் எழுப்பினால், சாமானியர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்துண்ணக் கூடாதா என்று குதர்க்கம் பேசுவார்கள்.

ஒன்று மட்டும் தெரிகிறது - வாக்களித்துவிட்டு வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் "சாமானியன்' முட்டாள். வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அவரது வயிற்றில் அடிக்கும் "சாமானியன்' புத்தி சாலி!

தமிழக அரசின் RANK CARD


நிர்வாக சீர்கேட்டில் திளைக்கிறது தமிழக அரசு.

நேற்று தாக்கல் செய்யப்பட மத்திய தணிக்கை துறை அறிக்கையில் தமிழக அரசின் தவறுகளும், அலட்சியமும் அதனால் ஏற்பட்ட பெருத்த நஷ்டமும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது... அவற்றில் இருந்து சில:

சென்னை பெருநகர மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் பாதியை கூட செலவு செய்யவில்லை.

சாலைகளை அகலப்படுத்தும்போழுது மின் கம்பங்களை மாற்றி நடுவதற்காக ஒதுக்கப்பட்ட பத்தொன்பது கோடி ரூபாயில் ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை.. (சாலைகளும் மேம்படுத்தப்படவில்லை, மின் கம்பங்களும் மாற்றப்படவில்லை என்பது வேறு விஷயம்)

கல்விக்கான ஒதுக்கீட்டிலும் மிச்சம் வைத்து இருக்கிறார்கள்.

தொலைக்காட்சி தொடர்களுக்கான வரி விளக்கின் மூலமாக மட்டும் இருபத்து ஐந்து கோடி ரூபாய் நஷ்டம்.

பல்வேறு திட்டங்கள் தேவையற்ற கால தாமதங்களுக்கு ஆளாகி அதனால் மட்டுமே சுமார் நூறு கோடி நஷ்டம்.

மக்களுக்காக பயனளிக்காத திட்டங்கள் மூலம் முப்பது கோடி ரூபாய் நஷ்டம்...

கருணாநிதிக்கு கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது அந்த CAG அறிக்கை.

திருந்துமா திமுக அரசு???

http://timesofindia.indiatimes.com/articleshow/4809524.cms

Wednesday, July 22, 2009

சாம்பியன்ஸ் டிராபி

2009 க்கான சாம்பியன்ஸ் டிராபி தென்ஆபிரிக்காவில் வருகிற செப் 22 தேதி தொடங்கவிருக்கிறது. அட்டவணை உங்கள் பார்வைக்கு...



பிரிவு A : ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், இந்தியா
பிரிவு B :
தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து.

செப் 22 -
பிரிவு B - தென்ஆப்பிரிக்கா VS இலங்கை (இரவுபகல்)
செப் 23
- பிரிவு A - பாகிஸ்தான் VS மே.இ.தீவுகள் (இரவுபகல்)
செப் 24
- பிரிவு B - தென்ஆப்பிரிக்கா VS நியூசிலாந்து
செப் 25
- பிரிவு B - இங்கிலாந்து VS இலங்கை (இரவுபகல்)
செப் 26 - பிரிவு A - ஆஸ்திரேலியா VS மே.இ.தீவுகள்
செப் 26 - பிரிவு A - இந்தியா VS பாகிஸ்தான் (இரவுபகல்)
செப் 27 - பிரிவு B - நியூசிலாந்து VS இலங்கை
செப் 27 - பிரிவு B - தென்ஆப்பிரிக்கா VS இங்கிலாந்து (இரவுபகல்)
செப் 28 - பிரிவு A - இந்தியா VS ஆஸ்திரேலியா (இரவுபகல்)
செப் 29 - பிரிவு B - நியூசிலாந்து VS இங்கிலாந்து (இரவுபகல்)
செப் 30 - பிரிவு A - ஆஸ்திரேலியா VS பாகிஸ்தான்
செப் 30 - பிரிவு A - இந்தியா VS மே.இ.தீவுகள் (இரவுபகல்)
அக் 2
- அரைஇறுதி 1 (இரவுபகல்) A1 VS B2
அக் 3 - அரைஇறுதி 2 (இரவுபகல்) B1 VS A2

அக் 5 - இறுதி (இரவுபகல்)


இந்திய நேரப்படி பகல் ஆட்டங்கள் மதியம் 1 மணிக்கும், பகலிரவு ஆட்டங்கள் மாலை 6 மணிக்கும் தொடங்கும்.

Monday, July 20, 2009

பொன்னியின் செல்வன்

முன் குறிப்பு : தயவு செய்து இதை விமர்சனமாக எடுத்து கொள்ள வேண்டாம். நிகரற்ற "பொன்னியின் செல்வன் " என்னும் இந்த வரலாற்று புதினத்தை விமர்சிக்க எனக்கு இன்னும் வளர்ச்சியும் இல்லை,தகுதியும் இல்லை.

பொன்னியின் செல்வன் 50' களில் தமிழ் ரசிகர்களை தனது பேனாவுக்குள் கட்டிப் போட்ட அமரர் கல்கியின் ஒரு மாபெரும் சரித்திர நாவல். தமிழ் கூறும் நல்் உலகில் இக்கதையை பற்றி கேள்விப்படாதவர் எவரும் இல்லை. சோழ சாம்ராஜியத்தின் வரலாறு, இமயம் முதல் இலங்கை வரை சோழர்களின் ஆட்சி,புகழ், அரச குலம், எழில் கொஞ்சும் இயற்கை வனப்புகள் என்பதை பிரதானமாக கொண்டு கூடவே காதல்,வீரம்,மோகம் என சேர்த்து அட்டகாசமான ஒரு மிக சிறந்த நாவல்.

நினைவு தெரிந்த நாள் முதல் அம்மா சொல்லியும் கேட்காமல் நிராகரித்து வந்த நாவல் பொன்னியின் செல்வன். கல்லூரி முதலாண்டில், விடுதியில் சும்மா பொழுதுபோக்காக எடுத்த வாசிக்க தொடங்கிய புத்தகம். முதல் இரண்டு பக்கம் படித்து பிரமித்து போய், அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு தொடர்ந்து படிக்க போனேன். அடுத்த மூன்று மாதங்கள் நிகழ்காலம் மறந்து, உணவு, உறக்கம், டி.வி, கிரிக்கெட் என அனைத்தையும் தவிர்த்து பைத்தியம் பிடித்தார் போல் 5 பாகங்களையும் முடித்து விட்டு தான் எழுந்தேன்.

சொந்த ஊர் சோழ நாடு என்பதாலோ என்னவோ பொன்னியின் செல்வன் என்னை வெகுவாக கவர்ந்தது. என் ஊரை தாண்டி வந்தியதேவன் போயிருப்பான் என நினைக்கும் பொழுது பெருமையாக தான் உள்ளது. கதை நடந்த காலத்திற்கே நம்மை கொண்டு சென்று குதிரையில் ஏற்றி , வெள்ளம் பாயும் ஆறுகளில் இறக்கி, நம் கண்களாலே எழில் கொஞ்சும் சோழ வள நாட்டின் இயற்கையை ரசிக்க வைக்கிறார். விளைவாக கதை நடந்த அந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லையே என ஏங்க வேண்டியதுதான். இலங்கையின் காடு மற்றும் மலைகள்,இந்திய பெருங்கடல், மாமல்லபுரம்,தஞ்சை,பழையாறை,குடந்தை போன்ற ஊர்களை பயணிக்கும் பொழுது அந்தந்த பகுதிகளின் மகத்துவம் புரிகிறது.

வந்தியதேவனின் துருதுருப்பு, கரிகாலரின் கோவம், அருள்மொழிவர்மரின் ஈர்ப்பு, குந்தவையின் அழகு, பழுவேட்டரையரின் வீரம், சுந்தர சோழரின் கம்பீரம், நந்தினியின் மோகம் என அத்தனையும் உள்ளடக்கிய ஒரு சோழர் குல வரலாற்று புதினம். அந்த கால கோட்டை உள் அமைப்புகள், வீதிகள் (ராஜபாட்), மக்களின் தேசபற்று, அரச குலத்திற் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கை,காவேரி நதி என அனைத்தும் அருமையாக விளக்கபட்டிருக்கிறது.

FLASHBACK, இடைஇடையே பாடல்கள் என இருந்தாலும் கொஞ்சம் கூட சலிப்பே வராமல் அழகாக செல்கிறது கதை. ஒவோருவர் மனதில் தோன்றும் எண்ணத்தை கூட மிக அழகாக,சுவாரஸ்யமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது வரை 5 பாகங்கள் கொண்ட இந்த நாவலை 4 முறை படித்துவிட்டேன். விளையாட்டாக ஒரு முறை, மிரண்டுபோய் ஒரு முறை, ரசித்து ரசித்து ஒரு முறை என வகை வகையாக படித்தாலும் இதன் மீதுள்ள என் காதல் மட்டும் குறையவே குறையாது. நான் மட்டுமில்லை என் குடும்பமே இதன் வாசகர் தான். கதை கல்கியில் தொடராக வந்த அந்த காலத்தில் வீட்டில் உள்ள தாத்தாவோ,பாட்டியோ நாற்காலியில் நடுநாயகமாக அமர்ந்து படிக்க, அவரை சுற்றி வாண்டுகள் முதல் இளசுகள்,பெருசுகள் வரை வாராவாரம் கதைகேட்கும் என அம்மா அடிக்கடி சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். என்ன செய்ய இன்று அமர்ந்து கேட்க நேரமும் இல்லை, பொறுமையாக படித்து சொல்ல தாத்தா பாட்டியும் இல்லை. ( கதை சொல்வதே ஒரு தனி திறமை. அதை வேறொரு பதிவில் பாப்போம்)

மூன்றாம் பாகம் படிக்கும் பொழுதே "இன்னும் இரண்டு பாகம் தான்... முடியபோகிறதே என்ற எண்ணம் வந்துவிடுகிறது.நாவல் முடித்து ஒரு மாதம் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

கல்கி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததினாலும்,தமிழ்நாட்டில் பிறந்ததினாலும் தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது என்று பெருமை படுகிறேன். தமிழ் தெரிந்து இதை படிக்காதவர்கள் என்னவென்று சொல்ல . . . ?

இந்த நாவலை படமாகவோ,நாடகமாகவோ எடுக்க வேண்டும் என்பது கமல் உட்பட பல பேரின் ஆவல். இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. நானும் அப்படிதான் நினைத்திருந்தேன். ஆனால் கல்கியின் நடையும்,வர்ணனையும்,எண்ண கருத்துகளும் இந்த நாவலின்றி வேறெங்கும் கிடைக்காது.

எனது மதிப்பீடு : என்னது இன்னும் படிக்கவில்லையா ? படித்தே தீர வேண்டிய ஒரு பொக்கிஷம்.

இன்னும் எதையெல்லாம் பத்திரப்படுத்த ?

அந்தக் கிணறு...
என்றேனும் நிரம்பி வழிந்திருக்கலாம்...
அந்த வற்றிய நதி
என்றேனும் சல சலத்து ஓடியிருக்கும்

அந்த ஆற்றுப் படுகையில்
என்றேனும் ஊத்துத் தோண்டித்
தண்ணீர் ஊறியிருக்கலாம்

ப்ளாஸ்டிக் பாட்டில்
தண்ணீருக்குக் காசு கொடுத்துவிட்டு
பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து
பெய்ய ஆரம்பித்த மழையின்

முதல் துளியுடன் கடைசித் துளியையும்
பத்திரப் படுத்தினேன்
என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!

--- அருணா---

Friday, July 17, 2009

சிரிக்கெட்





















தொலைந்து போன வாழ்க்கை

மீன்கொத்தி பறவை ஒரே இடத்தில் பறந்து கொண்டே நின்று பொத்தென்று தண்ணீரில் விழுந்து மீன்பிடிக்கும் சாதூர்யத்தை பார்த்திருக்கிறீர்களா? பூவரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? காக்கா முட்டை என்ன நிறம் தெரியுமா? சலனமில்லாமல் ஓடுகிற நதியில் மேல்துண்டை வைத்து மீன் பிடித்த அனுபவம் உண்டா?

தந்தையின் கைகளில் படுத்துக்கொண்டு நீச்சல் பழகிய அனுபவம் இருக்கிறதா? அடைகாக்கும் கோழியின் சீற்றத்தை கண்டு ஓடியதுண்டா? காக்கை தூக்கிச்சென்ற கோழிக்குஞ்சு குற்றுயிராய் கீழே விழுந்து உயிருக்கு போராடும் போது பதை பதைத்து நின்றதுண்டா?

இவையெல்லாம் கிராமத்து மக்கள் தினம் உணர்வுபூர்வமாக அனுபவிக்க கூடியது. ஆனால் நகர வாழ்க்கையில் ஏதோ... சினிமாவில் பார்த்ததாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையை தொலைச்சிட்டு, நம்மளும் வாழுகிறோம்னு ஏதோ நாள கடத்திட்டு வர்றோம். டாடி, வாத்து பறக்குமானு புள்ள கேள்வி கேட்கிறான். அத வுடுங்க. முந்தாநாளு ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒரு வாண்டு அது ஆத்தாகிட்ட கேக்குது "மம்மி ரைஸ் எங்க செய்றாங்க"? நிலம் எங்க போய்க்கிட்டுருக்கு பார்த்திங்களா?

நம்ம கூட்டத்தில் பாதி ரெண்டுங்கெட்டானா அலையுது. சொந்த ஊர காலி பண்ணிட்டு டவுனுக்கு வந்த நம்ம ஜனம் ஊர மறந்து போயி ரொம்ப நாளாச்சி.

கபடமில்லாத வெள்ள மனசுக்காரன் எங்க பாக்க முடியுது? பக்கத்து வீட்ல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கிடந்த பெரிசு ஏதாவது செத்தா கூட எதிர்வீட்டுக்காரனுக்கு தெரிய மாட்டுக்கு!


ஆத்தா, அப்பன், அத்த, மதினி, மச்சான், சொக்காரன், சொந்தம்னு கூடி வாழ்ந்த ஜனம், இப்ப மூலைக்கு ஒன்னா சிதறிக்கிடக்கு. அப்பங்கிட்ட அடி வாங்கினா, குழந்த ஆத்தாக்கிட்ட ஓடும், ஆத்தாவும் திட்டினா, வாசல்ல வெத்தில இடிச்சுக்கிட்டு இருக்கிற பாட்டிக்கிட்டா போவும்.


கிழவி குழந்தய தூக்கி "நாசமா போறவன் புள்ளய என்னமா அடிச்சிருக்கான்" என்று தேற்றுவாள். அப்புறம் அவகாலத்து கதைய ஒன்ன எடுத்து விடுவாள். அதுல சீதையும் வருவா, கண்ணகியும் வருவா. கத கேட்டு வளர்ந்த சமூகம் அது. திண்ணையில் கத கேட்டு, காட்டாத்துல குளிச்சி, சோளக்கஞ்சி குடிச்சு, எல்லச்சாமிய கும்பிட்டு தெம்பா அலஞ்சவங்க அவங்க. இப்ப காத்தடச்ச பேப்பர் பைல கொஞ்சுண்டு சிப்ஸ் இருக்கு. அத 20 ரூவா கொடுத்து வாங்கி கொறிச்சிட்டு டிபன் சாப்பிட்டேன் என்கிறான். உடம்புல என்னத்த ஒட்டும். முதலிரவுல பொண்டாட்டி கிட்ட "சுகர் கம்ப்ளைண்டு" என்கிறான்.

பளபளனு விடியறதுக்கு முந்தியே தொழுவத்தில் இருந்து மாடுகள அவுத்துவிட்டு மேய்ச்சலுக்கு பத்திட்டு போறவன், நீச்சத்தண்ணிய ஒரு செம்பு குடிச்சிட்டு போவான். தூக்குச்சட்டியில அமுக்கி, அமுக்கி சோளாச்சோறு இருக்கும், வெயிலு சாயிர நேரத்தில் அத திண்ணுட்டு, எருமையோட சேர்ந்து, அவனும் ஏரியில குளிப்பான்.பாலு கறந்தால் அறைப்போனி அப்படியே குடிப்பான்.

வயக்காட்டுக்கு போறவன் காலைல மம்மட்டிய புடிச்சானா உச்சி வெயிலுக்கு கொஞ்சம் இளப்பாறுவான். அவனுக்கு வாக்கப்பட்டவ கலயத்தில் பழைய சோற புளிஞ்சுவச்சு கொண்டு வருவா.

வாய்க்கால்ல ஓடுற தண்ணில கால நனைச்சுக்கிட்டே பழயது சாப்பிட்டு திரும்பவும் வயல்ல இறங்குவான். சும்மா வைரம் பாஞ்ச கட்டையாட்டம் உடம்ப வச்சிருப்பான். நோய் நொடி அண்டிரும்? அப்பெல்லாம் வீட்டு வேலைக்கு வர்ற ஆள திண்ணயில உக்கார வச்சு இலை போட்டு, சோறு போடுவாங்க அவன் அத எல்லாத்தையும் மிச்சம் வைக்காம திண்ணாத்தான் அவன் வலைக்கு லாய்க்கு. கொறிச்சிட்டு வச்சான்னா, விரட்டி விட்டிருவாங்க!


அப்ப உடல் வருத்தி வேர்வ சிந்துனான். இப்ப நாம "வாக்கிங்" போறோம். யார்கிட்ட போய் இதைச் சொல்ல. காலைல நீராகாரம் குடிச்சிட்டு அப்ப போனான். இப்ப நீராகாரம் வேண்டாம்! அட அந்த செம்பக்கூட காணமுங்க.
பொருளாதாரமே பிரதானமாகிப் போன உலகில் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊருக்கு புலம் பெயரும் மக்கள் பல சுகங்களை தியாகம் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.


பூர்விக வீட்டையும், நடைபழகிய கிராமத்து தெருக்களையும், அந்த நிம்மதியான் வாழ்வையும் நகரத்து சத்தத்திற்கு இடையே அசைபோட்டு பார்க்க கூட நேரமில்லை நம்மில் பலருக்கு.


பிழைப்பு தேடி புலம் பெயர்த்தவர்களுக்கும், சொந்த ஊரை மறந்து தீப்பெட்டி சைஸ் குடியிருப்புகளில் பக்கெட் தண்ணியில் குளித்து வருபவர்களுக்கும், புகை மண்டல நகரத்தில் "ஏசி" வைத்து வாழ்பவருக்கும், இன்னும் பலருக்கும் இந்த கட்டுறை ஒரு "ஆட்டோகிராப்பாக" தெரியும்.


இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் வேளையில், நகரில் வசித்து ஓய்வு பெற்ற பலரும், நிம்மதி தேடும் செல்வந்தர்களும், தங்களது சொந்த கிராமங்களுக்கு ரயில் ஏறுவார்கள் என்பது உண்மை.

Wednesday, July 15, 2009

பெருந்தலைவர் காமராஜர்

பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்ம வீரர், கருப்பு காந்தி, கிங்மேக்கர் காமராஜர் பிறந்த தினம் இன்று. அவரை இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறிய அறிமுகம் செய்ய வேண்டி ஒரு பதிவு.

நெடிய பெரிய உருவம்; தெற்கத்தித் தமிழனுக்கே உரிய நாவற்பழக் கருப்பு; படர்ந்த முகம்; பெரிய கண்கள்; அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது சிலருக்கே இயலக்கூடியது.


எடுத்த எடுப்பிலேயே "சொல்லுன்னேன்' என்று செய்திக்கு வந்துவிடுவார். கருத்தோடு பேசினால் கேட்பார்; இல்லையென்றால் கருத்திருமன் ஆனாலும் "சும்மா உளறாதேன்னேன்' என்று வாயை அடைக்கச் செய்து விடுவார்!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரம், கிராமம் என்று அவர் தெரிந்து வைத்திருந்ததுபோல், அங்கே கட்சிப் பொறுப்பில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் குலங்கோத்திரத்தோடு தெரிந்து வைத்திருப்பார். யாரைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று அவர்களின் நாளாசரி நடவடிக்கைகளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து வைத்திருப்பார்.


தேர்தலில் நிற்கக் கட்சியில் பணம் கட்டி இடங்கேட்கும் அவலநிலை அவர் காலத்திலில்லை. கருணாநிதியிலிருந்து விஜயகாந்த் வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் தன் கட்சியினர் ஒவ்வொருவரிடமும் கேட்கின்ற முதற் கேள்வி, "நீ தேர்தலில் எவ்வளவு செலவழிக்க முடியும்?'


காமராஜ் இப்படி ஒரு அருவருக்கத்தக்க கேள்வியை யாரிடமும் கேட்டதில்லை. ஒருவன் தேர்தலில் ஐந்து கோடி செலவழிக்க முடியும் என்றால், தேர்தலில் வெற்றி பெற்று வந்தபின், அவன் அந்தப் பணத்தைப் போல் ஐம்பது மடங்கைத் தேடிக்கொள்ள நினைப்பதை எப்படித் தடுக்க முடியும்? ஒருவன் ஐந்து கோடி செலவழித்தா மக்கட் பணி ஆற்ற வருவான்?


எத்தகைய போக்குகளை அனுமதித்தால், எத்தகைய பின் விளைவுகள் ஏற்படும் என்று சிந்திக்கும் திறன் காமராஜ் போன்ற இயற்கை அறிவினர்க்கு நிறையவே இருந்தது!


காமராஜுக்கு ஒரு தனிச்செயலர் இருந்தார். அவர் பெயர் வெங்கட்ராமையர். கதர் வேட்டி சட்டையைத் துவைத்துத்தான் போட்டுக் கொள்வார். சலவை செய்து போட்டுக் கொள்ளச் சம்பளம் இடம் கொடுக்காது என்பார்.


எத்தனை தொழிலதிபர்கள் இவர் வழியாகத் தொழில் உரிமம் பெற்று வளம் கொழித்திருப்பார்கள்! அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சிறு சலனமாவது இந்த வசதிக் குறைவானவருக்கு ஏற்பட்டதுண்டா?


பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒருவரின் தனிச் செயலர் சாகும்போது, எம்.ஜி.ஆர். அவருடைய நிலைமை தெரிந்து வழங்கிய லாயிட்ஸ் அரசுக் குடியிருப்பில் 250 ரூபாய் வாடகை வீட்டில் குடி இருந்துவிட்டு இறந்து போனார்!


உயிர் குடியிருக்க வந்த கூடே சொந்தமில்லாமல் வெந்து போகிறபோது, தான் குடியிருக்கச் சொந்தமாக ஒரு வீடில்லாதது அவருக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை!


""ஒரு பெண் தன் கற்பைக் காத்துக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பது போல, பெருமையும் கருதிக் கருதிக் காத்துக் கொள்ளப்பட்டால் உண்டு; இல்லை என்றால் இல்லை'' என்பான் வான்புகழ் வள்ளுவன்.


ஒரு தனிச் செயலரின் பெருமையே இத்தகையது என்றால், அவனுடைய தலைவனின் பெருமை எத்தகையதாய் இருக்கும்!
இன்றைய அமைச்சர்களின் தனிச் செயலர்களின் பணங்களை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்குத் தமிழ்நாட்டில் வரிப் போடாமல் ஆட்சி நடத்தலாம்!
நம்முடைய அமைச்சர்களின் பணங்களை எல்லாம் பறிமுதல் செய்தால், ஆறு மாதங்களுக்கு இந்தியாவையே வரிப் போடாமல் ஆட்சி நடத்தலாம்!


காமராஜ் நாட்டின் விடுதலைக்காகப் பத்தாண்டுகள் சிறையில் தவமிருந்தவர். நாட்டின் மேன்மைக்காகப் பத்தாண்டுகள் கோட்டையில் கோலோச்சியவர்!


ராஜாஜி கல்விக் கொள்கையில் குளறுபடிகள் செய்ய நேரிட்டு விட்ட போது, அந்த முதலமைச்சர் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரவும் காமராஜுக்குத் தெரிந்திருந்தது.
பத்திருபது ஆண்டுகள் தொடர்ந்து பதவிக் கள்ளை உண்டு விட்டபடியால் போதை தலைக்கேறிய பல காங்கிரஸ் அமைச்சர்களைப் பதவியை விட்டு இறக்குவதற்கு, "கே' பிளான் என்று ஒன்றை அறிவித்து, எந்த அவப்பெயரும் இல்லாத தான், ஆட்சி நாற்காலியை உதறிக்காட்டி, மற்றவர்களைப் பதவி விலகச் செய்து, நேருவின் ஆட்சி இயந்திரம் திறம்பட உருள வழி செய்யவும் அவருக்குத் தெரிந்திருந்தது!


சீதையின் கேள்வன் ராமனைப் போல், காமராஜுக்குப் பதவி ஒரு பேறும் இல்லை; பதவியின்மை ஓர் இழப்பும் இல்லை.
அதுவும் ராஜாஜிக்குப் பிறகு நாடாள்வது எளிதில்லை. பரிந்துரைகளுக்காகத் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, உங்களுக்கெல்லாம் தலைமைச் செயலகத்தின் தாழ்வாரங்களில் என்ன வேலை என்று கேட்டவர் ராஜாஜி. விற்பனை வரியைப் புகுத்தியவர்; இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்நாட்டில் குடியை முதன் முதலாகக் குற்றமாக அறிவித்தவர்; ஈடு இணையற்ற படிப்பாளி; இவர் தேறாத நூலுமில்லை; தெளியாத பொருளுமில்லை; பெரிய இலக்கியவாதி; ராஜதந்திரி! மணியம்மையை மணந்து கொள்ளலாமா வேண்டாமா என்று பெரியார் பிறவிப் பகைவரான ராஜாஜியிடம் போய் யோசனை கேட்டாரென்றால், எவ்வளவு மனச்சமநிலை உடையவராக ராஜாஜியைப் பெரியார் கருதியிருக்க வேண்டும்!


அவ்வளவு பெரிய ராஜாஜியைக் கீழே இறக்கவும், அவருடைய நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு நாடாளவும் எவ்வளவு பெரிய மனத்திறன் வேண்டும்! காமராஜின் பத்தாண்டு கால ஆட்சி ராஜாஜியை மறக்கடித்து விட்டது என்பதுதான் அவருடைய ஆட்சியின் மாபெரும் சிறப்பு!


தமிழ்நாட்டின் கல்வியைச் சுருக்கித் தன்னுடைய புகழை அந்த ஒன்றில் மட்டும் விதிவசமாகச் சுருக்கிக் கொண்டுவிட்டார் ராஜாஜி.


தமிழ் இளைஞர்கள் உலக அளவில் போட்டியிடக் கல்வியறிவு பெறுவது எல்லாவற்றினும் தலையாயது என்பதைத் தன்னுடைய இயற்கையறிவு கொண்டு உணர்ந்த காமராஜ் ஊர்தோறும் பள்ளிகளைக் கட்டினார். ஆடு மேய்க்கச் செல்லுகின்ற பிள்ளைகளைப் பள்ளிக்கிழுக்கப் பகலுணவு அளித்தார். எம்.ஜி.ஆர். பெரும்புகழ் பெறக் காரணமான சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜ்தான்!


கையளவு நீர் மேட்டிலிருந்து பள்ளத்தில் பாய்ந்தாலும், அங்கே நீர்மின் நிலையம் தோன்றிவிடும் காமராஜ் காலத்தில்!
பின்னால் வந்த கருணாநிதி மின் உற்பத்தி செய்யாமல் கம்பி மட்டும் நீட்டுகிறார் என்பதைக் காமராஜ், ""கம்பி நீட்டப் போகிறார் கருணாநிதி'' என்று நகையாடினார்!


முந்தைய ராஜாஜி ஆட்சியோடு ஒப்பிடப்பட்டுக் ""கல்விக் கண் திறந்த காமராஜ்'' என்று போற்றப்பட்டார்!


பிந்தைய கருணாநிதி ஆட்சியோடும் ஒப்பிடப்பட்டு, ""படிக்கச் சொன்னார் காமராஜ்; குடிக்கச் சொன்னார் கருணாநிதி'' என்னும் வழக்கு மக்களிடையே வழங்கி நிலைபெரும் அளவுக்குக் காலந்தோறும் காமராஜ் புகழ் பெருகியது!


நாட்டின் விடுதலைக்காகச் சிறையிலிருந்த காமராஜ், நாடே இந்திராவால் சிறைக் கூடமாகிவிட்டது கண்டு பதறிவிட்டார்!
வெள்ளைக்காரனிடமிருந்து பெரும்பாடு பட்டு விடுதலை பெற்று, நம் கண் முன்னாலேயே சொந்த நாட்டுக்காரியிடம் அந்த விடுதலையைக் தோற்று விட்டோமே என்னும் கவலை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னத் தொடங்கியது.


பேச்சுச் சுதந்திரமில்லை; எழுத்துச் சுதந்திரமில்லை; கூட்டம் கூடுகிற சுதந்திரமில்லை; தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்திப் போராடச் சுதந்திரமில்லை; இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்!
இந்திராவின் தேர்தலைச் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், பிரதமர், தேர்தல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவராகச் சட்டம் திருத்தப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட்டது.


ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள், ஸ்டாலின் காலத்து ரஷ்யா போல, நள்ளிரவில் தாக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர்.


தனக்கேற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கேற்பட்ட நெருக்கடியாக்கி, எல்லாச் சுதந்திரங்களையும் பறித்து விட்டார் இந்திரா!
தான் வழி நடத்திய பழைய காங்கிரசைக் கருத்து வழிப்படுத்தி, அதனை இந்தச் சுதந்திரப் பறிப்புக்கு எதிராக அணி வகுக்கச் செய்து, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த எண்ணிய காலை, கிருபளானி போன்றவர்களின் அடுத்தடுத்த கைதுச் செய்திகள் காமராஜ் மனம் உடைந்து மரணமடையக் காரணமாயிற்று!
நாம் நாற்காலியில் ஏற்றி வைத்த ஒரு பெண், நாற்காலிதான் பெரிதென்று நாட்டை நாசமாக்கி விட்டாரே என்பதுதான் அவர் மன உடைவுக்குக் காரணம்!


அடிமை இந்தியாவில் பிறந்தார்;
சுதந்திர இந்தியாவில் கோலோச்சினார்;
மீண்டும் அடிமை இந்தியாவில் மறைந்தார்!
அன்னையின் விலங்கொடித்து அன்னியனை விரட்டினார்!


இன்னொரு அன்னையால் பாரத அன்னை விலங்கிடப்பட்ட காலை, மனம் உடைந்து மரணமடைந்தார்!
நாடு குறித்துத் தவிர அவருக்கென்ன தனிக் கவலை இருக்க முடியும்? அவர் உயிர்வாழ ஒரு நாள் முழுவதற்கும் தேவை ஆழாக்கு அரிசி; ஒரு நான்கு முழ வேஷ்டி; ஒரு தொளதொளத்த சட்டை; ஒரு மேல் துண்டு; படிப்பதற்கொரு கண்ணாடி; காலுக்கொரு செருப்பு!


ஒரே உறவினளுமான தாயும் இறந்து விட்டாள்! அவருக்கென்ன கவலை?
தலைமாட்டில் உட்கார்ந்து அழ மனையாளோ, கால்மாட்டில் உட்கார்ந்து அழ மக்களோ இல்லாதவர் அவர்!
அதனால் அவருடைய மரணத்தில் நாடே அழுதது; வானமும் அழுதது!


தாய் மகிழத் தான் மட்டும் வீறிட்டு அழுது கொண்டு பிறந்தவன், நாட்டை வீறிட்டழ வைத்து விட்டுத் தான் அமைதி கொண்டு விட்டான்!


காமராஜால் பண்படுத்தப்பட்டு, வார்த்தெடுக்கப்பட்ட அன்றைய இளைஞர்கள், இந்தக் கட்டுரையாசிரியர் உள்பட, இன்று நடுவயதை அடைந்து புரப்பாரில்லாமல் நாசமாகிப் போனார்கள்!
ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜ் என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்துப் போய் விட்ட நிலையில், நாடு வெறுமை அடைந்து விட்டது!


கோல மயில்கள் குதித்தாடிய நாட்டில், வக்கரித்த வான்கோழிகள் கொக்கரிக்கின்றன! பண்பட்ட அரசியல் போய் பாழ்பட்ட அரசியல் வந்துவிட்டது!


காந்தி, காமராஜ் காலங்களில் அயோக்கியர்களாக இருந்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருந்தார்கள்!
இன்று யோக்கியர்களாக உள்ளவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருக்கிறார்கள்!


அறிவும், அடக்கமும், எளிமையும், நேர்மையும் குடிகொண்டிருந்த பொதுவாழ்வில், பதவிக்கும் பணத்துக்கும் பல்லிளிப்பதும், பகட்டும், வஞ்சமும், அடுத்துக் கெடுப்பதும் பெருகிவிட்ட பிறகு நாடு வேறு எப்படி இருக்க முடியும்?


இந்த லட்சணத்தில் அண்ணா அறிவாலயத்தை மேற்பார்வை முகவரியாக்கிக் கொண்டுள்ள நாலாந்தரக் காங்கிஸ்காரர்கள் கருணாநிதியை நடுநடுவே மிரட்டுவதற்காகக் "காமராஜர் ஆட்சியை அமைப்போம்' என்று இடையிடையே மிரட்டுகிறார்கள்! கருணாநிதி பனங்காட்டு நரி!


கருணாநிதியின் கைப்பைக்குள் இருக்கிற பீட்டர் அல்போன்ஸýம், பனை வாரியம்தான் விதி நமக்கு விட்ட வழி என்று அமைதி கொண்டு விட்ட குமரிஅனந்தனும், வீரபாண்டியார் வெள்ளை வீசினால்தான் வெல்ல முடியும் என்னும் நிலையிலுள்ள தங்கபாலுவும், காமராஜ் உயிரோடிருந்த காலத்தில், "அவர் சோசலிசவாதியே அல்ல; பிற்போக்குவாதி என்றெல்லாம் காமராஜ் குறித்து இடக்காகப் பேசிவிட்டு, இன்று பன்னாட்டு முதலாளிகளின் பாதக்குறடுகளுக்கு மெருகெண்ணெய் பூசிவிடும் ப.சிதம்பரமும் எப்படிக் காமராஜ் ஆட்சியை அமைக்க முடியும்?
தனக்கு எந்த உடைமையுமில்லை; தனக்கு எந்த உறவுகளுமில்லை என்னும் நிலையிலேயே மக்களைச் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளும் தன்மை பிறக்கும்!
ஒரு காமராஜ் உருவாக இவ்வளவு பின்னணி வேண்டும்!
தமிழ்த்தாய் ஈன்ற தவமகன் அவன்

Saturday, July 11, 2009

வாமணன்


சுப்ரமணியபுரம் நாயகன் 'ஜெய்' நடித்து வெளிவந்திருக்கும் படம் வாமணன். Action cum thriller படத்தை தர எத்தனித்து, அந்த முயற்சியில் தோல்வி அடைந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அகமத். (அட மொக்கைனு சொல்ல வரம்பா). கதை தேர்வு ஜெய் க்கு மிக முக்கியம். அறிமுக நாயகி ப்ரியாவும் ஒன்னும் சொல்வதற்கில்லை. லக்ஷ்மி ராய் மட்டும் வாங்கிய பணத்திற்கு நன்றாகவே நடித்திருக்கிறார்

இசை மிக பெரிய சொதப்பல்.டெல்லி கணேஷ்,சம்பத் போன்றவர்கள் மிக சரியாக வீனடிக்க பட்டிருக்கிறார்கள். நீயா நானா கோபிநாத் சின்ன திரையுடன் நின்று கொண்டால் தேவலாம். படத்தை கொஞ்சம் தூக்கி பிடிக்க முயற்சிப்பவர் sandhaanam மட்டுமே.


எனது மதிப்பீடு : 3/10

விகடன் கடிதம் 2

தொடர்ச்சி...

எம்.ஜி.ஆர். நாலு கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துப் பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ''இந்தச் சண்டையை நடத்துவதே எம்.ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும் வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான் போராளி இயக்கங்கள் 'நம் பின் னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன.

''கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதி களாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப்போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால் கோபமான பௌத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப் பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா?

''இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதைஎல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?'' என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல் பேச்சு பேசாமல் இருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே?

இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தைவிட அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும் எஸ்.டி.சோமசுந்தரமும் பேசினார்களே! 'இந்தியா படை எடுக்க வேண்டும்', 'ஜெயவர்த்தனாவைத் தூக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இதை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக்கொடுத்தார்கள். புறநானூற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே சொன்னார், ''அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாகப் பேச வரவில்லை.''
பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந் தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ''மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும் வேண்டாத வீரமாகத் தெரிகிறது.

பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று! முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, 'சிங்களர்களைக் கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங் கைத் தூதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? வெள்ளை பாஸ்பரஸ் தூவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டு இருக்கும்போது, 'உங்கள் அதிகாரத்தை வைத்துத் தடுக்கக் கூடாதா?'' என்றால், 'என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக்கழித்தீர்கள். ''போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்றபோதும் மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக்கொண்டபோது காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது 'மத்திய அரசு என்ன செய்ய முடியும், சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டித் தட்டிவிட்டீர்கள்.

நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றத்தை உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக் கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சித்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கிவிடுங்கள்!

இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன?
''மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து.''

தமிழீழம் குறித்து உங்களது கருத்து என்ன?
''இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து தான் என் கருத்து''.

பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்?
''ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.''

உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா?

'தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போலத் தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில் நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். எட்டுத் தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? 'நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களைத் தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என்று கோத்தபய ராஜபக்ஷே சொன்ன பிறகும், காங்கிரஸைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க முடியாமல், உங்களைப் பிடித்து இழுத்தது எது? அல்லது யார்?
''நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடி யும்?'' என்று ஈழத் தந்தை செல்வாவிடம் இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக்கொண்டு, மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு கடைசிக் காலத் திலும் கருவறைப் போராட்டம் நடத்திய 'தமிழின அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூடப் பார்க்காத அடிமை அவர்.

ஆனால், நீங்கள் ஐந்தாவது முறை யாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்க ளது ஆட்கள் மத்திய லகானைச் சுழற்றி வந்திருக்கிறார்கள். சோனியா உங்களைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். கேட்ட பதவிகள் கிடைக்கின்றன. மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில்தான் லேண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என் றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணா வும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்குக் காட்டிக்கொடுக்கிறீர் கள்.

எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத் தீவைத் தாரை வார்க்கும்போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும் 'விரும்பினால்தான் தண்ணீர் தருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது.

தெற்காசியாவின் அதிசயமாக பென்னி குக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப் பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. முதலமைச்சர் அச்சுதானந் தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லி விடாதீர்கள். பாலாறு பிரச்னையைக் கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமரப் பேசலாம். எந்தத் தேதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரை முருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது.

''பஞ்சாப் பாஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லூரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகைஈரமா கவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... அதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச் சரத்தில் நெருடுகிறது...

ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் 'நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?

அன்புடன்,
ஈர விறகாக இருக்க முடியாத,
அரசியல் அறியாத் தமிழன்!

விகடன் கடிதம் 1

முதல்வருக்கு விகடன் எழுதிய கடிதம்...

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.

'நீ இன்றி நான் இல்லை' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ''கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்'' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்க ளுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை.

அதிருக்கட்டும்...
''போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!'' என்று கோவில்பட்டியிலும்...

''உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள் ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும் ஒரு காலத் தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான்.

சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப் பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன்.

''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல்அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு!

30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் 'தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!

Tuesday, July 7, 2009

தபுசங்கர் மொழி


நான் ரசித்த டாப் 3 தபுசங்கர் கவிதைகள்


எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்......?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,

போதும்!



'என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்றுவிடுகிறாய்?'
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!








உனக்கு வாங்கி வந்த

நகையைப் பார்த்து'

அய்......எனக்கா இந்த நகை'

என்று கத்தினாய்.
நகையோ,
'அய்......எனக்கா இந்தச் சிலை'

என்று கத்தியது.

இயற்கை - நமக்கு இரு கை

இயற்கையின் மாறுதலை நமக்கு முகத்தில் அறைவது போல் சொல்லும் புகைப்படங்கள்.
















பட்ஜெட் 09-10

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
வரிகள்
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.25 லட்சத்திலிருந்து 2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* பெண்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.1.80 லட்சத்திலிருந்து ரூ.1.90 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* ஏனையோருக்கு தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
* தனிநபர் வருமான வரி விதிப்பில், சர் சார்ஜ் 10 சதவீதம் தள்ளுபடி
* நேரடி வரி வருவாய் 56 சதவீதமாக உயர்வு
* சிறுதொழில் நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு.
* கார்ப்பரேட் நிறுவன வரி விதிப்பில் மாற்றமில்லை.
* ஏற்றுமதி கடன் உறுதியளிப்புத் திட்டம் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு
* பயோ டீசலுக்கான சுங்க வரி குறைப்பு.
* வரி விதிப்பில் சீரமைப்பு செய்வதை அரசு உறுதிப்பூண்டுள்ளது.
* 2010 ஏப்ரல் 1 முதல் சுங்க மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படும்.
* புதிய வரிக் கொள்கை 45 நாட்களில் அமைக்கப்படும்.
* பெண்களுக்கான பிராண்டட் ஆபரணங்களின் விலை குறைகிறது.
* செல்பேசி சாதனப் பொருட்கள் விலை குறைகிறது.
* இதய நோய்களுக்கான மருந்துகளின் விலை குறைகிறது.
* செட்-டாப் பாக்ஸ்சுக்கு சுங்க வரி 5 சதவீதம் அதிகரிப்பு. இதனால், அப்பொருளின் விலை அதிகரிக்கிறது.
அரசு எதிர்நோக்கும் சவால்கள் :
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இளைய சமுதாயம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து அரசு முனைப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது.
* சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, வலுவான திட்டங்களை வகுத்து செயல்பட அரசு உறுதிபூண்டுள்ளது.
* நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருத்தில் கொள்ளப்படுகிறது. மீண்டும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்.
* 1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்
* வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை
* ஒரே பட்ஜெட் மூலம் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது.
* கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
* சேவை வர்த்தகத்தில் 2008-ம் ஆண்டில் இருமடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
* அன்னிய முதலீடு வெகுவாக அதிகரித்துள்ளது.
* மாநில அரசுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
* உலக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டு காலாண்டுகளின் முடிவின் நிதிநிலை சற்றே மோசமடைந்துள்ளது.
கட்டுமானம்
* உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு
* கட்டுமான நிறுவனங்களுக்கு உதவ ஐ.எஃப்.எஃப்.சி.எல். அமைக்கப்பட்டுள்ளது.
* வங்கிக் கடன்களால் நெருக்கடி நிலையிலுள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு ஐ.எஃப்.எஃப்.சி.எல் 60 சதவீத நிதியுதவி அளிக்கும்.
* ரயில்வே துறைக்கு ரூ.15,800 கோடி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிப்பு
வேளாண்மை
* வேளாண்மைத்துறைக்கு ரூ. 3.35 லட்சம் கோடி ஒதுக்கீடு
* உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளின் கடனுக்கு 1 சதவீதம் வட்டி குறைப்பு
* நீர்ப்பாசனத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
* உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கப்படும்
* விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
* நாட்டில் 60 சதவீத மக்கள் வேளாண் தொழில் புரிகின்றனர்.
* வேளாண் கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துபவர்களுக்கு 6 சதவீத கடன்.
* மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பிரச்னைக்கு தீர்வு.
* மழை நீர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயர்வு.
* 2009-10 நிதியாண்டுக்கான வேளாண் கடன் இலக்கு ரூ.3,25,000 கோடியாக உயர்த்தப்படுகிறது.
* வேளாண் கடன் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
* ராஜீவ் காந்தி ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
நலத் திட்டங்கள்
* பெண்களின் எழுத்தறிவு சதவீதத்தை 3 ஆண்டுகளில் 2 மடங்காக்க நடவடிக்கை
* ஏழைகளுக்கு ரூ. 3 க்கு 1 கிலோ அரிசி, கோதுமை
*கிராமப்புற வீட்டு வசதி மேம்பாட்டிற்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு
* வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.100 ஆக உயர்வு
* பத்திரிகை துறைக்கான சலுகைகள் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு
* நகர்புற ஏழை மக்களின் குடியிருப்புக்காக ரூ.3,973 கோடி ஒதுக்கீடு.
* மும்பை வெள்ள நிவாரண மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு.
* 2010 மார்ச் வரை ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டம் நீட்டிப்பு.
* வங்கி, காப்பீடு நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாகவே நீடிக்கும்.
* வங்கித்துறையில் விரிவாக்கம்.
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து திட்டங்களில் 'ஆம் ஆத்மி' திட்டம் இடம்பெறும்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 4,479 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.39,100 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 144 சதவீத உயர்வு.
* பிரதமரின் கிராம சேவை யோஜ்னா திட்டத்துக்கான ஒதுக்கீடு 57% உயர்வு.
* இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்துக்கான ஒதுக்கீடு 8,883 கோடியாக உயர்வு.
* ராணுவத்தை பலப்படுத்த ரூ.1,41,703 கோடி ஒதுக்கீடு. இது கடந்த நிதி ஆண்டை விட 34 சதவீதம் அதிகம்.
* குடிமக்களுக்கு புதுமையான அடையாள அட்டை இன்னும் 12 முதல் 18 மாதங்களில் நடவடிக்கை தொடங்கும்.
* ராணுவ வீரர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகபடுத்தப்படும்
* பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயத்துக்கு நிபுணர் குழு அமைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த எரிசக்தி சட்டத்தின்படி எரிசக்தி சேமிப்பு.
* பெண் கல்விக்கு தனித் திட்டம்.
* தேசிய வீட்டுக்கடன் வங்கிகளின் கீழ் ஊரக வீட்டுக் கடன் நிதிக்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு.
* ரூ. 1 லட்சம் அளவிலான வீட்டுக்கடனுக்கு உதவி.
* கல்விக் கடன் வட்டிக்கு உதவி.
* தேசிய வேலைவாய்ப்பு மையங்கள் நவீனமாக்கப்படும்.
* வானிலை மாற்றத்துக்கு தேசிய அளவில் செயல் திட்டம்.
* முன்னாள் ராணுவத்தினருக்கு ஒன் ராங்க், ஒன் பென்ஷன் திட்டம்.
* தேசிய கங்கை திட்டத்துக்கு ரூ.562 கோடி ஒதுக்கீடு.
* இலங்கை தமிழர்கள் நிவாரண உதவிகள் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* சண்டிகர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* காமன்வெல்த் ஒதுக்கீடு ரூ.16,300 கோடியாக உயர்வு.
* ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களுக்கு ரூ.2,113 கோடி ஒதுக்கீடு.
* மேற்கு வங்க 'அய்லா' புயல் நிவாரணத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
* 2009-10-ம் நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.10,28,03 கோடி.
* பட்ஜெட் பற்றாக்குறை 2.7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்வு
* பட்ஜெட்டில் திட்டமிடப்படாத செலவுகளுக்கு 3.9 கோடி ஒதுக்கீடு

Monday, July 6, 2009

நாடோடிகள்


சுப்ரமணியபுரம் இயக்கிய சசிகுமார் நடிக்க, அதில் நடித்த சமுத்திரகனி இயக்கிய படம் நாடோடிகள். ' நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே' என டைட்டில் கார்டிலேயே கதையை சொல்லி விடுகிறார் இயக்குனர். சசிகுமார்,பரணி,விஜய்,அபிநயா,அனன்யா என நடிகர்கள் அனைவரும் பாத்திரங்களில் அழகாக பொருந்துகிறார்கள். சசிகுமாரின் அத்தை மகளாக வரும் அபிநயா வாய்பேச காதுகேள முடியாதவராம். அற்புதமாக நடித்ததற்கு பாராட்டுக்கள். வேகமாக நகரும் திரைகதையை மிக நேர்த்தியாக தந்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் தவிர பட்டையை கிளப்பியிருக்கும் மற்றொரு நபர் இசைஅமைப்பாளர் சுந்தர்.சி.பாபு . சித்திரம் பேசுதடி,அஞ்சாதே போன்ற படங்களே இவரது இசைக்கு சான்று. இடைவேளைக்கு முன்னால் அந்த பத்து நிமிடங்கள் (சம்போ) அருமை . இது போல் இடைவேளை தமிழ் சினிமாவில் முதல் முயற்சி.

இறுதியாக படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்கு ஒரு கைத்தட்டல். சன்,விகடன் போன்ற நிறுவனங்கள் இது போல படங்களை தயாரித்தால் தமிழ் சினிமாவை உலகம் நிச்சயம் திரும்பி பார்க்கும்.


எனது மதிப்பீடு : 7/10

Saturday, July 4, 2009

கூட்டுப்பண்ணை


தின சரியில் வந்த ஒரு செய்தி உங்கள் கண்ணோட்டத்திற்கு...

ரஷியாவில் புரட்சி நடந்து கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயத்திலும் தொழில் வளர்ச்சியிலும் அந்த நாடு படைத்த சாதனைகள் உலக நாடுகளை, அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற ஏழை நாடுகளை வெகுவாக ஈர்த்தன. நாமும் அவர்களைப் போலச் செயல்பட்டு நாட்டின் விவசாய உற்பத்தியையும் தொழில்துறை உற்பத்தியையும் பெருக்க வேண்டும் என்ற பேரவா நமது தலைவர்களுக்கு ஏற்பட்டது.

கூட்டுப்பண்ணை முறையால் சாகுபடி அதிகரிக்கும், உற்பத்தித்திறன் பெருகும் என்று கருதியதால் மக்களிடையே அதைப் பிரசாரம் செய்து இயக்கமாகவே கொண்டுவர விரும்பினார்கள். நாட்டின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய வளர்ச்சிக்கு முழு அக்கறை செலுத்தப்பட்டது.

பாசன வசதிகள் பெருக்கப்பட்டன. விதைப்பண்ணைகள் உருவாக்கப்பட்டன. உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் விவசாயத்தை ஒரு பாடமாகவே கற்றுத்தர முயற்சிகள் தொடங்கின. விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயக் கல்லூரிகளும், செயல்விளக்கப் பண்ணைகளும் ஏற்படுத்தப்பட்டன. வேளாண்விரிவாக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், கடன் வசதி ஆகியவை ஒருங்கே கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விவசாயிகளின் விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. விவசாயப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய மார்க்கெட் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டன.

இத்தனை செய்தும் விவசாயம் என்பது லாபகரமான தொழிலாகவே இல்லாமல் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் பாரம்பரியமாக விவசாயம் செய்த குடும்பங்களில் சந்ததி பெருகப்பெருக நிலங்களைப் பங்கு போட்டு அவை இப்போது குறுகிக்கொண்டே வந்து, கட்டுப்படியாகக்கூடிய சாகுபடி என்று எதையுமே செய்ய முடியாத அளவுக்கு நிலங்கள் சுருங்கிவிட்டன. அடுத்தது வேளாண் பணிகளுக்குக் கூலி ஆள்கள் கிடைப்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆண்டு முழுவதும் வேலையும் இல்லை, வேலைக்கு ஏற்ற கூலியும் இல்லை என்பதால் விவசாயத் தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்குப்போக ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நிலையில்தான் கூட்டுப்பண்ணை விவசாயத்தை மீண்டும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் ஆந்திர மாநில அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக புதிய திட்டம் ஒன்றை அது வகுத்திருக்கிறது. இதன்படி விவசாயிகள் இணைந்து தங்களுக்குள் ஒரு சங்கத்தையோ நிறுவனத்தையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவரவர்களுடைய நிலங்களை இந்த சங்கத்துக்கு அளிக்க வேண்டும். நில அளவுக்கேற்ப, இன்றைய சந்தை மதிப்பில் மதிப்பு கணக்கிடப்பட்டு அவர்களுடைய கணக்கில் ""மூலதன முதலீடு'' பற்று வைக்கப்படும். பிறகு நிலங்களில் வரப்புகளை நீக்கி, பெரும் பண்ணையாக மாற்றி பொதுவான முடிவுகளின் கீழ் விவசாய வேலைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பண்ணைக்குத் தேவைப்படும் கடனை வங்கிகளிடமிருந்து பெற, தொடக்க காலத்தில் மாநில அரசே கணிசமான தொகையை சங்கத்துக்கு மானியமாக வழங்கும். சங்கம் தனக்காக கிடங்குகளைக் கட்டிக்கொள்ளும். எல்லா விவசாயப்பணிக்கும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். வேளாண் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்களின் உதவி சாகுபடிக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும். விளைச்சலை விற்பனை செய்ய நவீன சந்தைப்படுத்தல் தொழில்நுட்பங்கள் கையாளப்படும். லாபம் அவரவர் பங்குக்கு ஏற்ற வகையில் பிரித்துக் கொள்ளப்படும்.

இதைச் சொல்வது எளிது, செயல்படுத்துவது கடினம். ஆனால் தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனைகளும் சங்க உறுப்பினர்களின் தீவிர ஈடுபாடும் இணைந்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் இருக்கிறது. இதற்காக ஓரிரு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது வெற்றிகரமாக அமைந்தால் ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இது விரிவுபடுத்தப்படும். தோல்வியில் முடிந்தால் நிலம் கொடுத்தவர்களுக்கு அவரவர் நிலங்கள் திருப்பி வழங்கப்படும், சங்கம் கலைக்கப்படும், இழப்பை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

இந்த சங்கத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர் எவராவது இடையில் விலக விரும்பினால், தன்னுடைய பங்கு நிலத்தை பிற உறுப்பினர்களுக்கு விற்றுக்கொள்ளலாம். இந்த சங்கத்தின் நடவடிக்கைகளில் மாநில அரசின் குறுக்கீடு மிகவும் குறைவாகவும், ஆதரவு பெரும் அளவிலும் இருக்கும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது. நிலங்களுக்கு மதிப்பை நிர்ணயிப்பது முதல் சாகுபடியைத் தீர்மானிப்பது, சந்தையில் விற்பது போன்ற அனைத்துச் செயல்களும் வெளிப்படையாகவே நடைபெறும்.

ஆந்திர முதலமைச்சரின் பொருளாதார ஆலோசகரும், மாநில வேளாண் தொழில்நுட்ப இயக்கத்தின் துணைத் தலைவருமான டி.ஏ. சோமயாஜுலு இந்த கூட்டுப்பண்ணை விவசாயத் திட்டத்தில் பெரும் ஆர்வம் காட்டுகிறார். விவசாயிகளுக்கு விவசாயத்தில் கிடைக்கும் வருவாய் குறைந்துவருவதாலும், உற்பத்தித் திறன் அதிகரிக்காமல் தேக்க நிலையை அடைந்துவிட்டதாலும் இந்த முறையைச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.வாரங்கல், கரீம்நகர் மாவட்டங்களில் முல்கானூர் கூட்டுறவுச் சங்கத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளும், நிஜாமாபாத் மாவட்டத்தில் அங்காபூர் கிராமத்தில் நடந்த கூட்டுறவு முயற்சிகளும் அடைந்த வெற்றியால் உந்தப்பட்டு இந்தச் சோதனையில் இறங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரத்தில் கிடைக்கும் வெற்றியைப் பொருத்து தமிழகமும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கலாமா?

மாயாண்டி குடும்பத்தார்


ஒரு typical கிராமத்து குடும்பத்தை வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் ராசு மதுரவன். பத்து இயக்குனர்கள் சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பதை விட மிரட்டி இருக்கிறார்கள் (தருண் கோபி நீங்கலாக) என்பதே உண்மை. அதிலும் சிங்கம்புலி, சீமான்,பொன்வண்ணன் போன்றவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். காலம் மாறி வரும் சூழ்நிலையில் இப்படி ஒரு மண்வாசனை கதையை, பெரிய நடிகர்கள் இல்லாமல் வெறும் இயக்குனர்களை வைத்தே தைரியமாக தந்ததற்கு பாராட்டியே ஆக வேண்டும்.

சபேஷ் முரளி ஓரிரு இடத்தில் பளிச்சிடுகிறார்.வேகமாக நகரும் திரை ஓட்டத்திற்கு பாடல்கள் வேக தடையே. படத்திலேயே நடிப்பிலும் சரி,expressions சரி , மொக்கை தருண் கோபி தான். மற்ற படி தமிழ் சினிமாவின் இன்றைய நிலைக்கு இது போன்ற படங்கள் வருவது மிக மிக இன்றியமையாதது.

எனது மதிப்பீடு : 6/10

Friday, July 3, 2009

ரயில்வே பட்ஜெட் 2009-10


2009-10-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள:

* பயணிகள் கட்டணத்தில் உயர்வு இல்லை.

* சரக்குக் கட்டணத்திலும் உயர்வு இல்லை.

* தட்கல் முறையில் பயணச் சீட்டு பெறும் முறையின் கால அளவு 5 நாடகளில் இருந்து 3 ஆக குறைப்பு.

* 67 புதிய ரயில்கள் விடப்படும்.

* சென்னை சென்ட்ரல் உள்பட நாட்டிலுள்ள 50 முக்கிய ரயில் நிலையங்கள் முழுக்க முழுக்க சர்வதேசத் தரத்துடன் அமைக்கப்படும்.

* ரயில் நிலைய மேம்பாட்டுக்கு தனியார் துறையுடன் இணைந்து அரசு செயல்படும்.

* அனைத்து ரயில்களிலும் மகளிருக்கு தனியாக கழிவறை வசதி செய்யப்படும்.

* நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் புத்தக கடைகள், பொதுத் தொலைப்பேசி வசதி செய்து தரப்படும்.

* உடல் ஊனமுற்றோருக்கு என பிரத்யேகமாக ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

* நீண்ட தூர ரயில்களில் மருத்துவர் ஒரு பணியமர்த்தப்படுவார்.

* நீண்ட தூர ரயில்களில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும்.

* மத தலங்களுக்கு முக்கியத்துவம் கொண்டுள்ள 49 ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்.

* ராஜ்தானி, ஷதாப்தி ரயில்களில் பயனுள்ள பொழுதுபோக்கு வசதி.

* 200 புதிய டவுன் மற்றும் நகரங்களில் டிக்கெட் வழங்கும் வசதி.

* 200 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் பட்டுவாடா எந்திரங்கள் வைக்கப்படும்.

* வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளின் நிலைகள் மற்றும் டிக்கெட் உறுதியாகவிட்டதா என்பதை பயணிகள் அறிய எஸ்.எம்.எஸ்.

சேவை அறிமுகம்.

* அஞ்சல் அலுவலகங்களில் ரயில் டிக்கெட் பெறும் வசதி.

* முக்கிய ரயில் மார்க்கங்களில் பெண் கமாண்டோக்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது.

* குரூப் 'பி' ரயில்வே பணியாளர்கள் தேர்வில், மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

* ரயில்வே பணியாளர்களுக்கான மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

* வர்த்தக பயனபாட்டுக்கு ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள் லீஸுக்கு விடப்படும்.

* உடல் ஊனமுற்ற பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், சிறப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படும்.

* மூன்று ரயில் நிலையங்களுக்கு இடையே மதிய உணவு பார்சல் சேவை பெறும் வசதி.

* ரயில்வே மொத்தச் செலவு ரூ.81,685 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

* குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கென 'லிஸாட்' என்ற புதிய மாதாந்திர ரயில்வே திட்டம். இதன்படி ரூ.25 ரூபாயில் ஒரு மாத பயணம் மேற்கொள்ளலாம். இது, நூறு கிலோ மீட்டர் பயணத்துக்குப் பொருந்தும்.

* பத்திரிகையாளர்களுக்கு டிக்கெட் விலையில் 50 சதவிகித சலுகை.

* கோல்கத்தா மெட்ரோ ரயிலில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சலுகை.

* கோல்கத்தா, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களுக்கும் பெண்கள் சிறப்பு ரயில்கள்.

* கோல்கத்தா மெட்ரோ ரயில்வே மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.

* ஹவுரா-மும்பை; சென்னை-டெல்லி; மும்பை-ஆமதாபாத்; டி்லலி -எர்ணாகுலம் இடையே உள்பட 12 புதிய பாயின்ட் டு பாயின்ட் ரயில்கள்.

தமிழகத்துக்கு 6 ரயில்கள்

* சென்னை - டெல்லி இடையே பாயின்ட் டூ பாயின்ட் ரயில்.
* கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்.
* மதுரை - சென்னை இடையே வாரம் இருமுறை ரயில்.
* கோவை-சொர்னூர் இடையே ரயில்
* திருநெல்வேலி-பிலாஸ்பூர்
* திருநெல்வேலி - ஹபா இடையே ரயில்

* அனைத்து மாணவர்களுக்கும் 60% பயணக் கட்டணச் சலுகை.

* 800 புதிய முன்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது.

* 309 ரயில் நிலையங்கள் நவீனபடுத்தப்படும்

* ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு

* பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.