Saturday, May 16, 2009

ஏமாற்றம்...

கடந்த ஒரு மாத காலமாக 5 கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வர தொடங்கிஉள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிகளை குவித்து வரும் நிலையில் எனது கருத்தை தெரிவிக்க முனைகிறேன்.

முதலில் மாநில நிலவரத்தை ஆராய்வோம். தி.மு.க காங் கூட்டணி மகத்தான வெற்றி அடைந்துள்ளது.தேசியம்,மாநிலம் என இரு இடங்களிலும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு மீண்டும் அரியணை ஏறி இருக்கிறார்கள். இலங்கை தமிழர்,மின்வெட்டு,தமிழக அரசு மீதுள்ள வெறுப்பு என அத்தனையும் தாண்டி மிக பிரமாதமாக வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

இரு முறை `சிறந்த நாடாளுமன்றவாதி' என விருது பெற்ற வைகோ தோல்வியடைய, அரசியலில் முன் அனுபவமே இல்லாமல் வெறும் ஆயுதத்தையும்,பணத்தையும் துணையாக கொண்டு முதல் முறையாக போட்டி இடும் அழகிரி,ரித்தீஷ் போன்றவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

தே.மு.தி.க. நாற்பது இடங்களில் தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் ஓட்டுகளை கனக்கட்சிதமாக பிரித்திருக்கிறார் என்பதே கண்கூடான உண்மை. (விருதுநகரில் தே.மு.தி.க. வேட்பாளர் பெற்ற ஒட்டு ஒரு லட்சத்திற்கு மேல்)இதன்மூலம் காங்கிரஸ் அரசாங்கம் அமைய விஜயகாந்த் மறைமுகமாக உதவினார் என்பது நிதர்சனம்.

5 ஆண்டுகாலமாக அமைச்சரவையில் அங்கம் வைத்து கொண்டு,ஒரு துரும்பை கூட அசைக்காமல், எல்லாம் முடிந்த பின் சரியாக தேர்தலுக்கு ஒரு வாரம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பெயரில் வெறும் ஆறு மணி நேரத்தில் முடித்து கொண்ட முத்தமிழ் கலைஞர்,தமிழின காவலர்,டாக்டர் கருணாநிதி மீண்டும் தனது அரசியல் சாணக்கியத்தை தொடங்க இருக்கிறார்.மாறன்,அழகிரி போன்றவர்கள் நிச்சயம் மத்திய அமைச்சர்களாக வலம் வருவார்கள். மீண்டும் கலைஞரிடமிருந்து ஈழம் பற்றிய கண்டனங்கள் வர தொடங்கும்.

தேர்தல் முடிவுகளை பார்த்தால் இலவச அறிவுப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்வதாகவே தெரிகிறது. மேலும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டளிக்கும் வழக்கமும் அதிகரித்துள்ளது.

இறுதியாக மாநிலத்தில் தி.மு.க. காங் கூட்டணி வெற்றி எனக்கு மிக பெரிய ஏமாற்றத்தையே அளித்துள்ளது.




அடுத்து தேசிய முடிவுகள்.காங்கிரஸ் சர்வ சாதாரணமாக ஆட்சி பொறுப்பில் ஏறும் என்பது தேர்தல் முடிவுகள் தரும் மிகத் தெளிவான பதில்.

விடுதலை அடைந்து 60 ஆண்டுகளில் சுமார் 55 ஆண்டுகள் நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது.விளைவு எதற்கெடுத்தாலும் லஞ்சம்,ஊழல். விரைவாக முடிவெடுக்கும் தெளிவான தலைமை இல்லாதது காங்கிரஸின் பலவீனம் என்றால்,தேசிய அளவில் சரியான எதிர் கட்சி இல்லாதது மிகப்பெரிய பலம
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைகள்,அணுகுண்டு சோதனை என சாதனைகள் பல செய்த போதிலும் மதசார்பு பா.ஜ.க.வின் மிகப்பெரிய மைனஸ்.
ஆட்சி பொறுப்பில் மாற்றம் இருந்தால் நல்லது என்பதே எனது கருத்து. எனவே தேசிய முடிவுகளும் எனக்கு மிக பெரிய ஏமாற்றம் .


ஏமாற்றம் ஏமாற்றம் என கூப்பாடு போடும் நான் தேர்தல் அன்று Loss Of Pay க்கு பயந்து ஒட்டு போடாமல் பெங்களூர் அலுவலகத்திலேயே இருந்து விட்டேன். ஒட்டு போடாமல் இருந்த மீதி 34% சதவீதத்தில் நானும் ஒருவன்.எனது இயலாமையை தார்மீகமாக ஏற்று மிகுந்த குற்ற உணர்வுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நானும் ஒரு சாமான்யன்.

No comments: