Wednesday, March 4, 2009
வெண்ணிலா கபடி குழு
வெண்ணிலா கபடி குழு பெயரே சொல்லிவிடுகிறது கபடி பற்றிய படம் என்று.
கூடவே கிராமத்து மண்வாசனையும் , அழகான காதலையும் சேர்த்து கபடி விளையாட விட்டுருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சிறு வயது வாழ்கையை சிறிய frame ல் காட்டி அழகாக தொடர்கிறது பெரிய frame ற்கு . விஷ்ணு,சரன்யா மோகன்,கிஷோர் என அத்துணை பேரும் செயற்கை தனமில்லாமல் இயற்கையாகவே நடித்துள்ளனர். தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள் இளமை துள்ளும் வகை. படத்தின் மிகப்பெரிய பலம் செல்வகணேஷின் இசை. 'சுப்ரமணியபுரம்' போன்றதொரு இனிமையான அறிமுகம் செல்வகணேஷ்.
நீளமான காட்சிகள் அதிகமுள்ளதால் அலுப்பு நிறையவே ஏற்படுகிறது. முடிவை மட்டும் சோகமாக வைக்க வேண்டும் என்பது ஏதோ வேண்டுதல் போல. ஏற்கனவே வந்த சென்னை 28, லகான்,சக்தே இந்தியா போன்ற சாயல் இருந்தாலும் 'வெண்ணிலா கபடி குழு' ரசிக்க வைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தரமான ஒரு படத்தை தயாரித்ததற்காக ஆனந்த் கே சக்கரவர்த்தியை பாராட்டலாம்.
இறுதியாக என் கருத்து : 6/10
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விமர்சனம் நன்று
Post a Comment