நம் அனைவருக்கும் தண்ணீரின் அருமை தெரியும். ஒரு காலத்தில் தண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது என்று டி.வி.யில் செய்தி வந்தால் அதைப்பற்றி ஒரே பேச்சாக இருக்கும்!!!
தற்போது நிலைமயே வேறு!! தண்ணீரை விலைக்கு அனைவரும் வாங்கும் நிலை!!!
ஆயினும், நம்மிடையே தண்ணீரைப் பற்றி நம்மிடையே என்ன விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது?
ஏதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறதா என்றால் வாயளவில்தான் உள்ளது.'பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்' என்கிற நிலையில்தான் உள்ளது!
தண்ணீர் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது!! தண்ணீர் சேமிப்பு முறைகளைக் கையாளவில்லையென்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுவர்!
ஆகையால், குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பைப்பற்றி அவசியம் அனைத்துப் பள்ளிகளிலும், வீட்டில் பெற்றோர்களும் சொல்லித்தர வேண்டும்!!
தண்ணீர் சேமிப்பு பற்றிய சில தகவல்கள்:
* ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம்.
அதேபோல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தினால், நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான்
தேவைப்படும்.
* கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம்.
* பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம்.
* வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால், அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள். அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம்.
* காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.
சுயநலம், அலட்சியப் போக்கு ஆகியவை இங்கு அதிகம்!!!
1. சாலையோரங்களில் பொதுகுடிநீர் குழாய் நிரம்பி ஓடிக்கொண்டு இருக்கும்!!!
2. தண்ணீர் 4 மணிநேரம்தான் வருகிறது என்றால், அதில் அடைக்கும் குழாய் பிடுங்கப்பட்டு இருக்கும்! தண்ணீர் தானே வந்து தானே நிற்கும்!!!
3. குடிதண்ணீரை சேமித்து குளிப்பது, தோட்டத்தில் பாய்ச்சுவது, கார் கழுவுவது!!
4. தண்ணீர் அதிகமாக வந்தால் ஹோஸ் மாட்டி கிணற்றுக்குள் தண்ணீர் வரும் வரை சேமிப்பது?(உண்மை!!)
இதையெல்லாம் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும்!!
நாடுகளின் எல்லைதாண்டிய நதிநீர், ஏரிநீர் பங்கீடு:
பலவேறு நாடுகளின் எல்லைப்பகுதி தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக பங்கிட்டு சிறப்பாக உபயோகப்படுத்துவது என்ற விழிப்புணர்வு தற்போது மிக அவசியமாக உள்ளது!
இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம்
தேதியை உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கிறது!
உலகின் 263 ஏரிகள், மற்றும் நாடுகடந்து ஓடும் ஆறுகள் 145 நாடுகளை இணைக்கின்றன! இது உலகின் மொத்த நில்ப்பரப்பில் பாதியாகும். அனைத்தும் குடிநீர்தான்! இதில் அடித்துக்கொள்ளாமல் சமாதானமாக பங்கிட்டுக்கொண்டாலே, நாம் எதிர்கால தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும்!
கடந்த 60 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான, உலக நாடுகளின் நாடுகடந்து பாயும் நதிநீர்ப்பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன!!! (ஆச்சரியம்) நம்மால் காவிரி, கோதாவரி பிரச்னையையே தீர்க்கமுடியலையே!
நேரமிருந்தால் இங்கே http://www.unwater.org/worldwaterday/flashindex.html செல்லவும்.
No comments:
Post a Comment