Wednesday, March 4, 2009

உண்மை அறி பாகம் 2



இந்த வலைபதிப்புக்காக நான் பல இணையங்களை வலை வீசி தேடினேன், சில சுறாகள் சிக்கின. அதில் ஒன்று OPEC.ORG (Organization of the Petroleum Exporting Countries) கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.அந்த வலையத்தை அலசிய போது, சில புள்ளி விவரம் என்னை வியக்க செய்தது! அதில் ஒரு பகுதி Who gets what from imported oil? இறக்குமதி கச்சா எண்ணையால் யாருக்கு லாபம்?


அவர்களுடைய ஆய்வு துறை (Research Division, OPEC, Vienna, Austria, 2001) செய்த ஆய்வில், கடந்த 1996 முதல் 2001 வரை உள்ள புள்ளிவிவரம்:


1. ஏற்றுமதி கச்சா எண்ணையால் OPEC நாடுகள் சுமார் $850 மில்லியன் சம்பதிக்கும் வேலையில் இறக்குமதி செய்யும் நாடுகள் (அரசுகள்) சுமார் $1.3 ட்ரில்லியன் (Trillion) (G7 நாடுகள் மட்டும்) வரியின் மூலம் சம்பாதிக்கிறது, OPEC நாடுகள் தங்கள் எண்ணை வளத்தை விற்று வருவாய் ஈட்டும் நேரத்தில் இறக்குமதி செய்யும் அரசுகள் வரியாக இருமடங்கு சம்பாதித்து விடுகிறது. இதில் இந்திய அரசும் சளைத்தவர்கள் அல்ல! இந்திய அரசும் UKக்கு இணையாக வரி விதிக்கிறது! இது என்ன கூத்து? இது பகல் கொள்ளையா? இதை படித்தபோது எனக்கு ஒரு பழமொழி ஞபகத்துக்கு வருது, சுண்டக்கா கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்பார்களே இது தானா அது? அட சுமை கூலினு கூட சொல்ல முடியாது இந்த வரியை, சுமை கூலி உழைபவனுக்கு கொடுக்கும் காசு. இந்த காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா?


2. G7 நாடுகளில் பெட்ரோல் விலை புள்ளி விவரங்கள்:அமெரிக்கா - ரூ 21கனடா - ரூ 21.6ஜப்பான் - ரூ 44.5 இங்லாந்து - ரூ 53.55என்று நீள்கிறது, இதில் வரியின் பங்கு தான் அதிகம். மேலே உள்ள படத்தில் அதன் Break-up உள்ளது பாருங்கள்! நீல நிறம் தான் கச்சா எண்ணை விலை, மஞ்சள் நிறம் கச்சா எண்ணையை பெட்ரோல் எடுப்பதற்காகும் செலவு, சிவப்பு தான் நம் அரசு நம்மேல் சுமத்தும் வரி!!!! இதில் இந்திய பெட்ரோல் விலை இங்லாந்தின் விலைக்கு நிகராக இருக்கும்.


3. மேலும் OPEC வலையில் ஒரு தகவல்:" A Taxing Business.... The real burden on the consumer is taxation, and the real profiteers are the governments of the consuming countries. "கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நுகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.


நானும் என் பங்குக்கு சில பெட்ரோல் விலை புள்ளி விவரங்களை என் வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்டு பெற்றேன்:


பெட்ரோல் விலை ,அடைப்பில் அதன் கிரேடுகளும்:


அமெரிக்கா - ரூ 22 (87 கிரேடு)


பர்மா (மியான்மர்) - ரூ 28.5 (83 கிரேடு)


மலேசியா - ரூ 23 (83 கிரேடு)


சிங்கப்பூர் - ரூ 41 (92 கிரேடு)


ஆஸ்ட்ரெலியா - ரூ 25


பாகிஸ்தான் - ரூ 27


ஒரு விலை கூட இந்தியாவில் விற்கப்படும் விலைக்கு பக்கம் கூட வரவில்லை... ஏன் இந்த கூத்து? ஒருவேளை நாம் இன்னும் இங்லாந்தின் வரி கோட்பாடுகளை பின் பற்றுகிறோமோ? இந்த புள்ளிவிவரங்கள் நம் நாடு பத்திரிக்கைகளுக்கு தெரியவில்லையா? ஏன் அவர்கள் மக்களுக்கு அதை கொண்டு செல்வதில்லை? என்ன தான் நடக்கிறது? இதயை தடுப்பது யார்? இது ஒரு புறம் இருக்க, திரு. மணிசங்கர் போன்ற மந்திரிகள் சொல்லும் சுடு சொற்கள்," பெண்கள் சினிமா போவதையும், சேலை வாங்குவதையும் குறைத்துக்கொண்டால் காஸ், பெட்ரோல் போன்றவை எளிதில் வாங்க முடியும்"நாம சினிமா போவதும், ஆடைகள் வாங்குவதும் கூட இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளில் கண்ணை பறிக்கிறது போலும்? இவரால் இதை தன் மனைவியிடம் சொல்லுவாரா? இவர்கள் ஏன் நம் பணத்தில் உளாவரும் குளிர் சாதன வசதி படைத்த கார்களில் செல்வதை நிறுத்தலாமே? நம் பணத்தில் விமான பயணத்தை நிறுத்தலாமே? வெட்டி பேச்சு நடத்துவதை நிறுத்தலாமே?


இத்தனைக்கும் மேலாக, அவர்கள் சொல்லும் மானியம் என்னும் வார்த்தையை கேட்க்கும்போது. நம் தலையில் பன்முனை வரி சுமத்தி,அதில் பிச்சையிடுவதுபோல் கதைவிடுவதை நாம் உணரவேண்டும். நமக்காக பேச நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரும் வரமாட்டார், பாராளமன்ற உறுப்பினரும் வரமாட்டார். ஏனென்றால் அவர்கள் காசு கொடுத்து பெட்ரோல் வாங்கி இருக்க மாட்டார்கள்.நம்முடைய கேள்விகளுக்கு இந்த அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும், நம் ஆதங்கம் கரையை ஒரு நாள் கடக்கும். இனியும் விலை கூடினால்,மாட்டு வண்டிகள் வீதிக்கு வரகூடும், அது மட்டும் போதாது, மக்களும் வரவேண்டும், நேபாளம் கண்டது, இந்தியாவும் காணட்டும்.


(பி.கு: இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பல வலைப்பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டு இந்திய மக்களுக்கு ஒரு வலையில் தாருவதற்கான முயற்சியே. Thanks to OPEC.org, wikipedia.org, home.att.net/~cat6a, adventuresinenergy.com, api-ec.api.org, etc.,)


நன்றி : பதிவர் நா ஜெயசங்கர்

No comments: