Saturday, March 14, 2009

இளைஞர்களே ஓட்டு போடுங்க ப்ளீஸ்



தற்கால இளைஞர்களாகிய நாம் ஓட்டு போட விடுமுறை அறிவித்தால் அதையும் ஒரு விடுமுறையா கருதி தொலைக்காட்சி பார்ப்பதும் ஊர் சுத்துவதுமாக இருக்குறோம்.சிறு துளி பெருவெள்ளம் மாதிரி இளைஞர்களாகிய நம்முடைய சிறு சிறு ஓட்டுக்கள் தாங்க ஒண்ணா சேர்ந்து ஒரு பெரிய எண்ணிக்கையாக மாறி பெரிய மாற்றத்தையே உண்டு செய்யும்.


சமீபத்துல நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இளைஞர்களின் பங்கு பெரிய அளவில் இருந்ததாக பேசிக்கிறாங்க. சுமார் 24 மில்லியின் இளைஞர்கள் இந்த முறை முதல் முறையா ஓட்டு போட்டு இருக்காங்க. ஒபாமா வெற்றி பெற்றததற்கு அவர்களின் பங்கும் பெரிய அளவில் இருந்ததுன்னு சொல்றாங்க.அவங்க நாட்டில் அவர்களின் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வந்து இருக்காங்க நம்ம நாட்டில் நாம் கொண்டு வர வேண்டாமா? ப்ளீஸ் ஓட்டு போடுங்க..


இலங்கை பிரச்சனையில் முத்துகுமார் போன்று பல இளைஞர்கள் தங்களை தாங்களே மாய்துகொண்டு இருக்காங்க. அவங்க கனவு பலிக்க வேண்டாமா? நம்ம எல்லாரும் நம்முடைய கோபத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம்...உங்க கோபத்தை ஓட்டுல காட்டுங்க..ஒருத்தர் என்னடான்னா தன்னுடைய குடும்பத்துக்கு போக மிச்ச மீதி இருக்குற தொகுதிகளை சாதி வாரியா அடுத்தவங்களுக்கு ஒதுக்குராரு.. இன்னொரு அம்மா என்னடான்னா பாதி நேரம் கொட நாட்டுல இருந்து அறிக்கை போர் விடுறாங்க இல்லாட்டி ஜாதகத்தை வெச்சி வேட்பாளரை தேர்வு செய்றாங்க.. நல்லா யோசிச்சி பாருங்க மூடநம்பிக்கைகளும்,ஜாதகங்களும்,ஜாதியுமா நம்மளை ஆள வேண்டும்.. இதை தடுக்க வேணாமா? அதுக்கு நாம எல்லாரும் ஓட்டு போடணும்.. ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


நம்ம எல்லாருக்கும் நம்ம நாடு முன்னேற வேண்டும் என்று கனவு இருக்கிறது. நாடு முன்னேற நாம மட்டும் உழைத்தால் போதாது.. நல்ல தலைவர்களும் உருவாக வேண்டும்.அதுக்கு நாம மறக்காம ஓட்டு போடணும்.. ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


எல்லாரும் உழைக்கிறோம், வரியும் ஒழுங்கா கட்டுறோம்.. ஆனா நம்ம வரி இலவச தொலைக்காட்சிகளாகவும், ஊதாரித்தனமான செலவீனங்களாகவும் போவும் பொழுது எவ்வுளவு கோபப்படுகிறோம்..அந்த கோபத்தை நியாயமாக காட்ட வாங்க நாம எல்லாரும் ஓட்டு போடுவோம்...ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


ஓட்டு போட மட்டும் போக மாட்டோம் ஆனா அரசாங்கத்தை குறை சொல்லுவதில் மட்டும் முதல் ஆளா வந்து நிப்போம்.ஓட்டு போடாத நமக்கு அரசாங்கத்தை குறை சொல்ல மட்டும் எந்த உரிமையும் இல்லிங்க. அந்த உரிமை நமக்கு தேவைன்னா நாம ஓட்டு போடணும்.. ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


ஓட்டு போடாடதற்கு நாம எல்லாரும் சொல்லும் காரணம் வேலை விஷயமாக வெளியூரில் இருக்கிறேன், ஊருக்கு போக முடியாது. நீங்க இருக்குற ஊரிலேயே உங்க ஓட்டு உரிமையை மாற்றுவது ரொம்ப சுலபம்...நாம எல்லாரும் செய்யும் பெரிய தப்பு ஓட்டு போட பதிவு செய்யுறதே இல்லை, இதையும் நாம ஒரு காரணமா சொல்லிகிறோம், இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லிங்க.. இந்த வலைதளத்துக்கு போங்க வோட்டு போடதை குறித்து பல உபயோகமான தகவல்களை சொல்லி இருக்காங்க, உங்க சந்தேகங்களை தீர்க்க நிறைய ஆர்வலர்கள் இருப்பாங்க, அவங்க உங்க சந்தேகங்களையும் தீர்ப்பதோட, உங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், ஆவணங்களை தயார் செய்தல், உங்கள் ஊரில் தேர்தல் அன்று உங்களுக்கு குறுஞ்செய்தி, இமெயில் மூலம் நினைவூட்டல் அப்படின்னு பல வகையில் நீங்க ஓட்டு போட உதவுறாங்க.Lead India அப்படிங்கிற இந்த தளத்தில் பாருங்க ஓட்டு போடுவதின் தேவை பற்றியும், அரசியல் குற்றவாளிகளை பற்றியும் நிறைய விஷயம் சொல்லியிருக்காங்க.. இதையும் ஒரு முறை பாருங்களேன்..இப்படி இந்தியா முழுவதும் பல இளைஞர்கள் நம்ம நாட்டுக்கு மாற்றத்தை உருவாக்க பாடுபடுறாங்க.. அவங்க நம்ம கிட்ட வேண்டுவது எல்லாம் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க..ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


நன்றி : பதிவர் சந்தோஷ்.

No comments: