இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!
ஆமாங்க!!! உண்மைதான்!!! நம்புங்க!!!
எந்த செலவுல முந்தி இருக்கு என்று கேட்கிறீர்களா?
வேற எந்த செலவுல!!! தேர்தல் செலவில்தாங்க!
எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க?
ரூ. 10,000 கோடி?
இந்தியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம், மத்திய-மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தத்தொகை பாரக் ஒபாமாவும் ,ஏனைய அரசியல்வாதிகளும் நடந்து முடிந்த தேர்தலில் செலவிட்ட தொகை 8000 கோடியை விட அதிகம்!
8000 கோடிதான் அமெரிக்கவரலாற்றின் அதிகபட்சம்!
அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஓராண்டு செலவுத்தொகையைவிட நான் ஒரு சில மாதத்தேர்தலுக்கு செலவிடும் தொகை அதிகம்!
இதுவும் ஆந்திரா,ஒரிசாவைத் தவிர்த்தாம்!
இந்தியாதான் தேர்தலுக்கு உலகத்திலேயே அதிகம் செலவு செய்யும் நாடாக இருக்கும்!
இது கடந்த 1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த முதலீட்டு அளவாகும் என்று சொல்கிறார்கள்!
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடு அளவுக்கு நாட்டின் நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் இந்தப் பணம் செலவிடப்பட வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், மிகப்பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுவதால், மேலும் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகையில் 20 விழுக்காடு அதாவது ஆயிரத்து 300 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு ஆகும் செலவாகும். அதாவது தேர்தல் ஆணையத்தின் செலவு தொகை.
எஞ்சிய தொகை முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படக் கூடியது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிதியாண்டின் 3ஆவது காலாண்டு இறுதியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.3 விழுக்காடாக உள்ளது. இது மிகவும் குறைந்த விகிதமாகும்.
சுமார் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணமாகமோ அல்லது சட்டவிரோதமாகவோ அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் ஆந்திராவும், கர்நாடகமும் முதலிடம் வகிக்கின்றன.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த 50 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கிற்குப் பணம் என்ற அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் தவிர, மாநில அரசுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கான செலவு ரூ. 1,650 கோடி என்று தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment