Saturday, March 28, 2009

தி.மு.க-வின் 2004 தேர்தல் அறிக்கை -- ஒரு அலசல்

'சொன்னதைச் செய்வோம்... செய்வதைச் சொல்வோம்'
-- தேர்தல் கால
தி.மு.க-வின் வாடிக்கை கோஷம் இது. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகனே!

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு போட்டிருக்கிறது தி.மு.க. பரணில் கிடந்த அக்கட்சியின் 2004 தேர்தல் அறிக்கையை தூசு தட்டினோம். 2004 பிப்ரவரி மாதம் விருதுநகரில் நடந்த தி.மு.க. தென் மண்டல மாநாட்டில்தான் அந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி. மொத்தம் 32 பக்கம். பற்பல பளபள அறிவிப்புகள்.

அதில், ஓட்டு வாங்கும் டிரேட் மார்க் திட்டங்கள் போக... பாதிக்கும் மேல் புஸ்வாணம் ஆகியிருப்பதுதான் உண்மை! அந்த தேர்தல் அறிக்கை யிலிருந்து முக்கியமானவை...

  • சட்டமேலவையை மீண்டும் ஏற்படுத்து வோம்!

- ஏற்படுத்தவில்லை -

  • தமிழை ஆட்சி மொழி ஆக்குவோம்!

- ஆக்கவில்லை -

  • தமிழை செம்மொழி ஆக்குவோம்!

- ஆக்கிவிட்டார்கள் -

  • நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை வலி யுறுத்துவோம்

- வலியுறுத்தி என்ன புண்ணியம்? நிறைவேறவில்லை

  • 'பொடா' சட்டத்தைத் திரும்பப்பெறுவோம்!

- திரும்பப் பெற்றார்கள் -

  • தமிழகத்தில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விதத்தில் உள்ள பத்திரிகை சுதந்திரத்தைக் காக்க உரிய சட்டத் திருத்தம் கொண்டுவருவோம்.

- ஊஹ¨ம்! டெலிபோன் டேப் விவகாரத்தில் கமிஷன் வைத்துக் காய்ச்சியதுதான் மிச்சம்

  • மத்திய அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 50 சதவிகிதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க தி.மு.க. வலியுறுத்தும்!

- வலியுறுத்தவில்லை -

  • குற்றவியல் வழக்கு நடைமுறைகளை சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி மாலிமத் குழு அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம்!

- வலியுறுத்தவில்லை (சொல்லப் போனால், அந்த அறிக்கையை அப்படியே ஏற்று சட்டத் திருத்தமும் கொண்டுவந்தாகிவிட்டது. இத்தனைக்கும், சட்டத்துறை இணை அமைச்சர் பொறுப்பில் தி.மு.க-வின் வேங்கடபதி ஐந்தாண்டு காலம் இருந்தார்!)

  • மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356--வது பிரிவை அறவே நீக்கப் பாடுபடுவோம்! -

- பாடுபடவில்லை -

  • நீண்ட காலமாக வாக்குறுதி அளவிலேயே இருந்து வருகிற சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்!

- நிறைவேற்றுவதில் தி.மு.க-வுக்கு ஏக ஆர்வம் இருந்தாலும், நடுவில் திடீரென 'ராமரின் படிப்பு' பற்றி பேசி சர்ச்சையாக்கிவிட்டார் தமிழக முதல்வர் -

  • குளச்சல் துறைமுகத்தை நவீன வசதிகள் கொண்ட பன்னாட்டுத் துறைமுகமாக மாற்ற உரிய நடவடிக்கை மேற் கொள்வோம்!

- மேற்கொண்ட மாதிரி (ரிசல்ட்டில்) தெரியவில்லை -

  • தற்போதைய வருமான வரி 50 ஆயிரம் ரூபாய் என்ற வருமான வரம்பை ரூ. ஒரு லட்சம் என்று உயர்த்தி வரி விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்!

- நிறைவேறியது -

  • தென் மண்டல இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு (Southern gas grid) விரைவில் அமைப்போம்!

- நிறைவேறவில்லை -

  • உள்ளாட்சி அமைப்பின் மூன்று அடுக்கு முறையின் செயல் பாட்டினை மறுபரிசீலனை செய்து குறைபாட்டைத் தவிர்க்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவருவோம்!

- கொண்டு வரவில்லை -

  • சென்னை எண்ணூர் சாலை, காசிமேடு, பூம்புகார், நாகை பகுதிகளில் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம்

- எடுக்கவில்லை என்பதில் கொதித்துப் போயிருக்கிறார்கள் இந்த ஏரியா மக்கள் -

  • வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்!

- பத்திரிகைச் செய்திகளைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே..! -

  • கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்கும் பிரச்னையைக் கண் காணிக்க, இரு நாட்டு கடற்கரைப் பகுதியிலும் சிக்கல் தீர்க்கும் மையம் அமைப்போம்!

- அமைக்கவில்லை -

  • வருமுன் காப்போம் திட்டத்தை அகில இந்திய அளவில் விரிவுபடுத்துவோம்!

- விரிவுபடுத்தவில்லை -

  • வருமான வரி செலுத்துபவர்களுக்கும் இரண்டாவது முறை ஹஜ் புனிதப் பயணம் போகும் பயணிகளுக்கும் நிறுத்தப்பட்ட மானியத் தொகையை மீண்டும் வழங்கிட முயற்சிகள் எடுப்போம்.

- நிறைவேறியது -

  • பெரியார் அணையின் நீர்மட்ட அளவை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம்!

- கேரள அடாவடிக்கு முன்னால் பருப்பு வேகவில்லை -

  • கங்கை-காவிரி ஆற்றை இணைக்கும் திட்டத்தை வலியுறுத்துவோம்!

- ஊஹ¨ம்! -

  • தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் உருவாக் கப்படும்!

- இல்லை! -

  • மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணே கலக்கும் நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில், கிழக்கே திருப்பி விடுவதற்கான திட்டங்கள் கொண்டு வருவோம்

- நிறைவேறவில்லை -

  • ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் தமிழக கிழக்குக் கடற்கரைப் பகுதியில் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த, பறக்கும் கப்பல் திட்டம் கொண்டுவரப்படும்!

- நிறைவேறவில்லை -

  • திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரை புதிய ரயில் பாதையை முதற்கட்டமாக அமைத்து, பிறகு புதுவை வரை நீட்டிக்க முயற்சி எடுப்போம்.

- நிறைவேறவில்லை -

  • சென்னை பெருநகர துரித ரயில் திட்டத்தை முழுமைப் படுத்தி செங்குன்றம்வரை நீட்டிப்போம்!

- நிறைவேறவில்லை -

  • திருச்சி, மதுரை, கோவை, விழுப்புரம், போன்ற ரயில் நிலையங்களிலிருந்து அருகிலுள்ள ஊர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் கொண்ட ரயில் பஸ்கள் இயக்கப் படும்!

- இயக்கப்படவில்லை -

  • தேசிய உயிரியல் தொழில் நுட்ப நிறுவனம் தமிழகத்தில் நிறுவப்பட தி.மு.க. வலியுறுத்தும்!

- நிறைவேறவில்லை -

  • மண்டல தாவரவியல் வாரியம், தேசிய அளவில் தாவரவியல் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும்!

- நிறைவேறவில்லை -

  • நாங்குநேரியில் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பிரமாண்டமான உயர் தொழில்நுட்ப தொழில் பூங்கா திட்டத் துக்கு உரிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பிறகும், கிடப்பில் போடப்பட்ட நிலையை மாற்றி அதைச் செயல்படுத்த வைப்ப தற்கு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தப்படும்.

- நிறைவேறவில்லை -

  • மாநில சுயாட்சிக் கொள்கை வெற்றி பெறத் தேவையான அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும்.

- நிறைவேற்றப்படவில்லை -

  • இட ஒதுக்கீடு பிரச்னையில் அதிகபட்சம் 50 சதவிகிதம் தான் இருக்கவேண்டும் என்பதை மாற்ற, சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.

- கொண்டு வரப்படவில்லை -

  • மாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு விகிதாசாரத்தை அந்தந்த மாநிலங்களே மேற்கொள்வதற்குரிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட தி.மு.க. வலியுறுத்தும்.

- நிறைவேறவில்லை -

  • மத்திய அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு, அந்தந்த மாநில ஆட்சி மொழிகளை இணைத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வலியுறுத்துவோம்!

- நிறைவேறவில்லை -


நாற்பதும் அள்ளிக் கொடுத்த தமிழகத்துக்காக இன்னும் எத்தனை உறுதியாகவும் தைரியமாகவும் மத்திய அரசுக்கு தி.மு.க. நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என்பதை வாசகர்கள் தீர்ப்புக்கே விட்டுவிடலாம்.

இதோ, இப்போது மறுபடியும் தேர்தல் யானை வருகுது... தி.மு.க. தேர்தல் அறிக்கை பளபளவென்று புதுசாக வரும்... அதில் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்!

Friday, March 27, 2009

நாடாளுமன்ற தொகுதிகள்


மறு சீரமைக்க பட்ட தமிழக பாராளுமன்ற தொகுதிகள் உங்கள் பார்வைக்கு...


1.திருவள்ளூர்
1.கும்மிடிப்பூண்டி
2.பொன்னேரி (தனி)
4.திருவள்ளூர்
5.பூந்தமல்லி (தனி)
6. ஆவடி
9.மாதவரம்

2. சென்னை வடக்கு
10. திருவொற்றியூர்
11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
12. பெரம்பூர்
13. கொளத்தூர்
15. திரு.வி.க.நகர் (தனி)
17. ராயபுரம்

3.சென்னை தெற்கு
22. விருகம்பாக்கம்
23. சைதாப்பேட்டை
24. தியாகராய நகர்
25. மைலாப்பூர்
26. வேளச்சேரி
27. சோழிங்கநல்லூர்

4. மத்திய சென்னை
14. வில்லிவாக்கம்
16. எழும்பூர் (தனி)
18. துறைமுகம்
19.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
20. ஆயிரம் விளக்கு
21 அண்ணா நகர்

5. ஸ்ரீபெரும்புதூர்
7. மதுரவாயல்
8. அம்பத்தூர்
28. ஆலந்தூர்
29.ஸ்ரீபெரும்புதூர் (தனி)
30. பல்லாவரம்
31. தாம்பரம்

6. காஞ்சீபுரம் (தனி)
32.செங்கல்பட்டு
33.திருப்போரூர்
34.செய்யூர் (தனி)
35.மதுராந்தகம் (தனி)
36. உத்திரமேரூர்
37. காஞ்சீபுரம்

7. அரக்கோணம்
3. திருத்தணி
38. அரக்கோணம்
39. சோளிங்கர்
40. காட்பாடி
41. ராணிப்பேட்டை
42. ஆற்காடு

8. வேலூர்
43. வேலூர்
44. அணைக்கட்டு
45. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
46. குடியாத்தம் (தனி)
47. வாணியம்பாடி
48. ஆம்பூர்

9. கிருஷ்ணகிரி
51. ஊத்தங்கரை (தனி)
52. பர்கூர்
53. கிருஷ்ணகிரி
54. வேப்பனஹள்ளி
55. ஓசூர்
56. தளி (தளி)

10. தர்மபுரி
57. பாலக்கோடு
58.பென்னாகரம்
59. தர்மபுரி
60.பாப்பிரெட்டிபட்டி
61. அரூர் (தனி)
85. மேட்டூர்

11.திருவண்ணாமலை
49.ஜோலார்பேட்டை
50.திருப்பத்தூர்
62.செங்கம் (தனி)
63.திருவண்ணாமலை
64.கீழ்ப்பெண்ணாத்தூர்
65.கலசபாக்கம்

12-ஆரணி
66. போளூர்
67.ஆரணி
68. செய்யார்
69. வந்தவாசி (தனி)
70. செஞ்சி
71. மைலம்

13. விழுப்புரம்
72.திண்டிவனம் (தனி)
73.வானூர் (தனி)
74.விழுப்புரம்
75.விக்கிரவாண்டி
76.திருக்கோவிலூர்
77.உளுந்தூர்பேட்டை

14.கள்ளக்குறிச்சி
78. ரிஷிவந்தியம்
79. சங்கராபுரம்
80. கள்ளக்குறிச்சி (தனி)
81. கங்கவல்லி (தனி)
82.ஆத்தூர் (தனி)
83. ஏற்காடு (ப.கு.)

15.சேலம்
84.ஓமலூர்
86.எடப்பாடி
88.சேலம் (மேற்கு)
89.சேலம் (வடக்கு)
90.சேலம் (தெற்கு)
91.வீரபாண்டி

16. நாமக்கல்
87. சங்ககிரி
92. ராசிபுரம் (தனி)
93. சேந்தமங்கலம் (ப.கு.)
94. நாமக்கல்
95. பரமத்திவேலூர்
96. திருச்செங்கோடு

17. ஈரோடு
97.குமாரப்பாளையம்
98.ஈரோடு (கிழக்கு)
99.ஈரோடு (மேற்கு)
100.மொடக்குறிச்சி
101.தாராபுரம் (தனி)
102.காங்கேயம்

18.திருப்பூர்
103.பெருந்துறை
104.பவானி
105. அந்தியூர்
106.கோபிச்செட்டிப்பாளையம்
113.திருப்பூர் (வடக்கு)
114.திருப்பூர் (தெற்கு)

19. நீலகிரி
107.பவானி சாகர் (தனி)
108.உதகமண்டலம்
109.கூடலூர் (தனி)
110.குன்னூர்
111.மேட்டுப்பாளையம்
112. அவினாசி (தனி)

20. கோவை
115.பல்லடம்
116. சூலூர்
117.கவுண்டம்பாளையம்
118.கோயம்புத்தூர் (வடக்கு)
120.கோயம்புத்தூர் (தெற்கு)
121.சிங்காநல்லூர்

21. பொள்ளாச்சி (தனி)
119. தொண்டாமுத்தூர்
122. கிணத்துக்கடவு
123. பொள்ளாச்சி
124. வால்பாறை (தனி)
125. உடுமலைப்பேட்டை
126. மடத்துக்குளம்

22. திண்டுக்கல்
127.பழனி
128.ஒட்டன்சத்திரம்
129.ஆத்தூர்
130.நிலக்கோட்டை(தனி)
131.நத்தம்
132.திண்டுக்கல்

23. கரூர்
133.வேடசந்தூர்
134அரவக்குறிச்சி
135.கரூர்
136.கிருஷ்ணராயபுரம் (தனி)
138.மணப்பாறை
179.விராலிமலை

24. திருச்சி
139. ஸ்ரீரங்கம்
140. திருச்சிராப்பள்ளி
141. திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
142. திருவெறும்பூர்
178. கந்தர்வக்கோட்டை (தனி)
180. புதுக்கோட்டை

25. பெரம்பலூர் (தனி)
137. குளித்தலை
143. லால்குடி
144. மண்ணச்சநல்லூர்
145. முசிறி
146. துறையூர் (தனி)
147. பெரம்பலூர் (தனி)

26. கடலூர்
151. திட்டக்குடி (தனி)
152. விருத்தாசலம்
153. நெய்வேலி
154. பண்ருட்டி
155. கடலூர்
156. குறிஞ்சிப்பாடி

27. சிதம்பரம் (தனி)
148. குன்னம்
149. அரியலூர்
150. ஜெயங்கொண்டம்
157. புவனகிரி
158. சிதம்பரம்
159. காட்டுமன்னார் கோயில் (தனி)

28. மயிலாடுதுறை
160.சீர்காழி (தனி)
161.மயிலாடுதுறை
162.பூம்புகார்
170.திருவிடைமருதூர் (தனி)
171.கும்பகோணம்
172.பாபநாசம்

29. நாகப்பட்டினம்
163.நாகப்பட்டினம்
164.கீழ்வேலூர் (தனி)
165.வேதாரண்யம்
166.திருத்துறைப்பூண்டி (தனி)
168.திருவாரூர்
169.நன்னிலம்

30. தஞ்சாவூர்
167. மன்னார்குடி
173.திருவையாரு
174.தஞ்சாவூர்
175. ஒரத்தநாடு
176.பட்டுக்கோட்டை
177.பேராவூரணி

31. சிவகங்கை
181. திருமயம்
182. ஆலங்குடி
184. காரைக்குடி
185. திருப்பத்தூர்
186. சிவகங்கை
187. மானாமதுரை (தனி)

32.மதுரை
188.மேலூர்
189.மதுரை கிழக்கு
191.மதுரை வடக்கு
192.மதுரை தெற்கு
193.மதுரை மையம்
194.மதுரை மேற்கு

33. தேனி
190. சோழவந்தான் (தனி)
197. உசிலம்பட்டி
198. ஆண்டிப்பட்டி
199. பெரியகுளம் (தனி)
200. போடிநாயக்கனூர்
201. கம்பம்

34.விருதுநகர்
195.திருப்பரங்குன்றம்
196.திருமங்கலம்
204.சாத்தூர்
205.சிவகாசி
206.விருதுநகர்
207.அருப்புக்கோட்டை

35. ராமநாதபுரம்
183.அறந்தாங்கி
208.திருச்சுழி
209.பரமக்குடி (தனி)
210. திருவாடனை
211.ராமநாதபுரம்
212.முதுகுளத்தூர்

36. தூத்துக்குடி
213.விளாத்திகுளம்
214.தூத்துக்குடி
215.திருச்செந்தூர்
216.ஸ்ரீவைகுண்டம்
217.ஓட்டப்பிடாரம் (தனி)
218. கோவில்பட்டி

37. தென்காசி (தனி)
202. ராஜபாளையம்
203. ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)
219. சங்கரன்கோவில் (தனி)
220. வாசுதேவநல்லூர் (தனி)
221. கடையநல்லூர்
222. தென்காசி

38.திருநெல்வேலி
223.ஆலங்குளம்
224.திருநெல்வேலி
225.அம்பாசமுத்திரம்
226.பாளையங்கோட்டை
227.நாங்குநேரி
228.ராதாபுரம்

39. கன்னியாகுமரி
229.கன்னியாகுமரி
230.நாகர்கோவில்
231.குளச்சல்
232.பத்மநாபபுரம்
233.விளவன்கோடு
234.கிள்ளியூர்

Thursday, March 26, 2009

அரசு வலைதளங்கள்

மிகவும் அத்தியாவசியமான அரசாங்க வலைத்தளங்களின் முகவரிகள் உங்களின் பயன்பாட்டிற்கு...

அரசு துறைகள் பற்றிய குறைகள் மற்றும் புகார்கள் :
http://www.pgportal.gov.in


தமிழக அரசு வலைதளங்கள் :
1. மின் துறை : http://www.tnei.tn.gov.in/
2. தேர்தல் ஆணையம் : http://www.tnsec.tn.nic.in/
3. கருவூலம் : http://www.karuvoolam.tn.gov.in/Ecssystem
4. வேலைவாய்ப்பு : http://www.employment.tn.gov.in/
5. சுற்றுச்சூழல் : http://www.environment.tn.nic.in/
6. தீயணைப்பு துறை : http://www.tnfrs.tn.nic.in/
7. தொல்லியல் துறை : http://www.tn.gov.in/tamilforensic
8. காடு வளர்ப்பு : http://www.forests.tn.nic.in/
9. தேர்வாணயம் : http://dge.tn.gov.in/
10. கைத்தொழில்,கதர் துறை : http://www.tn.gov.in/
11. குடும்ப சுகாதார மேம்பாடு : http://www.tnhealth.org/
12. தொழில் வளம் : http://www.tidco.com/
13. தகவல் தொழில்நுட்பம் : http://www.elcot.in/
14. சென்னை உயர் நீதிமன்றம் : http://www.hcmadras.tn.nic.in/
15. காவல் துறை : http://tnpolice.gov.in/
16. ஓய்வூதியம் : http://www.tn.gov.in/dop/
17. சிறைச்சாலை : http://www.prisons.tn.nic.in/
18. பதிவுத்துறை : http://www.tnreginet.net/
19. தகவல் பெரும் உரிமை சட்டம் : http://www.tn.gov.in/rti/

20. கிராம மேம்பாடு : http://www.tnrd.gov.in/

21. பள்ளி கல்வி : http://www.tn.nic.in/schools

22. விதை சான்றிதழ் துறை : http://www.seedtamilnadu.com/

23. போக்குவரத்து துறை : http://www.tn.gov.in/transport/

24. தமிழக சட்டசபை : http://www.assembly.tn.gov.in/

25. ஊழல் மற்றும் அரசாங்க ஒழிப்பு : http://www.dvac.tn.gov.in/

பசி





பொதுவாக பசியென்றால் சாப்பிடனும் என்றோ, இன்னும் சாப்பிடவில்லையே என்பது மட்டுமே நம் நினைவுக்கு வரும். இதற்கப்பாலும் பல கூறுகள் பசியில் உண்டென்பதை பெரும்பாலோர் அறியமாட்டார்கள். பசி என்பது பல்வேறு தன்மைகளையும், தேவைகளையும் உடையது.

மருத்துவத்துறையினராலும், சமூகவியல் ஆய்வாளர்களாலும் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படும்.


1) கடும்பசி (Acute Hunger)

2) நெடும்பசி (Chronic Hunger)

3) தனிப்பசி (Specific Hunger)

4) சமச்சீர் உணவுப்பசி (Multiple Hunger)

5) ஊட்டச்சத்துப் பசி (Mal Nutritional Hunger)


இப்படிப்பட்ட பசி நிலைகளால் உலகில் வாடுவோர் 75% உள்ளனர். இந்தியாவில் மட்டும் 90% மக்கள் (அனைத்துவகை) பசிகளுக்கு அடிமையாய் உள்ளனர்.

1) கடும்பசி (Acute Hunger)

உயிர் வாழ இப்பசியை அடக்குதல் வேண்டும். அன்றாடம் உணவு தேவைப்படும் அத்தியாவசியத்தை உணர்த்தும் பசி. உணவு அளவில் குறையும்போது ஆற்றல் குறைந்து எதுவும் செய்யமுடியாமல் ஒடுங்கும் நிலை ஏற்படுகிறது. இதைத்தான் பாரதி சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் என்றான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றும் குறிப்பிட்டது இப்பசியைத்தான். கூழோ, கஞ்சியோ, ஹம்பர்கரோ, வளர்க்கும் குரங்கையோ*, எதையாவது...எதையாவது தின்று அடக்கவேண்டிய பசி.


* 7 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக, கிராம மக்களில் பெரியவர் ஒருவர் தான் வளர்த்த குரங்கைக் கொன்று தின்று விட்டார் என்றும், இன்னும் சிலர் விஷத்தன்மை வாய்ந்தது என்று தெரிந்தும் ஒருவகைக் கிழங்கை வேறுவழியின்றி உண்டு சில நாட்களில் இறந்திருக்கிறார்கள் என்றும் இந்தியா டுடே இதழில் வந்த கட்டுரையில் படித்தேன்.


2) நெடும்பசி (Chronic Hunger)


பஞ்சத்தினாலும், இயற்கையின் சீற்றங்களாலும், ஏமாற்றங்களாலும், உணவுற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய கட்டமைப்பின் குறைவினாலும், சமூக அமைப்பின் சுரண்டல்களாலும், போர், அகதியாக்கப்படுதல் போன்ற சமூகப்பிரச்சினைகளாலும் நீண்டகாலமாக நிர்ப்பந்தமான பட்டினியால் ஏற்படும் பசி.


WHO வின் 2004ம் ஆண்டறிக்கையின் படி, ஒவ்வொரு நாளும் , 800 மில்லியன் மக்கள் பசியோடு உறங்குகிறார்கள், நீண்டகாலமாக நிர்ப்பந்தமான சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பருவகால மாற்றத்தின் போதும் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் வாடுகிறார்கள். பசியாலும், ஊட்டச்சத்துக் குறைவாலும் ஏற்படும் நேரிடையான அல்லது மறைமுகமான பாதிப்பால் ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் குழந்தைகள் 5 வயதை அடையுமுன்பே மரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒருமணி நேரத்தில் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் சராசரியாக 8,300 பேர் சேர்ந்து கொள்வார்கள். நாளை இந்நேரம் இன்னும் 2 லட்சம்பேருக்கு உணவு தேவைப்படும். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதன் தனிதன்மையான தேவைகளோடு இருப்பவர்கள்தாம், இவ்வுலகின் பிரஜையாக இருப்பதற்கு நம்மைப் போலவே எல்லா அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் உடையவர்கள்தாம்.

ஆனால், பரிதாபம் முறைகெட்ட சமூக அமைப்பாலும், அவர்களின் அத்தியாவசிய வாழ்வாதாரங்களைப் பகிர்ந்தளிக்காத சுரண்டல் மிகுந்த, ஏற்றத்தாழ்வுமிக்க வாழ்வமைப்பாலும் நிராகரிக்கப்பட்டவர்களாக செத்து மடிகிறார்கள். உலகின் வளங்களை எல்லாம் வெறும் இரண்டு விழுக்காட்டினர் சுயநலம் மிகுந்த அரசியல், சமூகப்பொருளாதார கட்டமைப்பால் பயன்படுத்திக் கொண்டு, மீதமுள்ள 98 % மக்களை ஏதேனும் குறையுள்ளவர்களாக விட்டுவிட்டனர்.

உணவுசார் தேவைகளை மதிப்பீடு செய்யும் உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) வல்லுனர்களின் அறிக்கைகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 73 மில்லியன் மக்கள் இப்புவியில் மக்கட்தொகையில் இணைந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் தேவையான உணவுற்பத்தி நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது, ஆனால் பெரும்பான்மையான, தேவையுள்ள (சுமார் 850 மில்லியன்) மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்பது நிதர்சனமான, வருத்தத்திற்குறிய உண்மை. இதில் 95 விழுக்காட்டினர் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உபரியான உணவுப்பொருட்கள் வளர்ந்து வரும் நாடுகளின் உணவுத்தேவையுள்ள பெரும்பான்மை மக்களுக்கு சென்று சேரும் ஏற்பாடுகள் இன்னும் சரிவரச் செய்யப்படவில்லை.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் வறுமைக்கோட்டின் கீழ் 46 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பசி மனித வாழ்வைச் சீர்குலைக்கிறது. மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இது தன் ஆதிக்கத்தைத் தொடங்கியுள்ளது. தன்னலமும், சுரண்டலும் இதை வளர்த்தன.நெடும்பசியானது மனித இயல்பைச் சிதைக்கும், வலிமையைக் குறைக்கும். பசியினால் எழும் உணவு வேட்கையால் மனிதன் தன்னை மறந்து எதையும் செய்யத்துணிவான். இதனால் அன்பு, அறம், கடமை, பண்பாடு போன்றவற்றை இழக்கவும் யோசிக்கமாட்டான். கொலை, களவு, பூசல், சோம்பல், சோரம்போதல் ஆகிய அனைத்திற்கும் இப்பசியே அடிப்படை. பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்று இதையே குறிப்பிட்டனர்.





(பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான் - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)

Monday, March 16, 2009

காதல் க(வி)தை


ஆம் என் காதலும் கண்களில் தான் ஆரம்பமானது ...


ஜன்னல் ஓர பயணம் ,


அதில் சில்லென்ற தென்றலாய் அவள் முகம்


நாணமென்னும் நூல் தொடுத்து எய்தாள் கள்ள பார்வை


மீண்டும் அதே ஜன்னலோரம் ,


காத்திருந்தேன் அழுக்கு சட்டைக்கு பதில் அழகான சட்டையுடன்


அதே பார்வை ,


பரிட்சையத்தின் பரிசாய் சிறு புன்னகையும் சேர்ந்தது


அரை புன்னகையோ ஆள் கொள்ளும் பூகம்பம்பார்வையும் புண்ணகையும் சில நாள் தொடர ,


hello என்றேன் ஒரு நாள்பதிலாய் வெட்கம் தின்ற அரை வார்த்தை ,


ஆராய்ந்து பார்த்தால் hai என்றாள்அரை வார்த்தையும் ஆயிரம் வார்த்தை ஆனது


தேநீர் சந்திப்பில்தற்செயலாய் சில நேரமும் , தன் செயளாய் பல நேரமும் மெல்ல உறசினோம்


நாணம் சிவக்கும் உன் முகமும் ஆயிரம் கதை கூறும்விரல் பற்றியே நடக்கலானோம் ,


கை பற்றியே கடற்கரையும் அலங்தூம்சின்ந சின்ன சில்மிசமும் ,ஒரு நொடி முத்தமும் என் உயிர் எங்கும் கலந்தது


இதுவே சுவர்கம் என்று நினைத்தேன்


ஆம் என் காதலும் திருமணத்தில் தான் முடிந்தது ...


மீண்டும் ஜன்னல் வழியே என் பார்வை ,


மணவறையில் நீ யாருடனோதந்தை பாசம் என்றாய் , தாய் சொல் என்றாய் , சூழ்நிலை கைதி என்றாய்உன்னை கைதி என்று சொல்லி


என்னை தனிமை சிறையில் தள்ளி விட்டாய்கடற்கரையில் உன் காலடி தேடும் பைத்தியக்காரனும் ஆனேன்


உறக்கம் இல்லா இரவுகளும் கவிதையாய் மொழி பெயர்த்தேன்ஆண்டுகள் சில உருண்டன ,


அகவையும் அதிகரித்துபிள்ளை பாசம் , பேரன் ஆசை , நலம் கருதிய நண்பர்கள் நச்சரிப்புகலியாண ஏற்பாடும் தீவிரமானது ,


மணம் முடிப்பதற்கு முன்கடைசியாய் ஒரு முறை அவளை சந்திப்பது என்னும் விபரதீமான முடிவு


அறை மனதாய் அழுத்தினேன் அழைப்பு மணியை


அதே முகம் , சில்மிச பார்வையும் இன்று வினா பார்வை ஆனது
சின்ன சிரிப்பும் அவள் முகத்தில் மெல்ல உலர்ந்து தான் போனது


ஏன் இருதயமும் வேகமாய் உறைந்து தான் போனது பரிட்சையத்தின் அடையாளமும் இல்லாமல் வரவேற்றாள் மரியாதை நிமித்தமாக


மறந்து தான் போனாள் போல் , நிலை குலைந்து தான் போனேன் நானும் ,ஏதேதோ சொல்ல துடித்தவள் மௌனமாய் நின்றால்


நிற்க பிடிக்காமல் புறப்பட எத்தனித்தேன்


மேலே பேசியது , நான் பரிசாய் தந்த அவள் கால் கொழுசுமௌனத்தின் இடையே


அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர் என் இதயமும் மெள்ள விக்கித்து தான் போனது


நெஞ்சினில் காதலையும் , கண்ணில் கணவுகளையும் புதைத்து வாழும்


ஆயிர கணக்கான இந்திய பெண்களில் முகவரியும் ஆனாய் , முதல் வரியும் ஆனாய் .


நானும் அந்த வாக்கியத்தில் ஒரு வார்த்தையாக விரும்பவில்லை


மனதில் உன்னை காதலித்து , மற்றொரு வாழ்கையும் விரும்பவில்லை


நீ இல்லாத காதலையும் கனவுகளாய் மாற்றி காதலித்தேன்


அர்த்தம் அறியா சந்தோஷம் , ஆயினும் சிறு கண்ணீரும் வந்தது


ஆம் என் காதலும் கண்ணீரில் தான் முடிந்தது ...

யாரும் செய்யலாம்


தண்ணீர் அமிர்தம்
யாரும் செய்யலாம்: தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப்படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.

தண்ணீரை நாம் எப்படி வீணாக்குகிறோம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், ஒரு நாளில் எத்தனை முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகிறோம் என்றும், பயணங்களின்போது குடிநீல் பாட்டில்கள் எத்தனை வாங்குகிறோம் என்றும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

காய்கறி கழுவும்போது, பல்துலக்கும்போது, ஷேவிங் செய்யும்போது குழாயை திறந்துவிட்டுக் கொண்டே வேலை செய்ய வேண்டாம். வாளி அல்லது கப்-பில் எடுத்து பயன்படுத்துங்கள். வாளியில் தண்ணீர் நிரப்பி குளியுங்கள். ஷவரில் குளித்தால் எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாது, தண்ணீர் தேவையின்றி வீணடையும். ஆங்கில கழிப்பறைகளுக்கு பதிலாக, இந்திய கழிப்பறைகளையே பயன்படுத்துங்கள். அதில் மிகக் குறைவாகவே தண்ணீர் செலவாகிறது. வாகனங்களை கழுவ, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்தாதீர்கள். வாளியில் பயன்படுத்தும்போது குறைவாகவே தண்ணீர் செலவாகும்.


வீட்டு சுற்றுப்பாதைகள், வெளிப்புறப் பகுதிகள், மரங்களைச் சுற்றி சிமெண்ட் தளம் அமைக்காதீர்கள். மழைநீர் பூமிக்குள் சென்றால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். சமையலறையில் வெளியேறும் தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சுங்கள்.


பயணங்களின்போது போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் சென்றால், செலவு மிச்சம். பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாவதும் குறையும்.


இந்தியாவில் 17 கோடி பேர் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் இறந்துபோவோரில் 80 சசவிகிதம் பேர் தண்ணீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000.
தண்ணீர் அமிழ்தம் என்றார் ஒரு விஞ்ஞானி. எனவே, அளவோடு பயன்படுத்தாவிட்டால் அந்த அமுதும் நஞ்சாகும், அதாவது தீர்ந்து போகும்.


வயிற்றுக்கு கொஞ்சம்
யாரும் செய்யலாம்: வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம்.


பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் உள்ளூர் காய்கறி, பழங்களையே வாங்குங்கள். இது சத்தானது, உடலுக்கு உகந்தது, செலவு குறைந்தது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லிகள் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்களை வாங்குங்கள். வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழங்கள் பயணம் செய்யும்போது அதிக மாசு வாயுக்களை வெளியிடுகின்றன.

சங்கிலித் தொடர் கடைகள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் விற்கப்படும் அயல்நாட்டுப் பழங்கள், காய்கறிகள் நெடுந்தொலைவு பயணம் செய்து நம்மை அடைகின்றன. நீண்டகாலம் சேமித்து வைக்க வசதியாக அவற்றின் மீது பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. அவற்றின் விலையும் அதிகம்.


விரயங்களுக்கு முற்றுப்புள்ளி
யாரும் செய்யலாம்: பிளாஸ்டிக், காகித பொருட்களை மறுபடி பயன்படுத்தலாம்.


பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். காகித பயன்பாட்டை குறையுங்கள். கடைகளுக்குச் செல்லும்போது துணி அல்லது சாக்குப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டலுக்கு உணவு வாங்கச் செல்லும்போது பாத்திரம் எடுத்துச் செல்லுங்கள்.


கம்ப்யூட்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கும்போது, இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள். குறிப்புகள் எழுத ஒரு பக்கம் அச்சிடப்பட்ட தாள்களை பயன்படுத்துங்கள். பரிசுப் பொருள்களை சுற்றிவரும் காகிதங்கள், கடித உறைகளை மறுபடி பயன்படுத்துங்கள்.


வெளியே செல்லும்போது, சுற்றுலா செல்லும்போது பையில் உங்களுக்கென ஒரு டம்ளரை எடுத்துச் செல்லுங்கள். மக்காத பிளாஸ்டிக் கோப்பைகள், காகித கோப்பைகள் விரயமாவதை இதன் மூலம் தடுக்கலாம்.


மறுசுழற்சி செய்யத்தக்க, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை பிரியுங்கள். பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி, உலோக பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கி, வீட்டுத் தாவரங்களுக்கு இடலாம். சென்னையில் உள்ள பல்வேறு அடுக்குமாடி மற்றும் தெரு குடியிருப்போர் சங்கங்கள் இதை மேற்கொண்டு வருகின்றன.

Saturday, March 14, 2009

இன்றைய தலைமுறை...
















எதிர்காலத்தில் இதுபோல் மற்றொரு பதிவை எழுத கூடாது என வேண்டிக்கொண்டே, மிகுந்த குற்ற உணர்வுடன் இந்த பதிவை எழுதுகிறேன்.


நேற்றய இரவு என் நண்பர்களுடன் 'சிவா மனசுல சக்தி' திரை படத்தை பார்த்துவிட்டு சுமார் 12 மணி அளவிற்கு உணவு உண்ண paramount hotel க்கு சென்றோம். ( Paramount,Empire போன்ற ஹோட்டல்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்). நாங்கள் போனது வெள்ளிக்கிழமை இரவு (வார இறுதி) என்பதனால் ஜே ஜே என திருவிழா கூட்டம் போல இருந்தது Paramount. எங்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு கூட இப்படி ஒரு கூட்டத்தை கண்டதில்லை.


விஷயம் என்னவென்றால் அத்துணை பேரும் 20-30 வயது இளைஞர்கள். கூடவே இளம்பெண்களும். அங்கே போதையில் இல்லாதவரை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடைக்கு கீழே ஆடை உடுத்தி இருக்கும் பெண்களை காணவே முடியாது.போதையில் அவர்கள் செய்யும் செயலை கண்டால் கோவம் மட்டும் அல்ல கவலையும் கூடவே வரும்.


கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், நம் இந்திய பெண்கள்,இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்த பெண்கள் இரவு 12 மணிக்கு தண்ணி அடித்து விட்டு,அரைகுறை ஆடையுடன் தடவி கொண்டிருக்கிறார்கள் என்றால் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். இத்தனையும் பார்த்து விட்டு கண்டும் காணாமல் போல் வந்த நாங்களும் நாட்டின் நாளைய தூண்கள்.

இளைஞர்களே ஓட்டு போடுங்க ப்ளீஸ்



தற்கால இளைஞர்களாகிய நாம் ஓட்டு போட விடுமுறை அறிவித்தால் அதையும் ஒரு விடுமுறையா கருதி தொலைக்காட்சி பார்ப்பதும் ஊர் சுத்துவதுமாக இருக்குறோம்.சிறு துளி பெருவெள்ளம் மாதிரி இளைஞர்களாகிய நம்முடைய சிறு சிறு ஓட்டுக்கள் தாங்க ஒண்ணா சேர்ந்து ஒரு பெரிய எண்ணிக்கையாக மாறி பெரிய மாற்றத்தையே உண்டு செய்யும்.


சமீபத்துல நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இளைஞர்களின் பங்கு பெரிய அளவில் இருந்ததாக பேசிக்கிறாங்க. சுமார் 24 மில்லியின் இளைஞர்கள் இந்த முறை முதல் முறையா ஓட்டு போட்டு இருக்காங்க. ஒபாமா வெற்றி பெற்றததற்கு அவர்களின் பங்கும் பெரிய அளவில் இருந்ததுன்னு சொல்றாங்க.அவங்க நாட்டில் அவர்களின் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வந்து இருக்காங்க நம்ம நாட்டில் நாம் கொண்டு வர வேண்டாமா? ப்ளீஸ் ஓட்டு போடுங்க..


இலங்கை பிரச்சனையில் முத்துகுமார் போன்று பல இளைஞர்கள் தங்களை தாங்களே மாய்துகொண்டு இருக்காங்க. அவங்க கனவு பலிக்க வேண்டாமா? நம்ம எல்லாரும் நம்முடைய கோபத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம்...உங்க கோபத்தை ஓட்டுல காட்டுங்க..ஒருத்தர் என்னடான்னா தன்னுடைய குடும்பத்துக்கு போக மிச்ச மீதி இருக்குற தொகுதிகளை சாதி வாரியா அடுத்தவங்களுக்கு ஒதுக்குராரு.. இன்னொரு அம்மா என்னடான்னா பாதி நேரம் கொட நாட்டுல இருந்து அறிக்கை போர் விடுறாங்க இல்லாட்டி ஜாதகத்தை வெச்சி வேட்பாளரை தேர்வு செய்றாங்க.. நல்லா யோசிச்சி பாருங்க மூடநம்பிக்கைகளும்,ஜாதகங்களும்,ஜாதியுமா நம்மளை ஆள வேண்டும்.. இதை தடுக்க வேணாமா? அதுக்கு நாம எல்லாரும் ஓட்டு போடணும்.. ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


நம்ம எல்லாருக்கும் நம்ம நாடு முன்னேற வேண்டும் என்று கனவு இருக்கிறது. நாடு முன்னேற நாம மட்டும் உழைத்தால் போதாது.. நல்ல தலைவர்களும் உருவாக வேண்டும்.அதுக்கு நாம மறக்காம ஓட்டு போடணும்.. ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


எல்லாரும் உழைக்கிறோம், வரியும் ஒழுங்கா கட்டுறோம்.. ஆனா நம்ம வரி இலவச தொலைக்காட்சிகளாகவும், ஊதாரித்தனமான செலவீனங்களாகவும் போவும் பொழுது எவ்வுளவு கோபப்படுகிறோம்..அந்த கோபத்தை நியாயமாக காட்ட வாங்க நாம எல்லாரும் ஓட்டு போடுவோம்...ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


ஓட்டு போட மட்டும் போக மாட்டோம் ஆனா அரசாங்கத்தை குறை சொல்லுவதில் மட்டும் முதல் ஆளா வந்து நிப்போம்.ஓட்டு போடாத நமக்கு அரசாங்கத்தை குறை சொல்ல மட்டும் எந்த உரிமையும் இல்லிங்க. அந்த உரிமை நமக்கு தேவைன்னா நாம ஓட்டு போடணும்.. ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


ஓட்டு போடாடதற்கு நாம எல்லாரும் சொல்லும் காரணம் வேலை விஷயமாக வெளியூரில் இருக்கிறேன், ஊருக்கு போக முடியாது. நீங்க இருக்குற ஊரிலேயே உங்க ஓட்டு உரிமையை மாற்றுவது ரொம்ப சுலபம்...நாம எல்லாரும் செய்யும் பெரிய தப்பு ஓட்டு போட பதிவு செய்யுறதே இல்லை, இதையும் நாம ஒரு காரணமா சொல்லிகிறோம், இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லிங்க.. இந்த வலைதளத்துக்கு போங்க வோட்டு போடதை குறித்து பல உபயோகமான தகவல்களை சொல்லி இருக்காங்க, உங்க சந்தேகங்களை தீர்க்க நிறைய ஆர்வலர்கள் இருப்பாங்க, அவங்க உங்க சந்தேகங்களையும் தீர்ப்பதோட, உங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், ஆவணங்களை தயார் செய்தல், உங்கள் ஊரில் தேர்தல் அன்று உங்களுக்கு குறுஞ்செய்தி, இமெயில் மூலம் நினைவூட்டல் அப்படின்னு பல வகையில் நீங்க ஓட்டு போட உதவுறாங்க.Lead India அப்படிங்கிற இந்த தளத்தில் பாருங்க ஓட்டு போடுவதின் தேவை பற்றியும், அரசியல் குற்றவாளிகளை பற்றியும் நிறைய விஷயம் சொல்லியிருக்காங்க.. இதையும் ஒரு முறை பாருங்களேன்..இப்படி இந்தியா முழுவதும் பல இளைஞர்கள் நம்ம நாட்டுக்கு மாற்றத்தை உருவாக்க பாடுபடுறாங்க.. அவங்க நம்ம கிட்ட வேண்டுவது எல்லாம் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க..ஓட்டு போடுங்க ப்ளீஸ்..


நன்றி : பதிவர் சந்தோஷ்.

சிவா மனசுல சக்தி


SMS - பெயரை போலவே இளசுகளுக்கான படம்,விகடன் டாக்கீஸின் முதல் தயாரிப்பு. இன்றைய இளசுகளின் குறும்பு,பரஸ்பர கலாயித்தல் என்கிற one line story. படம் முழுவதுமே நகைசுவையோட அழகாக இளமையாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். நடிப்பில் ஜீவாவிடம் முன்னேற்றம் தெரிகிறது. Dialogue Delivery மிக அருமை. அறிமுக நாயகி அனுயாவின் நடிப்பு போக போக தான் தெரியுமென்றாலும் Expressions பரவாஇல்லை.
முதல் பாதி ராக்கெட் போல சீறி பாய்ந்து , பின்பாதி புஸ்வாணமாகி விட்டது. இளமை என்னும் நூலெடுத்து பட்டம் விடலாம், ஆனால் aeroplane விட நினைத்திருக்கிறார்கள். பின்பாதியில் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.இசை யுவனாமே,சொல்லி தான் தெரிகிறது.. இளமையான படம் என்பதற்காக இத்தனை டாஸ்மாக் காட்சிகளா?

பூ,பருத்திவீரன்,சுப்ரமணியபுரம் போன்ற தரமான,ஆழமான படங்களை தன் முதல் படைப்பாக தந்து,தனது நுழைவை பகிரங்கபடுத்தி இருக்க வேண்டிய விகடன் டாக்கீஸ் இது போல சாதாரண படத்தை தந்தது துரதிருஷ்டமே...
எனது மதிப்பீடு :4.5/10

Saturday, March 7, 2009

முதல் இடத்தில் இந்தியா - பாகம் 2


1947லிருந்து நடைபெற்று வரும் பெரும் கொள்ளை. நம் பணத்தை நாம் திரும்பப் பெற இயலுமா? உயர்ந்த பதவிகளிலுள்ள சிலர் இந்தியாவின் சாதாரண மக்களிடம் அடித்துள்ள இந்த கொள்ளைதான் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரியது. இது அரசியல்வாதிகளாலும், அதிகார வார்க்கத்தினராலும், சில தொழிலதிபர்களாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை. இக்கொள்ளையில் ஈடுபடாத துறையே இல்லையென்னுமளவுக்கு எங்கும் வியாபித்த கொள்ளை. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை ஏனெனில் இந்தியாவில்தான் தண்டணை பற்றிய பயமோ வேறெந்த பயமோ இன்றி துணிந்து கொள்ளையிட முடியுமே.


ஆனால் இதில் மனதை அதிகம் வருத்தும் அதி முக்கிய நிகழ்வு என்னவெனில் கொள்ளையடித்த அப்பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யாமல் வரிவிலக்குள்ள வேறுநாடுகளில் போட்டு வைப்பதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான். இந்தியாவை ஏழை நாடாக மாற்றியதுதான்.


நம்மைப் போன்ற இங்குள்ள சாதாரண மக்களுக்கு இது போன்ற வரிவிலக்கு நாடுகளில் பணத்தைப் போட்டு வைப்பதற்கான சரியான வழிமுறைகள் தெரியாவிட்டாலும், இது போன்று மக்களை ஏய்த்துக் கொள்ளையடிக்கும் பணங்கள் சுவிஸ் பேங்க் அக்கவுண்டுக்கு போகிறது என்று தெரிந்தே இருக்கிறது.

உண்மையில் சில பொருளாதார மேதைகளின் கூற்றுப்படி இந்த வரியற்ற வங்கிக்கணக்குத் திட்டமே மேலை நாடுகள் எழை நாடுகளை ஏய்க்க வகுத்துள்ள திட்டமே ஆகும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இத்தகைய வங்கிகள் வளர்ந்து கிளை பரப்ப அனுமதிப்பதன் மூலம் மேலைநாடுகள் வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள சிறிய மூலதனத்தையும் பணக்கார நாடுகளை நோக்கி இழுக்கிறார்கள்.

உலகின் 70 நாடுகளில் இதுபோன்ற வரியற்ற வங்கிக் கணக்குகளின் முலம் பெரும் பணமுதலைகள் 11.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்துள்ளதாக 2005ம் ஆண்டில் வந்த Tax Justice Network (TJN) நிறுவனத்தின் ஆராய்ச்சிகள் அறிவித்தது. இந்த TJN நிறுவனத்தின் Raymond Baker தனது Capitalism's Achilles Heel: Dirty Money and How to Renew the Free Market System என்ற புத்தகத்தில் 1970ஆண்டின் மத்தியிலிருந்து இதுவரை சுமார் 5ட்ரில்லியன் டாலர்கள் ஏழை நாடுகளிலிருந்து மேலை நாடுகளுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.



உலகத்தின் சொத்துக்களில் 57 சதவீதத்தை இத்தகைய குறுக்கு வழிகளில் உலகத்தின் ஒரு சதவிகிதமே உள்ள சில பேர் அனுபவிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பணம் எவ்வளவு என்பதை அவரவர் கணிக்கட்டும். ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இத்தகைய குறுக்கு வழி வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள பணம் யாவும் நியாயமற்ற வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றி மக்களைச் சரண்டி சேர்க்கப்பட்டவை.

இத்தகைய வங்கிகளில் பணம் சேமிக்கப்படுவது அதன் மிகக்குறைந்த வரி அல்லது வரியற்ற தன்மைக்காக அல்ல மாறாக, கணக்கின் உரிமையாளர்களைப் பற்றிய தகவல்கள் அதி ரகசியமாக பாதுகாக்கப்படுவதுதான் காரணம். போபார்ஸ் ஊழலில் அதன் உண்மையான பயனாளியை இந்தியா கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு கூட இத்தகைய ரகசிய கணக்குகளே காரணம்.

நாம் நமது சிந்தனைகளை ஒன்று படுத்துவோம். அந்தப் பணத்தை இந்தியாவிற்கு திரும்பப் பெற உண்டான வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம். தேர்தல் நெருங்கி விட்டது. இதை மக்கள் மத்தியில் நம்மால் இயன்ற வழிகளில் கொண்டு செல்வோம். சுவிஸ் வங்கிக் கணக்குகளை கேட்டுப் பெற அரசை மக்கள் மூலம் வலியுறுத்துவோம்.

இந்தியாவின் சொத்து ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமானது.

நன்றி : பதிவர் சுல்தான்.

முதல் இடத்தில் இந்தியா - பாகம் 1

நம்மை விஞ்ச எந்த நாடும் இல்லை. அமெரிக்கா முதல் ஐந்து இடத்திற்குள் கூட இல்லை. இதை ஒலிம்பிக் போட்டியில் வைத்திருந்தால் தங்கப்பதக்கம் நமக்கே நமக்கு. அதை விட உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து கூட இந்தியாவை முந்த முடியவில்லையாம். நிரம்ப மகிழ்ச்சியா அல்லது இந்திய வறுமையைப் பற்றி நான் கிண்டலாக குறிப்பிடுவதாக எண்ணுகிறீர்களா?.

உலக நாடுகள் அனைத்தையும் சேர்த்தாலும் அதை விட கூடுதலாக சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பது இந்திய நாட்டினர்தான். இரண்டாவதாக உள்ள ரஷ்யா இந்தியாவை விடவும் நான்கு மடங்கு குறைவு. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

உலக நாடுகள் கொடுத்த கெடுபிடிகளின் காரணமாக, தனது நாட்டில் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களைத் தர சுவிஸ்நாடு தற்போது தயாராக இருக்கிறது. ஆனால் அதை அந்தந்த அரசாங்கங்கள்தான் கேட்டுப் பெற வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது.

நம் அரசு கேட்குமா? ஏன் கேட்காது என்பதற்கு காரணங்களை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நம் அரசை கேட்கச் செய்ய நாம் அழுத்தமான இயக்கமாக இயங்க வேண்டும். இதை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது நல்ல இந்தியனின் முன்னுள்ள முக்கிய கடமை. நேர்மையான இந்தியரே! தார்மீகப் பொறுப்பு ஏற்க முன் வாருங்கள்.

இந்தியா ஏழை நாடா? யார் சொன்னது? சுவிஸ் வங்கிகளிடம் கேட்டுப் பாருங்கள். இந்திய கள்ளக் கணக்கு சொத்தின் மொத்த மதிப்பு 1500 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்தியாவின் வெளிநாட்டுக் கடனை 13ஆல் பெருக்க வரும் தொகை. அதாவது 13 மடங்கு. இந்தப் பணத்தைக் கொண்டு 45 கோடி மக்களுக்கு, ஆளுக்கு ஒரு இலட்சம் தர இயலும். இப்போது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?


இவ்வளவு பெரிய தொகையும் நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்யத்தில் ஊறித் திளைக்கும் IAS, IRS, IPS அதிகாரிகள் ஆகியவர்களால் வைக்கப்பட்டுள்ளது. இவை மக்களைச் சுரண்டியதாலும் ஏமாற்றியதாலும் வந்தவை. சுரண்டப்படும் அந்த ஏழைக்குச் சொந்தமானவை. சிந்தியுங்கள்!!! அவை உனக்கும் எனக்குமானவை, இந்திய மக்களுக்குச் சொந்தமானவை!.

இந்தப் பணம் முழுதும் திரும்ப பெறப்பட்டால் 24மணி நேரத்துக்குள் இந்தியக் கடனை அடைத்து விடலாம். மிகுதியுள்ள 12மடங்கு தொகையையும் வருவாய் வரும் நல்ல வழிகளில் முதலீடு செய்தால், வரும் லாபம் மட்டுமே இந்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் தொகையை விட கூடுதலாகும். எல்லா வரிகளையும் நீக்கி விட்டாலும் கூட இந்தியாவை சுலபமாக வழி நடத்த முடியும்.

"ஒரு ஆண்டில் சுமார் 80000 பேர் சுவிஸ் நாட்டுக்குப் போகிறார்கள். அவர்களில் 25000 பேர் அடிக்கடி போகின்றார்கள். இவர்களனைவரும் சுற்றுலாவுக்காக மட்டும் செல்லவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வேறு என்ன காரணம்?" என்று தவறான பணப்புழக்கத்தை கண்காணிக்கும் துறையின் ஒரு அதிகாரி கேட்கிறார். அவர் கேட்பது, World Trade Organisationல் நடக்கும பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருப்பதால் ஜெனீவாவுக்கு தொடர்ந்து போய் வந்து கொண்டிருக்கும் வணிக அமைச்சின் அரசதிகாரிகளைப் பற்றியதல்ல என்பது புரிகிறதா?.

நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்ய அதிகாரிகள், கிரிக்கெட்காரர்கள், சினிமா நடிகர்கள், செக்ஸ் வியாபாரிகள், பாதுகாக்கப்பட்ட உயிரினக் காவலர்கள் போன்றவர்கள் இந்தியாவின் சொத்து சுகத்தை சூறையாடி எவ்வளவு குவித்துள்ளார்கள் என்பதை மேலும் படியுங்கள். இங்கே சொல்லப்பட்டிருப்பது சுவிஸ்நாட்டு கணக்கு மட்டும்தான். மற்ற வெளிநாட்டு வங்கி கணககுகள்??

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் பற்றிய Swiss Banking Association உடைய 2006ம் ஆண்டு அறிக்கையின் படி சுவிஸ் நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள வெளிநாட்டவர் தொகை.


முதல் ஐந்து இடங்கள்:
1. இந்தியா - 1456 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. ரஷ்யா - 470 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. U.K. - 390 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
4. யுக்ரைன் - 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. சீனா - 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

மற்ற உலக நாடுகளிலுள்ளோர் வைத்துள்ள தொகையை கூட்டினாலும் இந்தியர்கள் வைத்துள்ள 1456பில்லியன் அல்லது 1.4 ட்ரில்லியன் டாலர்களைத் தொடுகிறதா? கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


எல்லாம் அவன் செயல்


தானே தயாரித்து கதாநாயகனாகவும் அறிமுகமாகி இருக்கிறார், வெளிநாடு வாழ் இந்தியரும், தொழிலதிபருமான ஆர்.கே. மலையாள சிந்தாமணி கொலை வழக்கை கருவாக கொண்ட ஒரு Thriller வகை படம் தான் 'எல்லாம் அவன் செயல்'.
அறிமுக கதாநாயகனை வைத்து, repeated audience க்கு வழியில்லாத ஒரு thriller படத்தை தில்லாக, த்ரில்லாகவே கொடுத்த இயக்குனர் ஷாஜி கைலேஷ்கு ஒரு சபாஷ்.வீரத்தளபதி ரிதீஷ்க்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கும் ஆர்.கே. வுக்கு ஒரு வெல்கம் பொக்கே.
தொடக்கம் முதல் இறுதி வரை முறைப்புடனே வசனம் பேசுகிறார் ஆர்.கே. ரகுவரன்,விசு,சுகன்யா,ரோஜா போன்ற பல கதா பாத்திரங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.வடிவேலு லேசாக தான் கிச்சுகிச்சு மூட்டுகிறார். Heroism இல்லாமல் கொஞ்சம் இயல்பாக இருந்திருந்தால் 'எல்லாம் அவன் செயல்' பாராட்டப்பட வேண்டிய படம்.

எனது மதிப்பீடு : 4/10

Wednesday, March 4, 2009

தண்ணீர் தண்ணீர்...


நம் அனைவருக்கும் தண்ணீரின் அருமை தெரியும். ஒரு காலத்தில் தண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது என்று டி.வி.யில் செய்தி வந்தால் அதைப்பற்றி ஒரே பேச்சாக இருக்கும்!!!

தற்போது நிலைமயே வேறு!! தண்ணீரை விலைக்கு அனைவரும் வாங்கும் நிலை!!!

ஆயினும், நம்மிடையே தண்ணீரைப் பற்றி நம்மிடையே என்ன விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது?

ஏதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறதா என்றால் வாயளவில்தான் உள்ளது.'பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்' என்கிற நிலையில்தான் உள்ளது!

தண்ணீர் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது!! தண்ணீர் சேமிப்பு முறைகளைக் கையாளவில்லையென்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுவர்!

ஆகையால், குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பைப்பற்றி அவசியம் அனைத்துப் பள்ளிகளிலும், வீட்டில் பெற்றோர்களும் சொல்லித்தர வேண்டும்!!

தண்ணீர் சேமிப்பு பற்றிய சில தகவல்கள்:

* ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம்.

அதேபோல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தினால், நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான்
தேவைப்படும்.

* கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம்.

* பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம்.

* வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால், அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள். அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம்.

* காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.

சுயநலம், அலட்சியப் போக்கு ஆகியவை இங்கு அதிகம்!!!

1. சாலையோரங்களில் பொதுகுடிநீர் குழாய் நிரம்பி ஓடிக்கொண்டு இருக்கும்!!!

2. தண்ணீர் 4 மணிநேரம்தான் வருகிறது என்றால், அதில் அடைக்கும் குழாய் பிடுங்கப்பட்டு இருக்கும்! தண்ணீர் தானே வந்து தானே நிற்கும்!!!

3. குடிதண்ணீரை சேமித்து குளிப்பது, தோட்டத்தில் பாய்ச்சுவது, கார் கழுவுவது!!

4. தண்ணீர் அதிகமாக வந்தால் ஹோஸ் மாட்டி கிணற்றுக்குள் தண்ணீர் வரும் வரை சேமிப்பது?(உண்மை!!)

இதையெல்லாம் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும்!!

நாடுகளின் எல்லைதாண்டிய நதிநீர், ஏரிநீர் பங்கீடு:

பலவேறு நாடுகளின் எல்லைப்பகுதி தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக பங்கிட்டு சிறப்பாக உபயோகப்படுத்துவது என்ற விழிப்புணர்வு தற்போது மிக அவசியமாக உள்ளது!

இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம்
தேதியை உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கிறது!

உலகின் 263 ஏரிகள், மற்றும் நாடுகடந்து ஓடும் ஆறுகள் 145 நாடுகளை இணைக்கின்றன! இது உலகின் மொத்த நில்ப்பரப்பில் பாதியாகும். அனைத்தும் குடிநீர்தான்! இதில் அடித்துக்கொள்ளாமல் சமாதானமாக பங்கிட்டுக்கொண்டாலே, நாம் எதிர்கால தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும்!

கடந்த 60 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான, உலக நாடுகளின் நாடுகடந்து பாயும் நதிநீர்ப்பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன!!! (ஆச்சரியம்) நம்மால் காவிரி, கோதாவரி பிரச்னையையே தீர்க்கமுடியலையே!

நேரமிருந்தால் இங்கே http://www.unwater.org/worldwaterday/flashindex.html செல்லவும்.

பணநாயக இந்தியா ...


இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!

ஆமாங்க!!! உண்மைதான்!!! நம்புங்க!!!

எந்த செலவுல முந்தி இருக்கு என்று கேட்கிறீர்களா?

வேற எந்த செலவுல!!! தேர்தல் செலவில்தாங்க!

எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க?

ரூ. 10,000 கோடி?

இந்தியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம், மத்திய-மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத்தொகை பாரக் ஒபாமாவும் ,ஏனைய அரசியல்வாதிகளும் நடந்து முடிந்த தேர்தலில் செலவிட்ட தொகை 8000 கோடியை விட அதிகம்!

8000 கோடிதான் அமெரிக்கவரலாற்றின் அதிகபட்சம்!

அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஓராண்டு செலவுத்தொகையைவிட நான் ஒரு சில மாதத்தேர்தலுக்கு செலவிடும் தொகை அதிகம்!

இதுவும் ஆந்திரா,ஒரிசாவைத் தவிர்த்தாம்!

இந்தியாதான் தேர்தலுக்கு உலகத்திலேயே அதிகம் செலவு செய்யும் நாடாக இருக்கும்!

இது கடந்த 1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த முதலீட்டு அளவாகும் என்று சொல்கிறார்கள்!

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடு அளவுக்கு நாட்டின் நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் இந்தப் பணம் செலவிடப்பட வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், மிகப்பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுவதால், மேலும் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொகையில் 20 விழுக்காடு அதாவது ஆயிரத்து 300 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு ஆகும் செலவாகும். அதாவது தேர்தல் ஆணையத்தின் செலவு தொகை.

எஞ்சிய தொகை முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படக் கூடியது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிதியாண்டின் 3ஆவது காலாண்டு இறுதியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.3 விழுக்காடாக உள்ளது. இது மிகவும் குறைந்த விகிதமாகும்.
சுமார் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணமாகமோ அல்லது சட்டவிரோதமாகவோ அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் ஆந்திராவும், கர்நாடகமும் முதலிடம் வகிக்கின்றன.


வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த 50 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கிற்குப் பணம் என்ற அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் தவிர, மாநில அரசுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


அரசியல் கட்சிகளுக்கான செலவு ரூ. 1,650 கோடி என்று தெரிய வந்துள்ளது.

49' O


வாக்காளர்களே சற்றே சிந்தியுங்கள் :

எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேர்தலில் ஒரு வாக்காளர் என்ன செய்யலாம் என்பதற்கு நமது சட்டம் அளித்துள்ள வழிமுறைதான் 49 ஓ பிரிவு.

இன்றும் அர்த்தமுள்ள முழக்கம் ஓ போடு என்பதாகும்.


ஓ போடு என்றால் என்ன ? ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். "எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை," என்று சொல்லுகிறார்கள்.

அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

அதுதான் 49 ஓ.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.

ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

ஓ' போடு கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தப் பிரசுரத்தை இயன்ற அளவுக்கு பரப்புங்கள். இந்தக் கருத்தை நண்பர்களுடன் விவாதியுங்கள்.

வெண்ணிலா கபடி குழு


வெண்ணிலா கபடி குழு பெயரே சொல்லிவிடுகிறது கபடி பற்றிய படம் என்று.

கூடவே கிராமத்து மண்வாசனையும் , அழகான காதலையும் சேர்த்து கபடி விளையாட விட்டுருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சிறு வயது வாழ்கையை சிறிய frame ல் காட்டி அழகாக தொடர்கிறது பெரிய frame ற்கு . விஷ்ணு,சரன்யா மோகன்,கிஷோர் என அத்துணை பேரும் செயற்கை தனமில்லாமல் இயற்கையாகவே நடித்துள்ளனர். தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள் இளமை துள்ளும் வகை. படத்தின் மிகப்பெரிய பலம் செல்வகணேஷின் இசை. 'சுப்ரமணியபுரம்' போன்றதொரு இனிமையான அறிமுகம் செல்வகணேஷ்.

நீளமான காட்சிகள் அதிகமுள்ளதால் அலுப்பு நிறையவே ஏற்படுகிறது. முடிவை மட்டும் சோகமாக வைக்க வேண்டும் என்பது ஏதோ வேண்டுதல் போல. ஏற்கனவே வந்த சென்னை 28, லகான்,சக்தே இந்தியா போன்ற சாயல் இருந்தாலும் 'வெண்ணிலா கபடி குழு' ரசிக்க வைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தரமான ஒரு படத்தை தயாரித்ததற்காக ஆனந்த் கே சக்கரவர்த்தியை பாராட்டலாம்.

இறுதியாக என் கருத்து : 6/10

உண்மை அறி பாகம் 2



இந்த வலைபதிப்புக்காக நான் பல இணையங்களை வலை வீசி தேடினேன், சில சுறாகள் சிக்கின. அதில் ஒன்று OPEC.ORG (Organization of the Petroleum Exporting Countries) கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.அந்த வலையத்தை அலசிய போது, சில புள்ளி விவரம் என்னை வியக்க செய்தது! அதில் ஒரு பகுதி Who gets what from imported oil? இறக்குமதி கச்சா எண்ணையால் யாருக்கு லாபம்?


அவர்களுடைய ஆய்வு துறை (Research Division, OPEC, Vienna, Austria, 2001) செய்த ஆய்வில், கடந்த 1996 முதல் 2001 வரை உள்ள புள்ளிவிவரம்:


1. ஏற்றுமதி கச்சா எண்ணையால் OPEC நாடுகள் சுமார் $850 மில்லியன் சம்பதிக்கும் வேலையில் இறக்குமதி செய்யும் நாடுகள் (அரசுகள்) சுமார் $1.3 ட்ரில்லியன் (Trillion) (G7 நாடுகள் மட்டும்) வரியின் மூலம் சம்பாதிக்கிறது, OPEC நாடுகள் தங்கள் எண்ணை வளத்தை விற்று வருவாய் ஈட்டும் நேரத்தில் இறக்குமதி செய்யும் அரசுகள் வரியாக இருமடங்கு சம்பாதித்து விடுகிறது. இதில் இந்திய அரசும் சளைத்தவர்கள் அல்ல! இந்திய அரசும் UKக்கு இணையாக வரி விதிக்கிறது! இது என்ன கூத்து? இது பகல் கொள்ளையா? இதை படித்தபோது எனக்கு ஒரு பழமொழி ஞபகத்துக்கு வருது, சுண்டக்கா கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்பார்களே இது தானா அது? அட சுமை கூலினு கூட சொல்ல முடியாது இந்த வரியை, சுமை கூலி உழைபவனுக்கு கொடுக்கும் காசு. இந்த காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா?


2. G7 நாடுகளில் பெட்ரோல் விலை புள்ளி விவரங்கள்:அமெரிக்கா - ரூ 21கனடா - ரூ 21.6ஜப்பான் - ரூ 44.5 இங்லாந்து - ரூ 53.55என்று நீள்கிறது, இதில் வரியின் பங்கு தான் அதிகம். மேலே உள்ள படத்தில் அதன் Break-up உள்ளது பாருங்கள்! நீல நிறம் தான் கச்சா எண்ணை விலை, மஞ்சள் நிறம் கச்சா எண்ணையை பெட்ரோல் எடுப்பதற்காகும் செலவு, சிவப்பு தான் நம் அரசு நம்மேல் சுமத்தும் வரி!!!! இதில் இந்திய பெட்ரோல் விலை இங்லாந்தின் விலைக்கு நிகராக இருக்கும்.


3. மேலும் OPEC வலையில் ஒரு தகவல்:" A Taxing Business.... The real burden on the consumer is taxation, and the real profiteers are the governments of the consuming countries. "கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நுகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.


நானும் என் பங்குக்கு சில பெட்ரோல் விலை புள்ளி விவரங்களை என் வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்டு பெற்றேன்:


பெட்ரோல் விலை ,அடைப்பில் அதன் கிரேடுகளும்:


அமெரிக்கா - ரூ 22 (87 கிரேடு)


பர்மா (மியான்மர்) - ரூ 28.5 (83 கிரேடு)


மலேசியா - ரூ 23 (83 கிரேடு)


சிங்கப்பூர் - ரூ 41 (92 கிரேடு)


ஆஸ்ட்ரெலியா - ரூ 25


பாகிஸ்தான் - ரூ 27


ஒரு விலை கூட இந்தியாவில் விற்கப்படும் விலைக்கு பக்கம் கூட வரவில்லை... ஏன் இந்த கூத்து? ஒருவேளை நாம் இன்னும் இங்லாந்தின் வரி கோட்பாடுகளை பின் பற்றுகிறோமோ? இந்த புள்ளிவிவரங்கள் நம் நாடு பத்திரிக்கைகளுக்கு தெரியவில்லையா? ஏன் அவர்கள் மக்களுக்கு அதை கொண்டு செல்வதில்லை? என்ன தான் நடக்கிறது? இதயை தடுப்பது யார்? இது ஒரு புறம் இருக்க, திரு. மணிசங்கர் போன்ற மந்திரிகள் சொல்லும் சுடு சொற்கள்," பெண்கள் சினிமா போவதையும், சேலை வாங்குவதையும் குறைத்துக்கொண்டால் காஸ், பெட்ரோல் போன்றவை எளிதில் வாங்க முடியும்"நாம சினிமா போவதும், ஆடைகள் வாங்குவதும் கூட இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளில் கண்ணை பறிக்கிறது போலும்? இவரால் இதை தன் மனைவியிடம் சொல்லுவாரா? இவர்கள் ஏன் நம் பணத்தில் உளாவரும் குளிர் சாதன வசதி படைத்த கார்களில் செல்வதை நிறுத்தலாமே? நம் பணத்தில் விமான பயணத்தை நிறுத்தலாமே? வெட்டி பேச்சு நடத்துவதை நிறுத்தலாமே?


இத்தனைக்கும் மேலாக, அவர்கள் சொல்லும் மானியம் என்னும் வார்த்தையை கேட்க்கும்போது. நம் தலையில் பன்முனை வரி சுமத்தி,அதில் பிச்சையிடுவதுபோல் கதைவிடுவதை நாம் உணரவேண்டும். நமக்காக பேச நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரும் வரமாட்டார், பாராளமன்ற உறுப்பினரும் வரமாட்டார். ஏனென்றால் அவர்கள் காசு கொடுத்து பெட்ரோல் வாங்கி இருக்க மாட்டார்கள்.நம்முடைய கேள்விகளுக்கு இந்த அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும், நம் ஆதங்கம் கரையை ஒரு நாள் கடக்கும். இனியும் விலை கூடினால்,மாட்டு வண்டிகள் வீதிக்கு வரகூடும், அது மட்டும் போதாது, மக்களும் வரவேண்டும், நேபாளம் கண்டது, இந்தியாவும் காணட்டும்.


(பி.கு: இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பல வலைப்பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டு இந்திய மக்களுக்கு ஒரு வலையில் தாருவதற்கான முயற்சியே. Thanks to OPEC.org, wikipedia.org, home.att.net/~cat6a, adventuresinenergy.com, api-ec.api.org, etc.,)


நன்றி : பதிவர் நா ஜெயசங்கர்

Tuesday, March 3, 2009

உண்மை அறி பாகம்1


பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்

ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பெட்ரோல் விலை பற்றிய விஷயங்களை இங்கே பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படி தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமும் ஆகிவருகிற நேரமிது. ஏனெனில், ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம். உலக அளவில் இதில் நாம் இரண்டாம் இடம்!


இந்த எரிபொருள் விலை உயர்வு எங்கெல்லாம் நடுத்தர மக்களை பாதிக்கும்:


1. காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களில் விலையும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில், இந்த சரக்குகளின் போக்குவரத்துக்கு எரிபொருள் இன்றியமைதாத தேவையாகிவிட்டது.


2. நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவைகளான ரெயில், பேருந்து, ஆட்டோ என அனைத்தின் சேவை கட்டணங்களும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது.

ஏன் இந்த நிலை? என்ன தான் உண்மை? இந்த பெட்ரோல் விலையின் சூட்சமம் தான் என்ன? சில இனைய வலையில் இருந்து கிடைத்த சில புள்ளி விவரங்களை இங்கு பார்ப்போம்...

நமது அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் எண்ணை கிணறுகள் மூலம் 35 முதல் 40 சதவிகிதம் வரை பெட்ரோலிய வளத்தில் தன்னிறைவு பெறுகிற நாடு நம்முடையது! உங்களால் நம்பமுடிகிறதா?


எல்லாம் படித்துப் பார்த்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம்...


1. ஒரு பேரல் இறக்குமதி செய்யபடும் கச்சா எண்ணை விலை $ 64.84 ( ஒரு பேரல் = 160 லிட்டர்.) எனில், இந்திய ரூ 2918/-

2. ஒரு பேரலில் சராசரியாக 80 முதல் 90 லிட்டர் பெட்ரோல் கிடைக்கும். அது மட்டும் அல்லாது, வெறு சில விலை உயர்ந்த உற்பத்தி கழிவுகளும் கிடைக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ 47.49 (83 கிரேடு) , 48.89 (91 கிரேடு) என பல விலையில் விற்கப்படுகிறது.

3. உற்பத்தி கழிவுகள்: மண்ணெண்ணை, டீசல் , பென்சீன், பெட்ரோலியம் wax , Praffin, எல்லா வகையான Lubricants, நீங்கள் உங்கள் இருசக்கர வகனங்குளுக்கு உபயோகிக்கும் 2T, 3T எண்ணை வகைகள், தார் மற்றும் பல. பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கிற கழிவுகளும் விலை உயர்தவைகளே! இவை எல்லாவற்றுக்கும் மேல், பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கும் மற்றும் ஒரு கழிவு LPG எனபடும் எரிவாயு.

4. பென்சீன் விமானதின் எரிவாயு. இது லிட்டருக்கு சுமார் ரூ 200 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

5. டீசல் எரிவாயு லிட்டருக்கு சுமார் ரூ 35 வரை விற்கப்படுகிறது.

6. மண்ணெண்ணை லிட்டருக்கு சுமார் ரூ 25 முதல் ரூ 35 வரை விற்கப்படுகிறது.

7. Prafin - இது ஒரு கிலோ சுமார் ரூ 250 முதல் 300 வரை விற்கப்படுகிறது.

8. 2T, 3T Oil - இது ஒரு லிட்டர் சுமார் ரூ 120 முதல் 150 வரை விற்கப்படுகிறது.

9. தொழிற்சாலைகளில் உபயோகிக்கபடும் Lubricants - இது ஒரு லிட்டர் சுமார் ரூ 200 முதல் 400 வரை தரவாரியாக விற்கப்படுகிறது.

10. தார் - இந்த கழிவும் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. இன்னும் பல பொருட்கள் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இதில் உண்மையில் வீணாய் போகும் வாயுதான் நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தபடும் LPG. இது பல வகையாக பிரிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் உணவகம் போன்ற வியாபார உபயோகத்துக்கு ஒரு விலையும் ( ஒரு கிலோ ரூ 45 -60 ) , வீடுகளில் சமையலுக்கு ஒரு விலையுமாக (சுமார் ஒரு கிலோ ரூ 20 -25க்கு) விற்க்கபடுகிறது.


சில Encyclopedia வலையிலிருந்து கிட்டிய தகவல் படி கச்சா எண்ணையில் சுமார் 88 சதவீதம் எரிவாயுவாக, மீதம் உள்ள 12 சதவீதம் Lubricating oil, Paraffin wax, Plastic, Tar என பல உபரி பொருட்களாக தயாரிக்கப்படுகிறது.


இதில் ஒரு கூத்து என்னவென்றால் 160 லிட்டர் கச்சா எண்ணை சுமார் 170 லிட்டர் பெட்ரோலியப் பொருட்களை நமக்கு தருகிறது (நன்றி: American Petroleum Institute)இப்படி, கச்சா எண்ணை ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பணமாக்கப்படும்போது, எண்ணை நிறுவனங்கள் எப்படி நஷ்டத்தில் இயங்கமுடியும் என்று எனக்கு வரும் அதே சந்தேகம் உங்களுக்கும் வரலாம்.


சில இணைய தளங்கள் மூலம் கிடைத்த தகவல்படி, எனது அறிவுக்கு எட்டியவரை... இதோ சில காரணங்கள்:

இந்திய அரசாங்கம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணைக்கு 63% (23 per cent + Rs 7.50 per litre) வரி விதிக்கிறது. அதாவது, ஒரு பேரலின் விலை ரூ 2918 எனில், அதற்கு நமது அரசாங்கம் விதிக்கும் இறக்குமதி வரி ரூ 1839. ஆக இறக்குமதிக்குப்பின் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை ரூ 4757!


அத்துடன் விடவில்லை.எண்ணை நிறுவனம் உற்பத்தி செய்த பெட்ரோல் மற்றும் அதன் கழிவுகளுக்கு, மத்திய அரசு விற்பனை வரி வேறு விதிக்கிறது. அதுவும் சாதரன வரி அல்ல. 25% முதல் 30% வரை! அத்தோடு விட்டதா என்றாலும் இல்லை!இந்த பெட்ரோல் மாநிலங்களுக்கு செல்லும் போது, அங்கு மாநில அரசு 20% முதல் 30% வரை விற்பனை வரி விதிக்கும். ஆக 100%-க்கு மேல் இறக்குமதி மற்றும் விற்பனை வரிகள் விதிப்பப்படுகின்றன.


எண்ணை நிறுவனங்கள் படு ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றன. உதாரணதுக்கு - IOCயில் ஒரு கார் ஓட்டுனர் சுமார் ரூ 20,000 சம்பளமாக பெறுகிறார். நம்ம ஊரு கால் Taxi ஓட்டுனர் ரூ 2,000 சம்பளதுக்கு படாத பாடுபடுகிறான். ஒரு IT நிறுவனதின் செலவுகளை மிஞ்சுகிறது இந்த எண்ணை நிறுவனங்களின் செலவுகள்.


உண்மை இப்படி இருக்க, அரசுகள் நமக்கு மானியம் வழங்குவதாகவும், அதனால் அரசுக்கு பளு கூடுவதாகவும் கூசாமல் கூறுகிறார்கள்!என் அறிவுக்கு எட்டிய வரை, என் கணக்கும் சரி என்றால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 20 முதல் 22 வரை ஆகலாம். ஏனென்றால், அமெரிக்காவில் மானியங்கள் கிடையாது, அங்கெல்லாம் எண்ணை நிறுவனங்களை அரசு நடத்தவில்லை, தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் ரூ 21 க்கு ஒரு லிட்டட் பெட்ரோல் வழங்க முடியும் என்றால், நிச்சயம் நாமும் ஏறத்தாழா அந்த விலைக்கே தயாரிக்க முடியும் என்பது என் கூற்று.