Thursday, December 17, 2009

சுகந்தி டீச்சர் -- பாரதி கண்ட புதுமை பெண்

இன்னும் ஒரு பள்ளி வேன்விபத்து... வேதாரன்னியத்தில்...

பள்ளி வேனை ஒட்டி வந்த டிரைவருக்கு லைசன்ஸ் கிடையாதாம்! செல்போன் பேசிக்கொண்டு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது..விபத்து நடந்தவுடன் டிரைவர் ஓடிவிட்டார்....

கிளீனர் தான் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார்... வேனுக்குள் இருந்த ஆசிரியை சுகந்தி வேனுக்குள் இருந்து வெளிவர முடியாத சூழலிலும் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை வெளியில் அனுப்பி கிளீனர் உதவியுடன் காப்பாற்றி இருக்கிறார்...

பதினோரு குழந்தைகளை தான் அவரால் காப்பாற்ற முடிந்தது....அவருக்கு நீச்சல் தெரியாததால், அவரும் அந்த குலத்திலேயே மூழ்கி இறந்து விட்டார்.... தனது உயிரை பொருட்படுத்தாமல், தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை உயிரைக்கொடுத்து காப்பாற்றிய அந்த இளம் பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அது தான் வீரம்... அது தான் பாராட்டப்படவேண்டிய மனித பண்பு...
தஞ்சை பெண்களின் வீரம் பற்றி குந்தவை நாச்சியார் சொல்வார்... இங்கே இயல்பாகவே துணிச்சல் எங்களுக்கு வருகிறது என்று! உண்மை தான் போல!

சுகந்தியை பற்றி படிக்க படிக்க நெஞ்சு விம்முகிறது!

அவருக்கு 21 வயது தான் ஆகிறது.. பட்டதாரி... திருமணம் ஆகவில்லை! எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த பள்ளிக்கு அந்த வேனிலேயே சென்று வருகிறார்.... குறைந்த சம்பளம் தான்!

அவருடன் குளத்தில் இறந்த குழந்தைகள் பெரும்பாலும் அவரது கிராமத்தை சார்ந்தவர்கள் தான்..... பதினோராவது குழந்தையை காப்பாற்றும்போது அந்த குழந்தை அவரது கை நழுவி குளத்துக்குள் ஆழத்தில் சென்றுவிட்டதாம்.... இவர் நீச்சல் தெரியாத நிலையிலும் உள்ளே குனிந்து அந்த குழந்தையை வெளியே எடுத்து இருக்கிறார்..... அதற்குள் இவர் மூச்சு திணறி.... எல்லாம் முடிந்து விட்டது.... ஆனால் அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார்!

எல்லோருக்கும் செல்ல பெண்ணாக அந்த கிராமத்தில் வளம் வந்த சுகந்தி இப்போது இல்லை! எனினும் தன்னால் ஆன செயலை எல்லாம் இறுதி வரை செய்து விட்டு தான் மறைந்து இருக்கிறார்!

இதை பற்றி ஏடுகளில் வந்த செய்திகள் சில...

’கட்டளைவெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை வசந்தி ,பள்ளியில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.தினமும் அந்த வேனிலேயே செல்லும் அவர் அந்தக் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராம்.வேன் குளத்தில் விழுந்ததுமே நீந்தி வெளியே வர முயன்றிருக்கிறார்.குழந்தைகள் தண்ணீருக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பதறி..அடுத்த கணமே உள்ளே மூழ்கியவர் , நான்கு குழந்தைகள் வரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றி விட்டார்.ஐந்தாவது தடவை உள்ளே போனவர் ...இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் மூச்சு முட்டி உயிரை விட்டுவிட்டார்.உடலைக் கரையேற்றும்போதும் அந்த இரு குழந்தைகளையும் கையில் இறுகப் பிடித்தவாறே சுகந்தி டீச்சர் இருந்த காட்சியைப் பார்த்துக் கிராமமே விம்மியது’’- ஜு.வி.09.12.09

’மகராசி!சுகந்தி ஆசிரியை மட்டும் குப்புறக் கவிழ்ந்த வேனுக்குள்ள இல்லன்னா இன்னைக்கு எங்க எல்லாப் புள்ளைகளையும் இழந்துட்டு நாங்க அனாதையாயிருப்போம்.பாவம் அந்தப் பொண்ணு உசிரக் கொடுத்து எங்க புள்ளகளக் காப்பாத்தியிருக்கு’என,குழந்தைகள் பலரையும் உயிரோடு மீட்ட ஆசிரியை சுகந்தியைப் பற்றிப் பெற்றோர் பலரும் கண்ணீர் ததும்பப் பேசுகின்றனர்.’’-குமுதம்,16.12.09

மற்றவர்களை உயிரோடு எரிப்பவர்களை தீரர்கள் என்றும் அஞ்சாநெஞ்சன் என்றும் பேசும் தமிழகம், இந்த சின்ன பெண்ணின் வீரத்தை, தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிக்கவா போகிறது????

கேட்குமா நீதியின் குரல்

நீதி​மன்​றங்​க​ளில் தேங்​கிக்​கி​டக்​கும் வழக்​கு​களை விரைந்து விசா​ரித்து தீர்ப்​பு​க் கூ​றா​விட்​டால் நீதித்​துறை நடை​மு​றையே நாள​டை​வில் நொறுங்​கி​வி​டும்,​​ மக்​க​ளுக்கு நீதித்​துறை மீதே நம்​பிக்கை போய்​வி​டும்,​கிளர்ந்து எழு​வார்​கள் -​ கல​கம் வெடிக்​கும் என்று எச்​ச​ரித்​தி​ருக்​கி​றார் உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதி​பதி கே.ஜி.​ பால​கி​ருஷ்​ணன்.​ இப்​போ​தா​வது இது​பற்​றிய கவலை நீதித்​து​றைக்கு எழுந்​தி​ருக்​கி​றதே,​​ மகிழ்ச்சி.

​சம​ர​சப் பேச்​சு​வார்த்தை மூலம் வழக்​கு​க​ளைத் தீர்க்​கும் மாற்று வழி குறித்த கருத்​த​ரங்​கம் பெங்​க​ளூ​ரில் நடை​பெற்​றது.​ அதில் பங்​கேற்​றுப் பேசி​ய​போது கே.ஜி.​ பால​கி​ருஷ்​ணன் இந்த எச்​ச​ரிக்​கையை விடுத்​தி​ருக்​கி​றார்.​வழக்​கு​கள் தேங்​கி​வ​ரு​வது குறித்து கடந்த 20 வரு​ஷங்​க​ளா​கவே யார் யாரோ எச்​ச​ரித்து வரு​கின்​ற​னர்.​ மத்​திய சட்​டக் கமி​ஷன்,​​ உயர் நீதி​மன்​றங்​கள்,​​ உச்ச நீதி​மன்​றம்,​​ மத்​திய சட்​டம்,​​ நீதித்​து​றைக்​கான நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளைக் கொண்ட ஆ
லோ​ச​னைக் குழு போன்​றவை இந்த எச்​ச​ரிக்​கை​களை விடுத்து வரு​கின்​றன.​ ஆனால் உரிய பரி​கார நட​வ​டிக்​கை​கள்​தான் போது​மான அள​வில் எடுக்​கப்​ப​டா​மல் இருக்​கின்​றன.​

பெங்​க​ளூர் கருத்​த​ரங்​கில் பேசிய உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதி​பதி நாட்​டில் போதிய எண்​ணிக்​கை​யில் சார்பு நீதி​மன்​றங்​கள் இல்​ல​தா​ததே வழக்​கு​க​ளின் தேக்​கத்​துக்கு முக்​கிய கார​ணம் என்று வலி​யு​றுத்​தி​யி​ருக்​கி​றார்.​ வழக்​கு​கள் தேங்​கு​வ​தற்​கான பல்​வேறு கார​ணங்​க​ளில் அது​வும் ஒன்று என்​பதை மறுக்க முடி​யாது.​இப்​போ​துள்ள 16,000 சார்பு நீதி​மன்​றங்​க​ளில் சுமார் 2,000-க்கும் மேற்​பட்ட நீதி​ப​தி​க​ளின் பத​வி​கள் காலி​யாக இருப்​ப​தை​யும் அவர் சுட்​டிக்​காட்​டி​யி​ருக்​கி​றார்.​ காலி​யி​டங்​களை உட​னுக்​கு​டன் நிரப்​பு​வ​து​டன் சார்பு நீதி​மன்​றங்​
​ளின் எண்​ணிக்​கையை 35,000 அள​வுக்கு உயர்த்​து​வ​தும் அவ​சி​யம் என்று வலி​யு​றுத்​தி​யி​ருக்​கி​றார்.​

அடுத்​த​ப​ டி​யாக,​​ இந்​தி​யா​வில் வழக்​கா​டு​வ​தற்​கான செலவு மிக​வும் குறைவு என்​ப​தா​லும் வழக்​கு​க​ளின் எண்​ணிக்கை அதி​க​மாக இருக்​கி​றது என்று பேசி​யி​ருக்​கி​றார்.​ நீதி​மன்​றங்​கள் விதிக்​கும் கட்​ட​ணங்​க​ளும் படி​வங்​க​ளின் விலை​யும் வேண்​டு​மா​னால் அரசு நிர்​ண​யிப்​ப​தால் குறை​வாக இருக்​க​லாம்,​​ வழக்​க​றி​ஞர்​க​ளுக்​கான கட்​ட​ணம் அப்​ப​டியா என்​பதை அத்​து​றை​யில் உள்​ள​வர்​க​ளின் மன​சாட்​சியே பதில் கூறட்​டும் என்று விட்​டு​வி​டு​வோம்.​நீதி​மன்​றங்​க​ளில் ஏற்​ப​டும் தாம​த​மும்,​​ செல​வும்,​​ மக்​க​ளுக்கு விரக்​தியை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ எனவே கட்​டப்​பஞ்​சா​யத்து என்று அழைக்​கப்​ப​டும் மாற்று வழி​மு​றையை நாடு​கின்​ற​னர்.​
​நீதித் ​து​றை​யில் பிரிட்​டிஷ் ஆட்​சி​யா​ளர்​கள் தலை​யிட்டு நீதி​மன்​றங்​களை ஏற்​ப​டுத்​து​வ​தற்கு முன்​னால் நம் நாட்​டில் கிரா​மப் பஞ்​சா​யத்​து​களே நியா​யஸ்​த​லங்​க​ளா​க​வும் திகழ்ந்​தன.​ அப்​போது அவற்​றின் குறை​க​ளா​கப் பட்​டிய​லி​டப்​பட்ட பல விஷ​யங்​க​ளில் முக்​கி​ய​மா​னது,​​ அவை நடு​நி​லை​யா​னவை அல்ல என்​ப​தா​கும்.​பஞ் ​சா​யத்​தில் இடம் பெற்​ற​வர்​கள்,​​ கிடைக்​கும் சந்​தர்ப்ப சாட்​சி​யங்​க​ளின் அடிப்​ப​டை​யில்,​​ போதிய சட்ட அறிவு இல்​லா​மல்,​தங்​க​ளு​டைய செல்​வாக்​குக்கு பங்​கம் வராத வகை​யில் தீர்ப்பு வழங்​கி​னார்​கள் என்​ப​து​தான் அந்​தக் குற்​றச்​சாட்​டின் மையக் கருத்​தா​கும்.​ ​

ஆனால் வழக்​குத் தொடுக்​க​வும்,​​ விசா​ரிக்​க​வும்,​​ தீர்ப்பு வழங்​க​வும் அதி​கப் பொருள்,​​ நேரச் செலவு இல்​லா​மல் அந்​தப் பஞ்​சா​யத்​து​கள் நடந்து முடிந்​தன.​சட் ​டம் படித்த வழக்​க​றி​ஞர்​கள் வாதி,​​ பிர​தி​வா​தி​க​ளுக்​காக ஆஜ​ரா​கும் நீதித்​து​றையை நடு​நி​லை​யா​னது,​​ எவர் பக்​க​மும் சாயா​தது என்று பாராட்​டி​னா​லும் அது வழக்கை விசா​ரித்து தீர்ப்பு வழங்​கும் முக்​கி​ய​மான பணியை இழுத்​துக் கொண்டே போனால் அப்​ப​டிப்​பட்ட நீதித்​துறை யாருக்கு வேண்​டும் என்ற கேள்​வியே பெரி​தா​கி​றது.​

சட்​டப்​படி வழங்​கப்​ப​டும் தீர்ப்​பு​கள் தர்​மத்​துக்கு எதி​ரா​ன​வை​யாக இருக்​கும்​போது,​​ மக்​கள் ஆட்சி அமைப்​பின்​மீதே நம்​பிக்கை இழப்​ப​தும்,​​ தீவி​ர​வா​தி​க​ளாக மாறு​வ​தும் தவிர்க்க இய​லா​தவை.​அதிக நீதி​மன்​றங்​கள்,​​ அதிக நீதி​ப​தி​கள்,​​ அதிக வேலை நாள்​கள் போன்​றவை இந்த வழக்​கு​க​ளின் எண்​ணிக்​கை​யைக் கணி​ச​மா​கக் குறைக்​கும்.​

அதை​விட முக்​கி​யம் நீதி​ப​தி​கள்,​​ வழக்​க​றி​ஞர்​கள்,​​ நீதித்​துறை நிர்​வா​கி​கள் ஆகி​யோ​ரின் மனங்​க​ளில் ஏற்​பட வேண்​டிய முக்​கி​ய​மான மாற்​றங்​கள்.​இந்​தியா வறு​மை​யில் உழ​லும் கோடிக்​க​ணக்​கான ஏழை​க​ளைக் கொண்ட நாடு.​ இங்கு நீதி நிர்​வா​கத்​துக்கு அவர்​க​ளு​டைய வரிப்​ப​ணம்​தான் செல​வி​டப்​ப​டு​கி​றது.​ நேர​டி​யாக வழக்​குச் செல​வு​கள் குறைவு போலத் தோன்​றி​னா​லும் அந்த மானி​யமே வரிப்​ப​ணத்தி​லி​ருந்​து​தான் ஈடு​கட்​டப்​ப​டு​கி​றது.​

ஜூன் மாதப் புள்​ளி​வி​வ​ரப்​படி,​​ 1 கோடியே 94 லட்​சம் கிரி​மி​னல் வழக்​கு​க​ளும்,​​ 76 லட்​சம் சிவில் வழக்​கு​க​ளும் தீர்ப்​புக்​குக் காத்​தி​ருக்​கின்​றன.​ இந்த வழக்​கு​களை அடுத்த ஓராண்​டில் விசா​ரித்​துத் தீர்ப்பு வழங்க வேண்​டு​மா​னால்,​​ 1,500 உயர் நீதி​மன்ற நீதி​ப​தி​க​ளும்,​​ 23,000 கீழமை நீதி​மன்ற நீதி​ப​தி​க​ளும் தேவை.​

நிர்​வா​க​மும் நியா​ய​மாக நடந்து கொள்​ள​வில்லை என்​ப​தால் பாதிக்​கப்​பட்ட குடி​மக்​கள் அர​சின்​மீது தொடுத்த வழக்​கு​க​ளும் ஏரா​ளம்,​​ ஏரா​ளம்.​ முறை​யா​க​வும்,​​ ​ நியா​ய​மா​க​வும்,​​ விரை​வா​க​வும் அர​சும் நிர்​வா​க​மும் செயல்​பட்​டால்,​​ பொது​மக்​கள் நீதி​மன்​றத்தை நாட வேண்​டிய அவ​சி​ய​மும் கணி​ச​மா​கக் குறைந்​து​வி​டும்.

​இந்​தி​யச் சிறைச்​சா​லை​க​ளில் சுமார் இரண்​டரை லட்​சம் பேர் விசா​ர​ணைக் கைதி​க​ளா​கத் தீர்ப்பை எதிர்​நோக்​கிக் காத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நிலை​மை​யைப் பற்றி யாரா​வது கவ​லைப்​ப​டு​கி​றார்​களா?​ அதில் எத்​தனை பேர் நிர​ப​ரா​தி​களோ,​​ யாருக்​குத் தெரி​யும்?​வழக்​கு​கள் தேங்​கிக் கிடக்​கின்​றன.​ நீதி தாம​தப்​ப​டு​கி​றது என்​றெல்​லாம் கருத்​த​ரங்​கம் போட்​டுப் பேசிக்​கொண்​டி​ருந்​தால் போதாது.​ செயல்​பட வேண்​டும். படுவார்களா...?

என்னை பொறுத்த வரையில் ஒரு நாட்டின் நீதி மன்றமும், சட்ட மன்றமும் சரியாக நியாயமாக நடைபெற்றால் அந்த நாடு வல்லரசாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

Wednesday, December 16, 2009

மக்கள் சக்தி கட்சி

உள்சுயாட்சி:

கட்சித் தலையீடு இல்லாத, சுய அதிகாரம், நிதி ஆதாரம் பெற்ற உள் சுய ஆட்சி.
கிராமப் பஞ்சாயத்தில் இருப்பது போல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமல் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

குறைவான, விரைவான அரசாங்கம்:

இலஞ்ச ஊழலற்ற, வெளிப்படையான, விரைவான அரசாங்கம்... அதே சமயம் குறைவான அரசாங்கம். மக்களின் தேவை, வசதி கருதி குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்கள் வருடம் முழுவது இயங்க வழிவகை செய்தல்.

பூரண மதுவிலக்கு:

அரசாங்கமே மதுவை ஊக்குவிப்பதால், இலட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது. அக்குடும்பத்திலுள்ள பெண்கள்,குழந்தைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல்.

தனி ஈழமே தீர்வு:

மொழி, மத, இன வேற்றுமை கொண்ட சிங்களப் பேரினவாதக் கொள்கைக்கு ஆட்பட்டு அடிப்படை மனித உரிமைகளைக்கூட பெறமுடியாமலும், நிதமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமலும் தவித்து வரும் ஈழ மக்களுக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு:
மக்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார சமத்துவ நீதியை வழங்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு.

சாதிகளற்ற சமுதாயம்..
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் சாதிகள் அற்ற சமுதாயம் அமையப் பாடுபடுதல்.

கூட்டுத் தலைமை :
மாநில அளவிலிருந்து கிராமக் கிளை வரை சுயநலம், பதவிப் போட்டிகளற்ற, ஜனநாயகத்தன்மை மிகுந்த கூட்டுத்தலைமை கொண்ட உள்கட்சி கட்டமைப்பு.

விரிவான கொள்கைக்கு
http://makkalsakthi.net/index.php?option=com_content&view=article&id=54&Itemid=81


மேலும் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி போட்டியிடுகிறது.

வேட்பாளர் : திரு எஸ். வாஷிங்டன்

சின்னம் : டி.வி.

மற்ற கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக, தங்களது அன்றாட கணக்கு வழக்குகளை அவர்கள் தங்களது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

http://makkalsakthi.net/index.php?option=com_content&view=article&id=51&Itemid=85

அவர்களது முயற்சிகள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

மக்கள் சக்தி கட்சி - ஒரு சீரிய முயற்சி

மக்கள் சக்தி கட்சியானது, கடந்த 5 வருடங்களாக கிராமப்புற மேம்பாடு, தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு, தேசிய நதிநீர் இணைப்பை வலியுறுத்தி மக்கள் ஆதரவைத்திரட்டுதல், சுய முன்னேற்ற நூல்கள், பத்திரிகைகளை வெளியிட்டு இளைஞர்களை தன்னெழுச்சி கொள்ளச் செய்தல் போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளைச் செய்து வந்த இளைஞர்களால் 25.07.2009 அன்று ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சி. அதை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...

கட்சியின் முக்கியக் கொள்கைகள்

இலாபகரமான விவசாயம்:

விவசாயத்தைப் பாதிக்கும் நிலவள மேம்பாடு, நீர்வளம், கட்டுபடியாகும் விலை, விதை, போதிய சந்தை வசதி, கடன்வசதி, அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு, பதப்படுத்துதல், காப்பீடு, இயற்கையோடிணைந்த விவசாய முறை... போன்ற அனைத்துக் காரணிகளையும் ஒரு சேர உயர்த்தும் விவசாயக் கொள்கை.

புதிய பொருளாதாரக் கொள்கை:

அறிவியல் தொழில்நுட்ப, தகவல் தொடர்பு புரட்சி யுகத்தின் காலத்திற்கேற்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவு.

தரமான, கட்டணமில்லா - கட்டாயக் கல்வி:

ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவருக்கும் தரமான, கட்டணமில்லா கட்டாய கல்வி

கல்வியும், மருத்துவமும் முழுமையாக அரசுமயம்..

இலாபமீட்டக்கூடிய தொழில்கள் தனியார் வசமிருப்பதுபோல் அத்தியாவசியத் தேவையுள்ள சேவைத்துறைகளான கல்வியும், மருத்துவமும் முழுமையாக அரசின் வசமாவதற்கு ஆதரவு.

மாநில சுயாட்சி:

ஒரு மாநில அரசு, மக்கள் நல அரசாக பரிபூரண சுதந்திரத்தோடும், நிதியாதாரத்தோடும் செயல்பட வழிவகுக்கும் அரசியல், பொருளாதார உரிமைகள் பெற்ற மாநில சுயாட்சி - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைக்கும் அரசியல் பிரிவு 356ஐ நீக்குதல் - மாநில அரசின் நிர்வாகத் தலைமையாகவும், மாநிலத்தைக் கண்காணிக்கும் பதவியாகவும் உள்ள மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் பதவியை ஒழித்தல்.

மீதி அடுத்த பதிவில்.....

Tuesday, December 15, 2009

சொல்ல மனம் கூசுதில்லையே...

றுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை...

செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...

சுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...

தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...

க்கத்துக் காட்டு வரப்போரம்
பதுங்கிப் போய் பறித்துவந்து
தீயில் வாட்டி உதடு சுடத் தின்ற
கருகிய சோளக்கருது...

காடு மேடெல்லாம் தேடி
கைவலிக்கப் பிடுங்கி வந்து
குமுட்டியடுப்பில் வேகவைத்து
தின்ற பனங்கிழங்கு...

இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என...

---ஈரோடு கதிர்

Tuesday, December 8, 2009

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

க்களவையும் மாநிலங்கள் அவையும் அமளி துமளியால் ஒத்திவைக்கப்படுவது நமக்கெல்லாம் புதிதல்ல. ''மக்கள் வரிப் பணத்தை இப்படி கரியாக்குகிறார்களே..?'' என்று நாடே வயிறெரிந்து பார்ப்பதும் வழக்கமாகி விட்டது. ஆனால், அண்மையில் மக்களவை தொடங்கிய அரை மணி நேரத்துக்குள், அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்ததற்குக் காரணமே வேறு!

பல்வேறு கேள்விகளைக் கேட்க வாய்ப்புக் கேட்டிருந்த 34 எம்.பி-க்களில் 2 பேர் மட்டுமே அந்த கேள்வி நேரத்தின் போது அவைக்கு வந்திருந்தனர்! சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்தும், எம்.பி-க்கள் இல்லாததால் ஏறத்தாழ 20 கேள்விகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. சபாநாயகர் மீராகுமார், “நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை!” என்றார் வேதனையோடு.
மிஸ் ஆன காங்கிரஸ் எம்.பி-க்களின் பெயர்ப் பட்டியலை வாங்கியிருக்கும் சோனியா காந்தி, அவர்கள் மீது நடவடிக்கைக்கான யோசனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

நாடாளுமன்றத்தை ஒரு மணி நேரம் நடத்த ரூ.14 லட்சம் வரை செலவாகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். பண விரயம் ஒருபுறம் இருக்கட்டும், தங்களது பிரச்னையை எடுத்துரைத்துத் தீர்ப்பதற்கு வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வோர் உறுப்பினரையும் நாடாளுமன்றத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், கேள்வி நேரத்தில்கூட அவர்கள் ஆப்சென்ட் என்றால்..?

இப்படியொரு கேவலமான நிகழ்வு நிகழ்ந்திருப்பதே எத்தனை இந்தியனுக்கு தெரியும்.. ? ஆனால் வேட்டைக்காரன் வெளியீடு என்றைய தினம், சச்சின் டெஸ்டில் எத்தனை ரன்கள் என கேட்டால் யோசிக்காமல் வந்து விழும் பதில்கள். ஆக தப்பு எங்கிருக்கிறது..?

உயிர் காக்க உழவு காப்போம்

கொஞ்சமாவது யோசிங்கப்பு...

தவளைச் சத்தம் கேட்டதும் போச்சு
கவலை நித்தம் படிந்தே போச்சு
கலப்பை பிடிக்கும் கைகள் குறைந்தே போச்சு
கணிணி மோகமே எங்கேயும் ஆச்சு

காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு

மும்மாரி பொழிந்ததெல்லாம்
மலையேறிப் போச்சு
எல்லாமே இப்போ விலையேறிப் போச்சு

சாதம் பிசைந்து
சாப்பிடும் நாளும் அழிந்திடுமோ
பாவம் மனித இனங்கள்
மாத்திரைகளாலே வாழ்ந்திடுமோ

விதைப்பவன் வாழ்க்கையெல்லாம்
விரைவில் கதையாகிப் போய்விடுமோ
காய்கனி உண்பதெல்லாம் - நாளை
கனவாகிப் போய்விடுமோ

மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்
பட்டுப்போகிற பூமியை
பசுமையாக்க முயற்சித்திடுவோம்!

மழை காக்க மரம் வளர்ப்போம்
உயிர் காக்க உழவு காப்போம் !

--உழவன்---

Saturday, December 5, 2009

கி.மு.கி.பி.


பிரபல cartoonist மதன் கைவண்ணத்தில் மற்றுமொரு ரசிக்கவைக்கும் படைப்பு. பூமியில் உயிரினங்கள் உருவாவதில் தொடங்கி, படிப்படியாக ஒவ்வொன்றாக விளக்குகிறார். முதல் 20-30 பக்கங்களில் மனிதன் புகுந்து விளையாடுகிறார். படிப்பவர் முகத்தில் புன்முறுவல் தெரிவது நிச்சயம். பல புதிய விஷயங்கள் புலப்படுகிறது.

மொத்தத்தில் வரலாற்று ரசிகர்களின் பொக்கிஷமான இந்த புத்தகம் ஒவ்வொருவரையும் ரசிக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உருப்பிடியான மற்றுமொரு புத்தகம்.

.

Friday, December 4, 2009

இடைவெளி

சரியாக ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, இதோ வந்து விட்டேன் மீண்டும் உங்கள் கவனத்தை கவர்வதற்கு. சின்ன தயக்கம், சரியான புறிதல் இல்லாதது, நேரமின்மை, அலுவலக சுமை, என்னத்த எழுதி என்னத்த செஞ்சி எனும் வாழ்க்கையின் மீது வெறுப்பு என அத்தனையும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டதனால் இந்த இடைவெளி தவிர்க்க முடியாததாகி போனது.

புது பொளிவுடன், புது தெளிவுடன், புது தெம்புடன் இனி வழக்கம் போல் எனது கோவம்,எதிர்பார்ப்பு,பாராட்டு,ஆற்றாமை என அத்தனையும் உங்கள் முன்னே...

ஒன்பத்துவேளியிளிருந்து ஒரு சாமானியன்.

Thursday, November 5, 2009

இந்தியாவும் உணவு தட்டுபாடும்

பஞ்சமும் பட்டினியும் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புதிதல்ல. வீங்கிய தலைகளும் ஒட்டிய வயிறுகளும்தான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் அடையாளம். மழை பொய்த்துப் போவதும், அறுவடை குறைவதும், அதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதும் இங்கு சகஜம். அந்த வகையில் இப்போது, சோமாலியாவைச் சுற்றிய ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சோமாலியா தவிர, எரித்திரியா, கென்யா, டிபெüடி, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இதில் அடக்கம்.

இங்கெல்லாம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக கடந்த சில மாதங்களாகவே ஐ.நா. எச்சரித்து வந்தது. இப்போது அந்த நிலை வந்தேவிட்டது. சுமார் 1.4 கோடி பேர் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கர்ப்பிணிகளும் குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற சூடான் வழியாகவும், சோமாலியத் துறைமுகம் வழியாகவும் கூடுதலாக உணவை அனுப்ப ஐ.நா. முயன்று வருகிறது.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மழை பொய்த்துப் போவது மட்டுமே காரணமல்ல. அரசின் நிர்வாகச் சீர்கேடுகளும் கொள்கைகளும்கூட பஞ்சம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக எத்தியோப்பியாவில் சில இடங்களில்தான் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ஓரளவு மழை பெய்திருந்தும்கூட அறுவடை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் அரசின் கொள்கை.

ஆப்பிரிக்க உணவுத்தட்டுப்பாடு குறித்து எச்சரித்த ஐ.நா.வின் அதே அமைப்பானது, இந்தியாவிலும் ஒரு தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் எடை குறைவாக, ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. அதிலும், 18-வயதுக்கு உள்பட்டோரில் 50 சதவீதம் பேருக்கு போதுமான ஊட்டச்சத்துக் கிடைக்கவில்லை என அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது.

ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதற்கும், இந்தியர்கள் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் விவசாய உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லை.

மழைநீரைச் சேமிக்கும் குளங்களும் ஏரிகளும் அணைக்கட்டுகளும்கூட குறைவு. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு வலுவான பொருளாதாரக் கட்டமைப்பும் இல்லை.

ஆனால், இந்தியாவில் வறட்சி காரணமாக விவசாய உற்பத்தி குறைந்தாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தட்டுப்பாட்டைப் போக்கும் அளவுக்கு பொருளாதார வலு இருக்கிறது.

அப்படியிருந்தும் ஒருபகுதி மக்கள் ஊட்டச் சத்து இல்லாமல் வாழ்கிறார்கள் என்றால், உணவுப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்காததுதான் காரணம்.

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லையென்றாலும்கூட, அடித்தட்டு மக்களால் அணுக முடியாத அளவுக்கு விலைவாசி இருந்தால் ஊட்டச்சத்துக் குறைவும் பட்டினியும் இருக்கும் என்பதுதான் நிபுணர்கள் கருத்து.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அந்த நிலையை மாற்ற இந்திய அரசும், மாநில அரசுகள் முயன்று வருகின்றன. ஆனாலும், எல்லா வகையான உணவுப் பொருள்களும் தேவையான அளவுக்குக் கிடைக்கும் வகையில் அந்தத் திட்டம் இன்னும் தீவிரமாக்கப்படவில்லை. வருங்காலத்தில்கூட அது சாத்தியமா என்கிற கேள்வியும் இருக்கிறது.

பட்டினியால் இறப்பவர்கள் பற்றி இந்தியாவில் இப்போது தகவல் இல்லை. ஆனால், பெரும்பாலான மரணங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக இருக்கிறது. இதுவும் பசி, பட்டினியின் இன்னொரு முகம்தான்.

இதைத் தவிர்க்க வேண்டுமானால், நமது புதிய பொருளாதாரக் கொள்கையில் சிக்கி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்.

எல்லா உணவுப் பொருள்களின் விலையும் வெளிச்சந்தையில் விண்ணை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும்போது, பொதுவிநியோகம் குறைந்த விலையில் ஒன்றிரண்டு பொருள்களை மட்டும் தருவது பெரிய பயனைத் தராது. இதற்குப் பதிலாக, மலிவான விலையில் நிறைய உணவுப் பொருள்களை போதுமான அளவுக்குக் கொடுக்கலாம்.

அனைவருக்குமே தரமான உணவு கிடைக்காதவரை இந்தியாவும் ஒரு பட்டினி தேசம்தான். நாட்டில் ஒரு கூட்டம் எலும்பும் தோலுமாகப் பசித்திருக்க, விண்ணில் சந்திரயானை ஏவுவதாலும், அணுகுண்டுகளை வெடிப்பதாலும் மட்டும் நாம் வல்லரசாகிவிட முடியாது. பட்டினி தேசங்களுக்கு சந்திரயானையும் அணுகுண்டுகளையும் விட முதன்மையான தேவை உணவுதான்.

Tuesday, November 3, 2009

மோகன் - உண்மையான மக்கள் ஊழியன்

“…மழை பெய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் அவசர அவசரமாக பலர் நடந்து கொண்டிருந்தனர், சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் ஒரு நபர் மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு அதை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்…!”

-தமிழகத்தில் இப்படியொரு அறிமுகத்துக்குத் ‘தகுதியான’ அரசியல்வாதிகள், இன்று யாராவது இருப்பார்களா தெரியவில்லை… ஆனால் நேற்று வரை ஒருவர் இருந்தார். அவர் திரு பொ மோகன் (60). மதுரையின் முன்னாள் எம்பி.

கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணத்தைத் தழுவினார் மோகன்.

பதவியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் கடைசி வரை மக்களுக்கான பணியாளனாக இருந்தவர் மோகன்.

பதவிக்கு வருவதற்கு முன் ஒரு சைக்கிளும், பதவிக்கு வந்த பிறகு கட்சி வாங்கிக் கொடுத்த ஒரு எம் 80 ஸ்கூட்டரும்தான் மோகன் என்ற நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்த வாகனங்கள் என்றால் உங்களுக்கு அதிசயமாகத்தான் இருக்கும். இந்தியாவிலேயே சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற ஒரே எம்பி மோகன் என்பது நீங்கள் வாழ்நாளில் கேள்விப்பட்டிராத ஒன்றுதானே!

எம்பியான பிறகும்கூட ரேஷன் கடைக்கு தனது வாகனத்தில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த மனிதர் இவர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிறந்தவர் மோகன். அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ படித்தார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மதுரை லோக்சபா தொகுதியிலிருந்து 1999 மற்றும் 2004 ஆகிய தேர்தலில் அடுத்தடுத்து வெற்றி பெற்றார்.

மதுரை மக்களின் அன்பைப் பெற்றவர். சர்ச்சையில் சிக்காதவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் என்ற பெயரெடுத்தவர். யாரையும் கடுமையாக பேசாதவர். அமைதியாக செயல்பட்டவர்.

இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும் போது அவர்களின் அருமை மக்களுக்குத் தெரிவதில்லை. அதனால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரை தோற்கடித்தும் காட்டினார்கள், அந்த தோல்வி அவருக்கல்ல என்பது புரியாமலே.

மோகன் என்ற மக்கள் ஊழியனுக்கு மனதார அஞ்சலி செலுத்துகிறேன்,

இந்த மாதிரி ஊழியர்கள் நிறைய உருவாக வேண்டும் என்ற நப்பாசையுடன் ஸ்ரீராம் எனும் சாமானியன் ஒன்பத்துவேலியிலிருந்து.

Thursday, October 29, 2009

குடியரசுத் தலைவர்

ஆண்டாண்டு காலமாக இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு - குடியரசுத் தலைவர் என்னும் பொம்மை பதவி தேவை இல்லை என்பது. அதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் சமீப காலமாக எனக்கும் அது சரி தானோ என்றே எண்ண தோன்றுகிறது. காரணம் தேவை இல்லாத ஆடம்பரங்கள் , தேவை இல்லாத செலவினங்கள்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், கவலைப்படாமல் அயல்நாட்டு சுற்றுலாவிற்கு கிளம்பி விடுகிறார் நாட்டின் முதல் குடிமகன். பொதுமக்களின் வரிபணத்தை செலவு செய்வதற்கு ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பாங்களோ...

ஒரு பக்கம் புயல் வெள்ளம் மறு பக்கம் வறட்சி என காலநிலை மாற்றம், அமைச்சரின் SPECTRUM ஊழல், ரயிலையே கடத்தும் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம், பாகிஸ்தான் சீனா இலங்கை என அண்டை நாடுகளின் நிலையற்ற உறவு, தீவிரவாத அச்சுறுத்தல், வேலையின்மை, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என நாட்டின் பிரச்சனைகள் நீண்டு கொண்டே போகும்.

கடந்த ஓராண்டில் பிரதீபா படேல் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் கீழே :

October 26 to October 29, 2009 - The President's visit to United Kingdom

September 06 to September 08, 2009 - The President's visit to Tajikistan

September 02 to September 06, 2009 - The President's visit to Russia

April 23 to April 27, 2009 - The President's visit to Poland

April 20 to April 23, 2009 - The President's visit to Spain

November 29 to December 01, 2008 - The President's visit to Indonesia

November 24 to November 28, 2008 - The President's visit to Vietnam

November 05 to November 08, 2008 - The President's visit to Bhutan

April 20 to April 25, 2008 - The President's visit to Chile

April 16 to April 20, 2008 - The President's visit to Mexico

April 12 to April 16, 2008 - The President's visit to Brazil

இந்த செலவில் பாதியை குறைத்திருந்தால் கூட எத்தனை பள்ளிகள் கட்டியிருக்கலாம், எத்தனை மருத்துவ மனைகள் உருவாக்கி இருக்கலாம், எத்தனை விவசாயிகளின் தற்கொலையை தவிர்த்திருக்கலாம், எத்தனை குழந்தை தொழிலாளர்களின் வாழ்கையை காப்பாற்றி இருக்கலாம்... இன்னமும் ஒரு ரூபாய் அரிசியை வாங்க ரேஷனில் கால் கடுக்க வரிசையில் நிற்கும் மக்கள் எத்தனை கோடி...

இதையெல்லாம் உணர்வாரா ஜனாதிபதி...?
ஊர் சுற்றி திரிவதை நிறுத்துமா பாட்டி...?

Monday, October 26, 2009

தூங்கும் கருணாநிதி

பருவமழை காலதாமதம் ஆவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற முதல்வர் கருணாநிதி போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவது வழக்கம். ஐப்பசி மாதம் என்றாலே அடைமழை பெய்யும் என்ற நிலைமை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் கடைசி வாரம் ஆகியும் இதுவரை பருவ மழை தொடங்கவில்லை.


மேட்டூர் அணையின் நீர் இருப்பும் நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 77 அடியாக இருந்தது. அதாவது, 39 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,500 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த டெல்டா பாசனப் பகுதியில் சுமார் 13 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 10 சதவீத நடவுப் பணிகள் மீதம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரம் வரை நீர் தேவைப்படுகிறது. ஆனால் இப்போதைய மேட்டூர் நீர் இருப்பைக் கொண்டு இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும். அதையும்கூட இப்போது நிலவுகிற வறட்சியால் அனைத்துப் பகுதி வயல்களுக்கும் சீராக வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே. எனவே பருவமழை பெய்தால் மட்டுமே நெல் வயல்களைக் காப்பாற்ற முடியும் என்ற அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பருவமழையை எதிர்பார்த்து இன்னமும் காலதாமதம் செய்யாமல், பொதுப்பணித் துறையையும் கவனிக்கும் முதல்வர் கருணாநிதி உடனடியாக இப்பிரச்னையில் தலையிட வேண்டும்; கர்நாடக அரசிடம் பேசி கூடுதல் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கர்நாடக அணைகளில் மொத்த கொள்ளளவில் இப்போது 92 சதவீத நீர் இருப்பு உள்ளது. எனினும் ஜூலை முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 159.38 டி.எம்.சி. தண்ணீரில் பெரும்பகுதியை கர்நாடகம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. இன்னும் 3 டி.எம்.சி. மட்டுமே பாக்கி உள்ளது.

கடந்த 2001 முதல் 2004 வரை நிலவிய கடும் வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் வயல்கள் கருகின. இதனால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் 2005-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வறட்சியின் பாதிப்பு இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டைப் பொருத்த வரை இதுவரை நெல் சாகுபடி சிறப்பாக உள்ளது. வயல்கள் பசுமையாக, செழிப்பாக உள்ளன. ஆனால் இந்த நிலை தொடருமா? என்பது முதல்வர் கருணாநிதி மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்தே உள்ளது என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

வரும் முன் காப்பதே சிறந்தது ---

இதை விட்டு விட்டு எல்லாம் முடிந்த பின் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் என மத்திய அரசிடம் கெஞ்சி கூத்தாடி நிதி ஒதுக்கி, அதில் அமைச்சர் முதல் MLA,MP,மாவட்டம்,வட்டம்,கிராம அலுவலர்,கட்சி நிர்வாகி,கட்சி உறுப்பினர் வரை கமிஷன் அடித்து கடைசியில் பொறை துண்டு போல் கொஞ்சமாக விவசாயிக்கு நிவாரணம் என அத்தனையும் செய்ய தயாராகிறது தமிழக அரசு.

பாருங்கள் இன்னும் என்னென்ன நடக்க போகிறதென்று...

Wednesday, October 21, 2009

உலகம் எதை நோக்கி...?

உலகம் முழுவதும் தினமும் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கை, அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவில்லை என்றால், மிகவும் மோசமான பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு - வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் (United Nation's The Food and Agriculture Organization and the World Food Program) அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "2009-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை 1.02 பில்லியன் (100 கோடிக்கும் மேல்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 40 ஆண்டுகளில் உச்சபட்ச அவல நிலை," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள 20 நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 30 நாடுகளில் அவசரகால உதவிகள் தேவைப்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளிலும் ஊட்டக் குறைவு காரணமாக ஒரு குழந்தை மரணத்தைத் தழுவுகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவிக்கும் ஐ.நா., "இந்த அபாய நிலையை உணர்ந்து, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் ஆகியவை இணைந்து உலக அளவில் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என்று அறிவுறுத்துகிறது.

சோமாலியாவில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே கொடுக்கக் கூடிய அவலத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.

கென்யாவில் விலங்குகள் அழிவதாலும், வேளாண்மை பாதிப்புக்குள்ளானதாலும் 30 லட்ச மக்களுக்கு அவசரகால உணவு தேவைப்படுகிறது.

வேளாண் உற்பத்தியின் வீழ்ச்சி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுடன் உலகப் பொருளாதார நெருக்கடியும் இணைந்து சதிராட்டம் ஆடியாதால், 2009-ல் 100 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியால் அவதியுறும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் 62 கோடியே 20 லட்சம் மக்கள் அன்றாடம் பட்டினியால் வாடி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக இருக்கிறது.

இந்த அவலநிலைக்குத் தீர்வாக இருவழிப் பாதை அணுகுமுறையை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைக்கிறது...

"திடீர் உணவுப் பஞ்சத்தால் ஏற்படும் பட்டினிப் பிரச்னையை தீர்ப்பதற்கு குறுகிய கால நடவடிக்கையாக பணத்தை செலவிடுவதோடு மட்டுமின்றி, உணவு உற்பத்தியைக் கூட்டும் வகையில் வேளாண் துறையில் நீண்ட கால முதலீடுகளுக்கு வழிவகுக்க வேண்டும்," என்பதே அந்த அணுகுமுறை. உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் வேளாண் துறையில் மிகுதியான அளவில் முதலீட்டை ஒதுக்கினால் மட்டுமே, எதிர்வரும் காலத்தில் பட்டினி அவலத்தைக் களைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு ஒரு வேலை உணவு கூட நம்மால் அளிக்க இயல வில்லை என்றால், உலகம் எதை நோக்கி செல்கிறது என்று சற்றே யோசியுங்கள். மிக பெரிய வன்முறைக்கு இது அடிகோலிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி...

தீபாவளி SPECIAL

குடியிற் சிறந்த தமிழகம் என்ற பட்டப் பெயர் சூட்டாததுதான் பாக்கி. இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை அத்தனை ஜோராக இருந்துள்ளது!

தீபாவளி தினதத்தன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.200 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடந்தது. இது போன தீபாவளியைவிட 25 சதவிகிதத்துக்கும் மேல் என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த தீபாவளி வாரக் கடைசி நாளில் அமைந்து விட்டதால், பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பிருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடிப்பிரியர்களுக்குப் பிடித்தமான அத்தனை ஐட்டங்களும் கடைகளில் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததால், ஒவ்வொரு கடையிலும் விற்பனை அமோகமாக இருந்தது.

ஆனால் அப்படியும் வெளியூர்களில் பல கடைகளில் குறிப்பிட்ட சில வகை சரக்குகள் மட்டுமே இருந்ததால் 'குடி'மக்கள் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானாலும், வேறு வழியின்றி 'இருப்பதைக் கொடுப்பா' என்று வாங்கிக் குடித்துள்ளனர்.

தீபாவளி தினத்தன்று (17-ந் தேதி, சனிக்கிழமை) காலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் பெரும் கூட்டம் வரிசை கட்டி நின்றது. 'பழக்கத்துக்காக' எப்போதாவது குடிப்பவர்கள் கூட்டம் அன்று பெருமளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு பத்துமணிக்கு மேலாகியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையாம்.

இதனால் விற்பனையின் அளவு முந்தைய தீபாவளிகளை மிஞ்சும் விதத்தில் இருந்துள்ளது. பெரும்பாலான புறநகர் மற்றும் கிராமப்புற டாஸ்மாக் கடைகளில் கூட 2 மடங்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது இந்த தீபாவளியன்று மட்டும்.

15 கேஸ்கள் மது விற்பனையாகும் கடைகளில் 25-க்கும் மேற்பட்ட கேஸ்கள் விற்பனை ஆகி பெரும் 'சாதனை' நிகழ்ந்துள்ளது. இதனால் ரூ.40 ஆயிரத்துக்கு மது விற்பனை ஆகும் கடைகளில், தீபாவளியன்று மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. சில கடைகளில் ரூ. 2 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

நகர்ப்புறங்களில் கேட்கவே வேண்டாம்... ரேஷன் கடை க்யூ மாதிரி கூட்டம் அலைமோதியது.

விற்பனை பற்றிய கணக்கை சரிபார்த்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அதுபற்றி அறிவிக்கப்படும் என்றும், உண்மையான கலெக்ஷன் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மது விலக்கை அறிமுக படுத்திய மகாத்மா வாழ்ந்த நாடும் இது தான்,
கள்ளை ஒழிக்க தன்னிடமிருந்த ஏக்கர் கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் வாழ்ந்த நாடும் இது தான்,
இன்று 2009 தீபாவளி அன்று விற்பனையில் சாதனை புரிந்திருக்கும் நாடும் இதுவே தான்.

Wednesday, October 14, 2009

பற்றி எரிகிறது வீடு

மீபத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை மரணக் காடாக மாற்றிப் போட்டிருக்கிறது பிரளயமாகப் பெய்த மழை. ஆனால், தமிழ்நாட்டில்? ஏற்கெனவே, தென்மேற்குப் பருவமழை கண்ணாமூச்சி போல பொய்த்து விட்டுப் போய்விட்டது; வடமேற்குப் பருவ மழையாவது வருமா என்பதுதான் மாபெரும் கேள்வி!

அதே சமயம், தென்மேற்குப் பருவமழை எதிர்பாராத நேரத்தில் திண்டுக்கல், கரூர், மதுரை போன்ற பகுதிகளில் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களை சரியாக வஞ்சித்துவிட்டது.

அது மட்டுமா? ஜூலை மாத வாக்கில் கோடை வெப்பம் தணிந்து, குளிர் காற்று வீசி... வருடா வருடம் நிலவும் இதமான சூழலையும் இப்போது காணவில்லை! அக்டோபர் மாதத்தில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் கொளுத்துகிறது!

எப்படி நிகழ்கிறது இந்த இடறல்கள்?

பூமியின் வெப்பம் கூடிக்கொண்டே வருவதுதான் மிக முக்கியக் காரணம்! அது பற்றி பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்துவிட்ட நிலையில், பருவநிலை மாற்றங்களைப் பற்றிய கவலை கூடியிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆடம்பரமும், படாடோபமும், எரிபொருள் பயன்பாடும் சூழல் மாற்றங்களைச் சுண்டிவிட்டன. அதற்கு ஒரு பாவமும் அறியாத ஆப்பிரிக்க நாடுகளும் பலியாவதுதான் கொடுமை!

மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் மிகுந்த புவி வெப்பமாதலினால் பாதிப்புக்குள்ளாகிறது. அதை விரிவாகச் சுட்டிக் காட்டலாம்...

*கடந்த 1990-லிருந்து பத்தாண்டுகள் மிக வெப்பமான ஆண்டாகவும் 1998-ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டது.

*ஐக்கிய நாடுகளின் குழும அறிக்கை, இமயமலையின் பனிக்கட்டிகள் உருகத்தொடங்கி உள்ளது எனவும், 2035-ம் ஆண்டுக்குள் அவை மறைந்துவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவிக்கிறது.

*கடல் மட்டம் 40 சென்டிமீட்டர் வரை உயரலாம். அதனால் 50 மில்லியன் மக்கள் வீடுகளை இழக்க நேரிட லாம்.

*தண்ணீர் பற்றாக்குறையால் 50 கோடி மக்கள் பாதிப் படையலாம்.

*குளிர்கால மழையளவு இந்திய துணைக்கண்டத்தில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

*அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 30 சதவிகித உணவு உற்பத்தி குறையலாம்.

*உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம்.

ஆக, சுருக்கமாக கூறினால் இந்தியர்கள் பல கோணங்களில் பாதிப்படையலாம்!

என்ன செய்யலாம்...

லக நாடுகள் அறிவியல் நுட்பத்தினால் தட்பவெப்ப மாற்றத்தைக் குறைக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு தனி மனிதனும் தன் அன்றாட வாழ்வின் பழக்கவழக்கங்கள் மூலம் 'புவி வெப்பமடைதல்'-ஐக் குறைக்கப் பல்வேறு செயல்களைச் செய்யலாம்.

நம் அன்றாட வாழ்க்கையில் சூழலுக்கு உகந்த செயல்களைச் செய்வதால் ஆற்றல் வளங்களைக் காக்க உதவ முடியும். நடவடிக்கைகளை முறைப்படுத்துவது, குறைவான நுகர்வு, புலால் உண்ணாமை, நடைபயணங்கள், வளங்களை வீணாக்காமை ஆகியவை சிறந்த தட்பவெப்ப மாற்றத்தைக் குறைக்க உதவும்.

பி.கு:

இந்தியாவை ஒட்டிய அரபிக் கடல் நீரின் மேற்புற வெப்பத்தில் விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடருமானால் எதிர்வரும் வருடங்களில் பருவமழை குறைந்து கொண்டே போய், இன்னும் 150 ஆண்டுகளில் தென்மேற்குப் பருவக்காற்றே வராது என்று ஒரு அபாய அறிவிப்பு சமீபத்தில் வந்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் தட்ப வெப்ப மாற்றங்களும், நீரோட்டத் திசை மாற்றங்களும் எல் நிரோ என்ற பருவநிலைத் திருப்பத்தை உருவாக்குவதும் சிக்கலான விஷயம்.

தென்மேற்குப் பருவ மழை பொய்த்துவிட்டால் வடகிழக்குப் பருவக்காற்றாவது வழக்கம்போல் வீசுமா... மழை பொழியுமா என்பதுதான் இப்போதைய தமிழக மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு. அதோடு, தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரமே அதன் மூலம்தான் என்பதால் அச்சமும் கூடியுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் தோன்றுவதைப் பொறுத்தும், அது தீவிரமடைவதைப் பொறுத்தும் தான் பெய்யும் மழையின் அளவும், திசையும் நிகழும் என்பதால் எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலை.

Saturday, October 10, 2009

முதல் கேள்வி

கடந்த பூஜை விடுமுறைக்கு ஊர் சென்ற பொழுது வீட்டில் மின்சாரம் இல்லை. கேட்டால் "அது போய் ஒரு வாரம் ஆகிவிட்டது" என்றும், இன்னும் ரெண்டு அல்லது மூன்று வாரம் ஆகும் என்றும் சர்வ சாதாரணமாக சொன்னார்கள்.

MIXI இல்லாததால் சட்னி இல்லை, GRAINDER இல்லாததால் இட்லி,தோசை இல்லை, MOTOR இல்லாததால் தண்ணீர் இல்லை, TV இல்லாததால் கிரிக்கெட் இல்லை. மின்சாரம் இல்லாததால் இன்னும் எத்தனையோ "இல்லைகள் ". ஏழு மணிக்கு ஊரே உறங்கி விடுகிறது.

என்னடா இது என்று தொலைபேசி மூலமாகவும் நேரிலும் பல முறை EB அலுவலகத்தில் புகார் செய்தும் ஒரு பயனும் இல்லை. அவர்கள் சொன்ன பதில் சுளீர் என்றது.

REASON : TRANSFORMER FAILURE --- மின்மாற்று பழுது-----

இது போல் தமிழகத்தில் பரவலாக இருபதுக்கும் மேற்பட்ட மின்மாற்று பழுதடைந்து விட்டதாகவும், ஒவ்வொன்றாக மாற்றி வருவதாகவும் கூறப்பட்டது.
ஆக இது போல் இன்னும் இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்கள்.
ஏன் இந்த மெத்தனம், ஏன் இத்தனை புகார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறது மின் வாரியம், என்ன நடவடிக்கை எடுக்கிறது மின் துறை, இந்த புகார்கள் அரசின் கவனத்திற்கு செல்கிறதா என எண்ணிலடங்கா கேள்விகள்.

கேள்விகள்,கேள்விகள்,கேள்விகள்

அனைத்து துறைகளிலும், தூங்கி கொண்டிருக்கும் அரசை எதிர்த்து, உதவாக்கரை அதிகாரிகளை பார்த்து, ஊழலில் ஊறி போன அரசியல் வாதிகளை கண்டு பல கேள்விகள் எழுகின்றன.

கேள்விகள் கேட்டால் ஒழிய இந்த திரு நாட்டில் பதில் கிடைக்காது. கேள் கேள் நன்றாக கேள்...

பயன் படுத்தி கொள்ளுங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை. மேலும் இதை பற்றிய சந்தேகங்களுக்கு தாராளமாக என்னை வினவலாம். கீழே எனது முதல் மனுவின் SOFT COPY இணைத்துள்ளேன். படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி கொள்ளவும்.

அரசின் வலைத்தளம் : https://www.rtination.com

தகவல் அறியும் உரிமை சட்டம்

கோரிக்கை பெற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்க மறுக்குமிடத்து, தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவுகள் 8 மற்றும் 9ல் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருத்தமான காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும்.

கோரப்பட்ட தகவலானது, ஒருவருடைய உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடையதாகயிருப்பின், அதற்கான கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள், தகவல் அளிக்கப்படுதல் வேண்டும்.

குறிப்பிட்ட கால கெடுவிற்குள் கோரப்பட்ட தகவலின் பேரில் முடிவு எதனையும் அளிக்க தவறுமிடத்து, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர், அக்கோரிக்கையினை ஏற்க மறுத்ததாகவே கருதப்படும்.

கோரிக்கையின் மீது தகவல் அளித்தல் குறித்து முடிவு எடுக்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர் அந்த தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம் ஏதேனுமிருப்பின், அதைச் செலுத்தக் கோரி விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரத்தினை அனுப்புவதற்கும், கூடுதலான கட்டணத்தை செலுத்துவதற்கும் இடையே உள்ள காலத்தினை ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட 30 நாட்கள் கால அளவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

மேல் முறையீட்டு அலுவலர், மேல் முறையீட்டிற்கான காலக்கெடு, அதனை செயல்படுத்தவேண்டிய முறை மற்றும் விதிக்கப்பட்ட கட்டணங்கள் உள்ளடங்கிய விவரங்களை, முடிவின் மீதான மறு ஆய்விற்காக, மனுதாரருக்கு அளித்தல் வேண்டும்.

தகவல்கள் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் அல்லது மின்னணு படிவத்தில் இருக்குமிடத்து, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்துதல் வேண்டும். மேற்கூறிய கட்டணங்கள் அனைத்தும், நியாயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மனுதாரர் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள நபராக இருக்குமிடத்து, மேற்கூறிய அனைத்து கட்டணங்களையும் அவரிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

பொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்க தவறுமிடத்து, தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 7 உட்பிரிவு 5ன்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அந்த தகவலை அளிக்க வேண்டும்.

மனுதாரரின் விண்ணப்பத்தினை நிராகரிக்குமிடத்து, விண்ணப்பதாரருக்கு பொதுத் தகவல் அலுவலர் கீழ்க்கண்ட தகவல்களையும் தெரிவித்தல் வேண்டும் 1. விண்ணப்பத்தினை மறுப்பதற்கான காரணங்கள்;
2. அவ்வாறு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு எந்த கால கெடுவுக்குள் செய்யப்பட வேண்டும்;
3. மேல் முறையீட்டு அலுவலர் குறித்த விவரங்கள்.அரசின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்கள் மற்றும் வள ஆதாரங்களை திசை திருப்பக்கூடிய தகவல்களைத் தவிர, ஏனைய தகவல்களை, அதற்குரிய சாதாரண படிவத்திலேயே வழங்கலாம்.

என்ன எல்லாம் படித்து புரிந்து விட்டதா ?
இனி களத்தில் இறங்கி விட வேண்டியது தானே ?
நான் இறங்கி விட்டேன் !!! எனது முதல் மனுவை தந்து விட்டேன்.
அதை பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்...

மக்களின் மந்திர கோள்

தகவல் அறியும் உரிமை சட்டம்
Right To Information Act


இந்திய இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அரசு மற்று அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். இங்கு தகவல் என்பது பலதரப்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. அதாவது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ}மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே 'தகவல்' என்ற பிரிவின்கீழ்
வைக்கப்படுகின்றன.

அரசுத்துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால், அதைக்கூடக் கேட்டுப் பெற முடியும். எடுத்துக்காட்டாக. ஒரு தனியார் நிறுவனத்தின் ஆண்டுக் கணக்கு, இயக்குனர் குழுமம் உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டுமானால், கம்பெனிகளுக்கான பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்யலாம். இதேபோல், அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிப் பெற முடியும்.

தகவல்களைப் பெறுவது நமக்கு எந்தவகையில் உதவும் என்று கேள்வி எழலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதால், அரசு நிர்வாகத்தால், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கிறது. இதனால், லஞ்சமும் ஊழலும் குறைகின்றன.

அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் தகவல்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஏதாவது குறைகள் இருப்பின் அதைக் களைய வேண்டும் என்ற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் ஜனநாயகத்தில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள வழி ஏற்படுகிறது.

மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த நோக்கத்தை எய்துவதற்கும், குடிமக்கள் ஒவ்வொருவரும், அரசு(அல்லது) அரசு சார்ந்த அலவலகங்களிடமிருந்து தகவல் பெறுவதற்கும் ஏதுவாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15ன்படி, தமிrநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீr 07.10.2005 முதல் இயங்கி வருகிறது.

Wednesday, October 7, 2009

வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே

ஒவ்வொரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விபரம் :
மாத சம்பளம் --- ரூ 12,000

அரசியல் செலவினங்களுக்கு --- ரூ 10,000

அலுவலக செலவினங்களுக்கு --- அம்மா 14,000

போக்குவத்து செலவினங்களுக்கு --- ரூ 48,000

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு --- ரூ 500

முதல வகுப்பு ஏ சி இரயில் பயணம் முற்றிலும் இலவசம் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் .

முதல வகுப்பு விமான பயணம் நாற்பது முறை செல்லலாம் உடன் மனைவி அல்லது பி ஏ வை அழைத்து வரலாம்

டெல்லியில் தங்கும் விடுதி இலவசம்

மின்சாரம் 50,000 யுநிட் வரை இலவசம்

ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் உள்ளூர் தொலைபேசி அழைப்புகள் இலவசம்

ஆகமொத்தம் ஒரு எம் பி க்கு ஒரு மாதத்தி்ற்கு ருபாய் 260,000 இரண்டு லட்சத்து அறுபது ஆறாயிரம் ருபாய் செலவாகிறது

மொத்தம் உள்ள ஐநூற்றி முப்பது நான்கு எம்பி ஐந்து வருடத்திற்கு 854,40,00000 (எட்நூற்றி ஐம்பத்து நாலு கோடியே நாற்பது லட்சம்)

அவர்களுக்கு ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்து, சம்பளமாய் தனது வரி பணத்தையும் தந்து கொண்டிருக்கும் இந்த நாட்டு மக்களின் இன்றைய நிலை. . . ?
மேலும் படியுங்கள்...



42% இந்திய மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

42.5% இந்திய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவையான அளவு கிடைப்பதில்லை.

25% இந்திய மக்கள் தினமும் பசித்த வயிறுடன் உறங்குகிறார்கள்.

2002 முதல் 2006 வரையான நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 17,500.

இன்றைய தேதியில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.

இன்றும் கிராமத்தில் தினமும் 5 மணி நேர மின் வெட்டு.

தமிழகத்தில்

36.32 லட்சம் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வந்தவர்கள்.


மாத வருவாய் ரூ.250-க்கும் குறைவாக ஈட்டுவோர் 7.21 லட்சம் குடும்பத்தினர்

இரு உடைகளுக்கும் குறைவாக வைத்திருப்போர் 5.59 லட்சம் குடும்பத்தினர்.

தினசரி ஒரு வேளையும், அதற்குக் குறைவாகவும் உணவு பெறுவோர் எண்ணிக்கை மட்டும் 14 லட்சம் குடும்பங்கள்.

கொத்தடிமைகளாக இருக்கும் குடும்பங்கள் 5.92 லட்சம்.

குழந்தைத் தொழிலாளர்கள் கொண்ட குடும்பங்கள் 4.83 லட்சம்.

ஒரு ருபாய் ரேஷன் அரிசியை வாங்க கால்கடுக்க நிற்கும் மக்கள்.

அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் அவல நிலை.

என இந்த வலைப்பூ பத்தாது.

நல்ல வேலை பாரதி உயிருடன் இல்லை...

Tuesday, October 6, 2009

பாதிப்பைக் குறைத்திருக்கலாம்

ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சுமார் 400 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 4 லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். கர்நாடகத்தில் 600 முகாம்களில் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்த இயலாத இந்த இயற்கைப் பேரிடர் எதிர்பாராதது. ஆனாலும், இதில் மாநில அரசுகள், மிகக் குறிப்பாக ஆந்திர அரசு, கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டிருந்தால் இந்த இழப்பைப் பாதியாகக் குறைத்திருக்க முடியும். ஏனென்றால், இரு மாநிலங்களிலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பெரும்பாலானவை கிருஷ்ணா நதி, துங்கபத்ரா நதிகளின் கரையோரப் பகுதிகளே.

பலத்த மழையின் தீவிரத்தையும் அதைத் தொடர்ந்து வரப்போகும் வெள்ளத்தையும் முன்னதாகவே உணர்ந்து, அணைகளை 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே திறந்து, இருக்கும் நீரை வெளியேற்றி காலியாக வைத்திருந்தால், வரும் வெள்ளத்தை எதிர்கொள்ளவும், சீராக வெளியேற்றவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். சேதத்தைப் பாதியாகக் குறைத்திருக்க முடியும்.


துங்கபத்ரா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்து, மந்திராலயம் ராகவேந்திர மடம் மூழ்கி, கோசாலையில் அனைத்துப் பசுக்களும் இறந்தன என்ற செய்தி ஆந்திர மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஓடியபோதுதான், ஆந்திர அரசு பதறுகிறது, செயல்படுகிறது. ""கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைக் குறையுங்கள், இங்கே நாகார்ஜுனசாகர் அணை ததும்பி வழிகிறது'' என்று கர்நாடக அரசிடம் ஆந்திரம் கெஞ்சுகிறது. ஆனால் இதை
எப்படிக் கடைசி நிமிடத்தில் செய்ய முடியும்? கர்நாடகம் தனது அணையிலிருந்து வெளியேற்றாமல் இருந்தால் அவர்கள் அணைக்குத்தான் ஆபத்து!

மாநிலங்களைக் கடந்து ஓடும் ஒரு நதியின் வழித்தடத்தில் பல அணைகள் கட்டப்படுகின்றன. அதற்கு நாள்தோறும் வரும் நீர்வரத்து, அதன் துணைநதிகளின் நீர்வரத்து, ஒவ்வோர் அணையிலும் வினாடிக்கு எத்தனை கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது, நீர் இருப்பு எத்தனை கனஅடி என்கிற தகவல்களை எல்லா அணைகளின் அதிகாரிகளும் தினமும் கண்காணித்து, மழைவெள்ளம் எந்த அளவுக்கு வரலாம் என்பதைக் கணித்து நதியின் கீழ்அணைகளில் உள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்வது அவர்களது கடமை.

இவ்வாறு செயல்பட்டிருந்தால், 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே, நாகார்ஜுனசாகர் அணையின் மதகுகளை அதிகமாகத் திறந்து, இருந்த நீரை வெளியேற்றிவிட்டு அணையை காலி செய்திருப்பார்கள். வரப்போகும் உபரி நீரைச் சமாளிக்கும் பணி செவ்வனே நடைபெற்றிருக்கும்.

ஆனால், ஆந்திர அரசின் அதிகாரிகள் இதில் அதிக அக்கறை கொள்ளவில்லை. வெள்ளம் மிகப்பெரும் அளவில் வரத்தொடங்கியபோதுதான், நாகார்ஜுனசாகர் அணையின் மதகுகளை 48 அடி உயரத்துக்கு முழுமையாக-அது கட்டப்பட்டு முதல்முறையாக இவ்வாறு-உயர்த்தி நீரை வெளியேற்றினர்.

அணைகள் கட்டப்பட்ட பிறகு, வழக்கமான நீர் இல்லாமல் மேடுற்ற நதி, இவ்வளவு அபரிமிதமான வெள்ளநீரைச் சமாளிக்கும் திடீர் திறன்பெற முடியாததால், வெள்ளம் இரு கரைகளையும் மீறி ஓடியது. கரையோர நகரங்கள், கிராமங்களை மூழ்கடித்தது.

"இது எங்கள் அணை, இதன் கொள்திறன் இவ்வளவு' என்று குறுகிய பார்வை இல்லாமல், மாநில உணர்வுகளைக் கடந்து, இது நதியின் மீதுள்ள அணைகளில் ஒன்று என்ற பொதுப்பார்வை இருக்குமானால், இத்தகைய இயற்கையின் பேரிடர்களை பாதியாகக் குறைக்கும் சக்தி மனிதருக்கும் ஏற்படும்.

நடந்து முடிந்த தவறுகளை இனி அடுத்த வெள்ள காலத்தில்தான் திருத்திக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்தான் தலையாய கடமை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கர்நாடக, ஆந்திர மக்கள் என்று சும்மா இருக்காமல், தமிழகம்கூட தனது உதவிக்கரத்தை உடனடியாக நீட்ட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அரிசி, மருத்துவ உதவி அளிப்பதில் தாமாகவே முன்வந்து செய்ய வேண்டும்.

இது அண்டை வீட்டுச் சோகம்தானே, நமக்கென்ன என்று நம் வீட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு சும்மா இருந்தால், நம் வீட்டுச் சோகத்தில் அவர்களும் அதேபோலத்தான் இருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்!

Wednesday, September 30, 2009

சுய புலம்பல்

எனது நூறாவது பதிவிது. தொடங்கி ஒன்பதாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறேன். எனது வலை தளத்திற்கு வந்து, நான் எழுதுவதையும் நேரம் ஒதுக்கி படிக்கும் நண்பர்கள்,அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பலகோடி.

இதுவரை வலைத்தளத்திற்கு வந்துபோனவர்கள் 2000 திற்கு மேல். ஆனால் மறுமொழி மற்றும் கருத்து கூறியவர்கள் ஓரிருவரே. கைதட்டலோ,வாயார திட்டோ சொன்னால் தான் தெரியும்.

ஏன்டா இப்படி புலம்பர, உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா, போடா லூசு, ஆமாம் நானும் இத பத்தி யோசிச்சிருக்கேன் என எப்படி வேண்டுமானாலும் எது தோணுதோ அதை கூறுங்கள். இல்லை என்றால் நீங்கள் படிக்கிறீர்களா ? இல்லையா ? என்றே தெரிவதில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிடும்.

அப்புறம் இந்த நேரத்தில் மற்றுமொரு செய்தியையும் உங்கள் முன் எடுத்துரைக்க கடமை பட்டுள்ளேன். எவ்வளவு நாள் தான் நாமும் நாடு சரி இல்லை, மக்கள் சரி இல்லை என புலம்புவது என்றெண்ணி ஒரு முடிவுக்கு வந்தவனாய் பூஜை விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்தேன். வீட்டில் மெதுவாக இந்த விஷயத்தை ஆரம்பித்தேன் பின்வருமாறு.

"ஏம்ப்பா எவ்ளோ நாள் தான் நீங்களும் கஷ்டபடுவீங்க, வயசும் ஆகி போச்சு, பேசாம ரெஸ்ட் எடுங்க."

குழப்பமும் கேள்வியும் கலந்த ஒரு பார்வை பதிலாக கிடைத்தது.

மேலும் தைரியத்தை வரவழைத்துகொண்டு "இல்லப்பா வர வர வேலை ஆளும் கிடைக்க மாட்றாங்க, கரண்டும் கிடைக்க மாட்டேங்குது, விவசாயம் அளிஞ்சிட்டே வருது. இப்படி படிச்ச அடுத்த தலைமுறை எல்லாம் நகரத்துக்கே புழைக்க போயிட்டா, கிராமம் என்னாவது ? விவசாயம் என்னாவது ? என்றேன்.

"சரி அதுக்கு என்ன பன்னனும்கர ? " இது அப்பா.

"அதனால வேலைய விட்டுட்டு ஊருக்கே வந்திரலாம்னு பார்க்கிறேன்."

"வந்து..." கோவத்துடன் இடை மறித்தார் அப்பா.

"விவசாயம் தான் பார்பேன் வேற என்ன செய்வேன் ? " எனக்கும் கோபம் சற்றே எட்டிபர்த்தது.

இப்படியே தொடர்ந்தது வாக்கு வாதம். முடிவில் பைத்தியமாடா உனக்கு என அம்மாவும், அங்கேயே நல்ல படியா settle ஆகுற வழிய பாரு என சித்தியும், B.E. படிச்சிட்டு உனக்கு ஏன்டா இந்த வேலை என ஊர்கார நண்பனும் அறிவுரை வழங்க சற்றே குழப்பத்துடன் முடிவடைந்தது எனது ஊர் பயணம்.

விளைவு, நான் பெங்களூர் வந்த மறு நாளே சித்தப்பாவை அழைத்துக் கொண்டு ஏதோ ஒரு ஜோசியரிடம் எனது ஜாதகத்தை குறித்து கொண்டு வந்து விட்டார் எனது அப்பா. இனி பெண் பார்க்கும் படலம் தீவிரமாகும். அம்மா,அக்காவுடனான தொலைபேசி உரையாடல்கள் நீளமாகும்.
பிள்ளையார் புடிக்க போய் குரங்கு வந்து விட்டது.

என்ன தான் ஆனாலும் கிராமம்,விவசாயம் மீதான எனது காதல் கொஞ்சமும் குறையாது. எனது இறுதி நாட்கள் நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தான் என்பதையும், எனது குல தொழில் வேளாண்மையை மறக்க முடியாதென்பதையும் தெளிவு படுத்துகிறேன்.

ஏதோ சொல்லவேண்டும் என தோன்றியதால் இந்த பதிவு.
இந்த நூறு போல 200,300, என சமூக அவலங்கள் பற்றிய எனது நிலைபாடு, எண்ணம், கோவம் , ஏக்கம் என அனைத்தையும் உங்கள் பார்வைக்கு சமர்பிர்பேன்.

நன்றிகளோடு உங்கள் கருத்தை,மறுமொழியை எதிர்நோக்கும் சாமானியன் ஒன்பத்துவேளியிலிருந்து.

Friday, September 25, 2009

என் இந்திய நாடு

'உலகிலேயே அதிகமான ஏழைகள் வாழும் நாடு இந்தியா. அதிகமான மக்கள், பசியோடும், பட்டினியோடும் படுக்கைக்குப் போகும் நாடு இந்தியா. குறைப்பிரசவம் மற்றும் குறைவான எடையோடு பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்' -இப்படித்தான் சொல்கின்றன உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள். ஆனாலும், 'மிகவேகமாக வளரும் நாடு இந்தியாதான்' என்று மூச்சுக்கு முந்நூறு தடவை நமது பிரதமர் மன்மோகன் சிங் சொல்லிக் கொண்டு அலைவது தனிக்கதை.

நம் பாரதத் திருநாட்டில், ஏழைகளுக்காக உழைக்கும் இந்த மக்கள் சேவகர்களின் சில திருவிளையாடல்களைப் பாருங்கள்.

கொள்கையே இல்லாத வெளியுறவுத் துறைக்கு இரண்டு மந்திரிகள். ஒருவர் கேபினட் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா. தினம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் இல்லாத கொள்கையைப் பற்றி 'ரூம்' போட்டு யோசிக்கிறார்.

இன்னொருவர் இணையமைச்சர் சசிதரூர். இவர்தான், விமானத்தில் சாதாரண வகுப்பை, 'மாட்டுத் தொழுவம்' என்று வர்ணித்தவர். இவரும் தன் பங்குக்கு தினம் 40,000 ரூபாய் செலவில் ரூம் போட்டு தன் 'சிந்தனாசக்தி'யைப் பட்டைத் தீட்டி, நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்பவர்.


'சீனா தலையில் குட்டுகிறது. இலங்கை காலை வாருகிறது. பாகிஸ்தான், பர்மா இரண்டும் பக்கத்துக்கு ஒன்றாக இடிக்கிறது. நட்பு நாடான நேபாளம்கூட இப்போது 'நோ' சொல்லி விட்டது. ஆனால், இது எதைப் பற்றி- யும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய வெளியுறவுத் துறையும், மத்திய அரசும் மவுனச் சாமியார்களாக இருக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், விதர்பாவில், விவசாயிகள் கடன் பிரச்னையால், கொத்துக் கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருப்பதை யாரும் மறந்து விட முடியாது. அங்கு 80% விவசாயிகள் கட்டமுடியாமல் போன அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு தெரியுமா? சொன்னால் நம்ப முடியாது. ஒவ்வொருவருக்கும் வெறும் 50,000 ரூபாய்தான். அதாவது, பாரதத் திருநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவின் அரைநாள் அறை வாடகை.

தனிவிமானத்திலும், ஹெலிகாப்டர்களிலும் மட்டுமே பறந்து வழக்கப்பட்டவர்களுக்கு, வறட்சி திடீரென்று ஞானக் கண்களைத் திறந்து விட்டிருக்கிறது. மாட்டு வண்டிகளிலும் ரயிலிலும் பயணம் செய்து செலவைக் குறைப்பதாக, செய்திகள் கசிகின்றன. விமானத்தில் சென்றால்கூட, ஒருவரோடு செலவு முடிந்து விடும்.

ரயிலில் போனால்... 10-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் புடைசூழ, அக்கம்பக்க பயணிகள் அடிவயிற்றில் அக்னியைச் சுமக்க, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவலர்கள் கெடுபிடியில் சிக்கி பயணிகள் தவிக்க, ஏழை இளவரசர் ராகுல் பயணம் செய்தாராம். சமீபத்தில், தமிழகத்தில் ராகுல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆன செலவு 1 கோடியைத் தாண்டுமாம். கேட்டால்... சிக்கன நடவடிக்கை...

விமானப் பயணத்தையே, 'மாட்டுத் தொழுவம்' என்று பரிகாசம் செய்யும் கதர் கண்மணிகளே! தமிழ்நாட்டில் ஒரு முறை பஸ்சில் பயணம் செய்து பாருங்கள்... செம்மறி ஆட்டுத் தொழுவத்தைவிட கேவலமாக இருக்கிறது. மூன்று பேர் அமரும் இருக்கையில், முக்கால் மனிதன் சீட்டுக்கு வெளியில்தான் தொங்க வேண்டும்.

முன்பதிவு இல்லாத ரயில் பயணமோ, நரகத்தில் இருப்பதைவிட கொடுமையானது. 72 பேர் பயணம் செய்ய வேண்டிய பெட்டியில், இருநூறுக்கும் அதிகமானவர்களைச் செம்மறி ஆடுகளைப் போல அடைக்க வேண்டியிருக்கிறது. கழிவறையிலும் கால் வைத்து நிற்க இடமில்லாமல், பயணம் செய்யும் மக்களுக்காகத்தான், தினம் ஒரு லட்சம் செலவில் ரூம் போட்டு யோசிக்கிறார்கள், நமது பாரததேசத்தின் அமைச்சர் பெருமக்கள்...

ஊழலும் ஊதாரித்தனமும், நமது அரசியல்வாதிகளின் உடன் பிறப்புக்கள். கோடிகோடியாக கருப்புப் பணம் சுவிஸ் வங்கியிலும் இந்திய நிலச் சந்தையிலும் புதைந்து கிடக்கிறது.

இந்தக் கொடூர நாடகமாடிகளின் கூத்துக்களை எண்ணிப் பார்க்கும்போது, யாரோ ஒரு கவிஞன் எழுதிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

'நான்முகனே...

மீண்டும்
என்னை
இந்தியாவில்
பிறக்க வைக்க நினைத்தால்...
இரைப்பை இல்லாமல்
பிறக்க வைக்கவும்!'

-பசுமை கட்டுரை-

Saturday, September 19, 2009

உன்னை போல் ஒருவன்

ஹிந்தி wednesday படத்தின் ரீமேக். தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் ஒரு Stupid Common Man தான் உன்னை போல் ஒருவன். படம் 107 நிமிடங்கள் தான். கமல் 5 நாட்களில் நடித்து கொடுத்தாக கூறப்படுகிறது.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிக திறைமையாக நடித்து கமலுக்கு சரியான போட்டி தந்திருக்கிறார். மலையாள slang சில இடங்களில் புரிய மறுத்தாலும், குறையாக சொல்ல முடியாது. மோகன் லாலுக்கு ஸ்பெஷல் பாராட்டு தந்தே ஆக வேண்டும்.

கமல். நடிப்பு திறனை காட்ட அதிக வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்த இடத்தில் பட்டையை கிளப்பி விட்டார். இறுதியில் காரணம் சொல்லி அழும்பொழுது அடா அடா. . . கமலுக்கு பத்மஸ்ரீ தந்தது தப்பே இல்லை. மற்றபடி ஹிந்தி சாயல் பல இடங்களில் எட்டிபார்கிறது. படத்தின் மிக பெரிய மைனஸ் ஆங்கில சொற்கள் கலப்பு. பல இடங்களில் புரிய மறுக்கிறது. இதை மட்டும் கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் மெருகேறி இருக்கும். மொத்தத்தில் கண்டிப்பாக காணவேண்டிய A Must Watch Movie.

எனது மதிப்பீடு : 7/10

Wednesday, September 16, 2009

DoorDarshan 50

தூர்தர்ஷன் பொன்விழா காண்கிறது. எனக்கு மட்டுமில்லாமல் பல பேருக்கு இது மகிழ்ச்சி கலந்த மலரும் நினைவுகளை ஏற்படுத்தும்.

டிடி அந்நாளில் இருந்த ஒரே தொலைக்காட்சி அலைவரிசை. டிவி என்றாலே டிடி தவிர ஒன்றும் கிடையாது.அதுவும் மிகப்பெரிய ஆண்டெனா வைத்தாக வேண்டும்.
நான் பிறந்த கிராமத்தில் இருந்த ஓரிரு தொலைக்காட்சிகளில், எங்கள் வீட்டு டிவியும் அடக்கம். பின் மாலை நேரங்களிலேயே தமிழ் ஒலிபரப்பு தொடங்கும் என்பதனால் , இருக்கிற வேலைகளை விரைவாக முடித்து அனைவரும் டிவி முன் அமர்ந்து விடுவார்கள்.


அதுவும் வெள்ளி இரவு வரும் ஒளியும்ஒலியும், ஞாயிறு மாலை திரைப்படங்கள், புதன் இரவு Chitrahar, போன்ற நிகழ்ச்சிகள் மிக பெரிய ஆதரவு பெற்றன. தவிர இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடிகொளிட்டதே டிடி தான். அந்நாளில் டிடி அனைத்து கிரிக்கெட் ஆட்டங்களையும் ஒளிபரப்பியது. நான் கிரிக்கெட்டை பார்த்தது,ரசித்து,கற்றுகொண்டது என அனைத்தும் டிடி மூலமாக நடந்தது.

வெறும் திரைப்பாடல்கள்,திரைப்படங்கள் என நில்லாமல் கல்வி, விளையாட்டு, பொதுஅறிவு, செய்திகள் போன்ற பலதரப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் தயக்கமின்றி ஒளிபரப்ப பட்டன. ராஜிவ் காந்தி மரணம் பற்றிய செய்தி டிடி யில் வெளியான போது ஊரே அமைதியில் ஆழ்ந்திருந்தது. மூன்று நாட்கள் துக்கமும் அனுசரிக்க பட்டது.

தொடக்கத்தில் மெதுவாக நுழைந்த தனியார் தொலைக்காட்சிகள் போகப்போக பிரம்மாண்டமாக தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்தன. விளைவாக இன்று நூற்றுகணக்கான தனியார் அலைவரிசைகள் ஆதிக்கம். நம்பகத்தன்மை இழந்து, விளம்பர மோகம் கொண்டு, வியாபார முகம் எடுத்து,தனியாக Sensor Board கேட்க்கும் வரை வந்து நிற்கிறது இன்றைய தொலைக்காட்சி உலகம். நேற்று வந்த கலைஞர் தொலைக்காட்சியும்,இசையருவியும் கொண்ட ரசிகர்கள் எண்ணிகையை கூட 50 வருட பாரம்பரியம் கொண்ட டிடி தாண்டவில்லை என்பதே கசப்பான உண்மை.

யாரை குற்றம் சொல்வது ?
நவீன தொழில்நுட்பம் பலவற்றை வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருக்கும் பிரசார் பாரதியையா ? இல்லை பிரசார் பாரதிக்கு சரியான அதிகாரமும், பொருளுதவியும் தராத அரசையா ? இல்லை தலைமுறை மாற்றம் என சொல்லிக்கொண்டு சரியானவற்றை வரவேற்க தவறிய இன்றைய ரசிகர்களா ?
யாரை குற்றம் சொல்வது ?

எது எப்படியானாலும் தூர்தர்ஷன் இன்னும் செழிப்பாக வளர்ந்து நூற்றாண்டு விழா காணவேண்டுமென்பதே நாட்டில் பரவலாக இருக்கும் கோடிக்கணக்கான ரசிக மக்களின் மனதில் இருக்கும் பெரிய ஆவல்.

Monday, September 14, 2009

தலைமுறையைத் தொலைத்து நிற்கும் வேளாண் தொழில்

விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்களது ஒரு தலைமுறையை வேளாண் தொழிலிலிருந்து முற்றிலும் தொலைத்துவிட்டனர். ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தங்களது பிள்ளைகளை அனுப்பி, மாத ஊதியம் பெறும் வர்க்கத்தினராக்கிவிட்டனர். தற்போது வேளாண் தொழிலில் ஈடுபட்டிருப்போரில் பெரும்பான்மையினர் 45, 50 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே.

விவசாயம் லாபகரமற்ற தொழில் என்றாகிப்போனதால், தங்களது வாரிசுகளை இத்தொழிலில் ஈடுபடுத்த சிறு, குறு, பெரு விவசாயிகள் எவரும் பொதுவாக முன்வருவதில்லை.

விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சிதான் இந்தியாவின் சமச்சீர் வளர்ச்சிக்கு உதவும். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், நகர்ப்புற மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் தீர்வாகவும் அமையும்.

இந்தியாவின் பலம் அதன் விவசாயிகளிடமும், வேளாண் தொழில் வளர்ச்சியிலும்தான் இருக்கிறது. நாளைய உலகின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நாம், இன்றைய விவசாயியின் பசியையும் பட்டினியையும் போக்க இயலாத நிலைமையில் இருப்பது வருந்தத்தக்க விஷயம். இதற்குக் காரணம், தவறான பொருளாதாரப் பார்வையா அல்லது ஆட்சியாளர்களிடம் தொலைநோக்குப் பார்வை இல்லாமையா? எதுவாக இருந்தாலும், இந்த நிலைமை தொடரக் கூடாது!

நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிக்குத் தன் தேவையைப் பூர்த்தி செய்யக்கூட வருவாய் கிடைப்பதில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கும், நடவுக்கும்கூட தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. விளைந்த பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் கதிர் முற்றிக் கிடக்க, விளைநிலங்கள் பயிரின்றி, தரிசாகக் கிடக்கின்றன. நெல் நடவு தாமதமானதால் மகசூல் பாதிப்படையும்.

சோறுடைத்த சோழ நாடு இன்று சோற்றுக்கு கையேந்தி நிற்கிறது. இந்த நிலை வெகு விரைவில் இந்த நாட்டுக்கே வந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.

அனைத்தும் அறிந்தும், ஒன்றுமே செய்ய இயலாதவனும், குல தொழிலை தொலைத்தவனுமான சாமானியன் ஏதாவது அற்புதம் நடைபெறாதா என்ற ஏக்கத்துடன் இந்த பதிவை சமர்பிக்கிறான்.

அண்ணா நூற்றாண்டு SPECIAL

அண்ணா முதலமைச்சராக இருந்த சமயம் அது. அவருடைய காஞ்சீபுரம் வீட் டில் திடீரென்று ஃபிரிட்ஜ் இருப்பதைப் பார்த்தார். வியப் புடன் ''இதை எப்போது வாங்கி னீர்கள்?'' என்று வீட்டாரிடம் விசாரித்தார்அண்ணா.

''மாதத் தவணையில் வாங்கி னோம். நீங்கள் இங்கு வரும் போது, உடன்வரும் அதிகாரிகள் 'ஐஸ் வாட்டர்' கேட்கிறார்கள். கடைக்குப் போய் வாங்கி வர வேண்டியிருக்கிறது'' என்று மருமகள் பதில் கூறவும், ''நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு நம் மிடம் இருப்பதைத் தந்தால் போதும். நமது வசதிக்கு ஏற்ப வாழ்வதுதான் சரியான முறை'' என்றார் அண்ணா.

அண்ணா காபி, டீ தவிர, வேறு ஓவல், ஹார்லிக்ஸ் இப்படி விலையுயர்ந்த பானங்களை அருந்த விரும்பியதில்லை.

அண்ணாவுக்குக் கார் ஓட்டவும் தெரியும். 1953-ல் அவரிடம் இருந்த எம்.டி.ஸி.4758 இந்துஸ் தான் காரை, நகரை விட்டுக் கடந்ததும் அவரே ஓட்டுவார். இருபது மைல் வேகத்தை கார் தாண்டாது.

கல்லூரி நாட்களிலிருந்து நாளும் புத்தகங்களைப் படிக் கும் பழக்கம் உடையவர் அண்ணா. எடுத்த புத்தகத்தைப் பொழுது விடிந்தாலும் படித்து முடித்துவிட்டே தூங்குவார்.


விஞ்ஞானம், இலக்கியம், வரலாறு, பொருளியல் என நூலகத்தில் புதிதாக வந்த எதை யும் அவர் படிக்காமல் விட்ட தில்லை. பழைய புத்தக வியா பாரிகள் இருவர் அவருடைய நண்பர்களாக இருந்தனர். வாரம் ஒரு முறை ஒரு சாக்கு மூட்டையில் பழைய புத்தகங் கள் அவரைத் தேடி வரும். மறு வாரம் புதிய மூட்டை வந்த பின், பழைய மூட்டை திரும்பும். சகோதரியின் மகளுக்கு 'கான் சர்' வந்ததும், கான்சர் வியாதி சம்பந்தமாக வந்துள்ள புத்தகங் கள் அனைத்தையும் வாங்கிப் படித்து முடித்துவிட்டார் அண்ணா.

அறுவைச் சிகிச்சை முடிந்து அண்ணா அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து வந்தபோது, இந்தியத் தூதராக இருந்த தவானின் விருந்தாளியாக அவர் ஒரு நாள் இருந்தார். அப்போது அவர் படிப்பதற்காக தவான் தன் நூலகத்திலிருந்து பல புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அண்ணா அவற்றை லேசாகப் புரட்டிவிட் டுத் திரும்ப வைத்துவிட்டார். ''என்ன, இவை உங்களுக்கு விருப்பமில்லாத புத்தகங்களா?'' என்று தவான் கேட்க, ''இல்லை, இவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே படித்து முடித்து விட்டேன்'' என்றார் அண்ணா. வியந்து போனார், இந்தியத் தூதர். காரணம், இங்கிலாந்தில் வெளியான சமீப காலப் புத்த கங்கள் அவை.

இதனால் தான் இவர் பேரறிஞர்...

ஈரம்

அறிவழகன் இயக்கி, இயக்குனர் சங்கர் தயாரித்து வெளிவந்திருக்கும் வித்யாசமான thriller ஈரம். இப்படிஒரு கதையை தைரியமாக தந்தமைக்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் முதல் கைதட்டு. மிருகம் ஆதி, மௌனம் பேசியதே நந்தா, யூத் சிந்து மேனன், சரண்யா மோகன் போன்ற சாதாரண நட்சத்திரங்களே நடித்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ஈரம் கதையை மட்டுமே நம்பி எடுக்க பட்ட படம்.

தண்ணீர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. யாவரும் நலம் சாயல் கொஞ்சம் தெரிந்தாலும் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய படம். இயக்குனர் அறிவழகன் போல கவனம் ஈர்க்கும் மற்றுமொரு நபர் கேமரா மேன் மனோஜ் பரமஹம்ஸ. வரவேற்கிறோம் தமிழ் திரை உலகிற்கு.

S பிக்சர்ஸை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். தொடர்ந்து மிக தரமான படங்களையே தந்து, புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரும் S Pictures தமிழ் சினிமாவிற்கு ஒரு வரப்ரசாதம். இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. சன் பிக்சர்ஸ், விகடன் டாக்கீஸ், ரெட் ஜெயின்ட் மூவீஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இதனை கவனிக்குமா...?

எனது மதிப்பீடு : 6/10

Thursday, September 10, 2009

வர்த்தக இந்தியா

வறுமையை ஒழிக்க, வர்த்தகம்'

-இதை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் உலகப் பொருளாதாரத் திலகம் பிரதமர் மன்மோகன் சிங்.

'வீட்டை விற்றாலும் பரவாயில்லை, நாட்டை விற்றாலும் பரவாயில்லை, வியாபாரம் ஒன்றுதான் நாட்டின் செல்வத்தைப் பெருக்க ஒரே வழி' என்று திடமாக நம்புகிறார் மன்மோகன் சிங். அதற்கு சரியாக வால் பிடித்துச் செல்கின்றனர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகிய இருவரும்.


பொருளாதார முடக்கம் நீங்க வேண்டுமானால், சுதந்திரமான, கட்டுப்பாடுகள் அற்ற வர்த்தகம் ஒன்றுதான் வழி' என்ற அமெரிக்காவின் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக, உலக வர்த்தக அமைப்பு நாடுகளின் (கீஜிளி) 35 வர்த்தக மந்திரிகளை டெல்லிக்கு அழைத்து, கடந்த வாரத்தில் கூட்டத்தை நடத்தி இருக்கிறார் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா. இதையடுத்து, வருகிற 14-ம் தேதி ஜெனீவாவில் கூடி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, எப்படியாவது விவசாயத்தை, கட்டுப்பாடுகளற்ற காளையாகத் திரியும் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்த்துவிடுவது என்கிற ஒரு வரி அஜெண்டாவோடு தீவிரமாக சுழன்று வருகிறது இந்திய அரசு.

இந்தியாவின் 63-ம் சுதந்திர தினத்தன்று, ஆந்திராவில் 13 விவசாயிகளும், விதர்பாவில் 6 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகள் வீடு, நிலங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர். கடந்த மாதம் மட்டும் மத்திய பிரதேசம் ஜான்சி ரயில் நிலையம் வாயிலாக 1.5 லட்சம் விவசாயிகள் வெளியேறியதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் இப்போதே இந்த நிலை. அப்படியிருக்கும்போது விவசாயத்தை உலக வர்த்தகத்தில் சேர்த்தால், விவசாயிகளின் நிலைமை என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அதனால்தான், ‘உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து விவசாயத்துக்கு விலக்கு அறிவியுங்கள்' என்று நீண்ட காலமாகவே உலகம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் பேராடி வருகின்றன.

இப்போதுகூட டெல்லியில் வர்த்தக அமைச்சர் மாநாடு நடந்தபோது, இந்தியா முழுக்கவிருந்து லட்சக்கணக்கில் விவசாயிகளை டெல்லிக்கு கூட்டி வந்து அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் யூத்வீர் சிங். ஆனால், அமெரிக்கா என்ன சொக்குப் பொடி போட்டதோ தெரியவில்லை, எதையும் கண்டு கொள்கிற நிலையில் இல்லை இந்தியா.

அமெரிக்கா யானை... படுத்தாலும் குதிரை மட்டம்தான். ஆனால், இந்தியா..? புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட கதையாகத்தான் முடியப்போகிறது.

-பசுமை கட்டுரை