தகவல் அறியும் உரிமை சட்டம்
Right To Information Act
இந்திய இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அரசு மற்று அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். இங்கு தகவல் என்பது பலதரப்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. அதாவது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ}மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே 'தகவல்' என்ற பிரிவின்கீழ் வைக்கப்படுகின்றன.
அரசுத்துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால், அதைக்கூடக் கேட்டுப் பெற முடியும். எடுத்துக்காட்டாக. ஒரு தனியார் நிறுவனத்தின் ஆண்டுக் கணக்கு, இயக்குனர் குழுமம் உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டுமானால், கம்பெனிகளுக்கான பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்யலாம். இதேபோல், அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிப் பெற முடியும்.
தகவல்களைப் பெறுவது நமக்கு எந்தவகையில் உதவும் என்று கேள்வி எழலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதால், அரசு நிர்வாகத்தால், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கிறது. இதனால், லஞ்சமும் ஊழலும் குறைகின்றன.
அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் தகவல்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஏதாவது குறைகள் இருப்பின் அதைக் களைய வேண்டும் என்ற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் ஜனநாயகத்தில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள வழி ஏற்படுகிறது.
மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த நோக்கத்தை எய்துவதற்கும், குடிமக்கள் ஒவ்வொருவரும், அரசு(அல்லது) அரசு சார்ந்த அலவலகங்களிடமிருந்து தகவல் பெறுவதற்கும் ஏதுவாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15ன்படி, தமிrநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீr 07.10.2005 முதல் இயங்கி வருகிறது.

No comments:
Post a Comment