மக்கள் சக்தி கட்சியானது, கடந்த 5 வருடங்களாக கிராமப்புற மேம்பாடு, தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு, தேசிய நதிநீர் இணைப்பை வலியுறுத்தி மக்கள் ஆதரவைத்திரட்டுதல், சுய முன்னேற்ற நூல்கள், பத்திரிகைகளை வெளியிட்டு இளைஞர்களை தன்னெழுச்சி கொள்ளச் செய்தல் போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளைச் செய்து வந்த இளைஞர்களால் 25.07.2009 அன்று ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சி. அதை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...
கட்சியின் முக்கியக் கொள்கைகள்
இலாபகரமான விவசாயம்:
விவசாயத்தைப் பாதிக்கும் நிலவள மேம்பாடு, நீர்வளம், கட்டுபடியாகும் விலை, விதை, போதிய சந்தை வசதி, கடன்வசதி, அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு, பதப்படுத்துதல், காப்பீடு, இயற்கையோடிணைந்த விவசாய முறை... போன்ற அனைத்துக் காரணிகளையும் ஒரு சேர உயர்த்தும் விவசாயக் கொள்கை.
புதிய பொருளாதாரக் கொள்கை:
அறிவியல் தொழில்நுட்ப, தகவல் தொடர்பு புரட்சி யுகத்தின் காலத்திற்கேற்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவு.
தரமான, கட்டணமில்லா - கட்டாயக் கல்வி:
ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவருக்கும் தரமான, கட்டணமில்லா கட்டாய கல்வி
கல்வியும், மருத்துவமும் முழுமையாக அரசுமயம்..
இலாபமீட்டக்கூடிய தொழில்கள் தனியார் வசமிருப்பதுபோல் அத்தியாவசியத் தேவையுள்ள சேவைத்துறைகளான கல்வியும், மருத்துவமும் முழுமையாக அரசின் வசமாவதற்கு ஆதரவு.
மாநில சுயாட்சி:
ஒரு மாநில அரசு, மக்கள் நல அரசாக பரிபூரண சுதந்திரத்தோடும், நிதியாதாரத்தோடும் செயல்பட வழிவகுக்கும் அரசியல், பொருளாதார உரிமைகள் பெற்ற மாநில சுயாட்சி - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைக்கும் அரசியல் பிரிவு 356ஐ நீக்குதல் - மாநில அரசின் நிர்வாகத் தலைமையாகவும், மாநிலத்தைக் கண்காணிக்கும் பதவியாகவும் உள்ள மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் பதவியை ஒழித்தல்.
மீதி அடுத்த பதிவில்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment