Thursday, August 27, 2009

எங்கே போனது மனிதம்

"தம்மிடம் சிக்கிய ஒன்பது தமிழர்களை சித்திரவதை செய்து ஈவிரக்கமில்லாமல் இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்துள்ளது. விடியோவில் பதிவான இந்த கொடூர சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த "சானல் 4' தொலைக்காட்சி புதன்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது.

அந்த ஒன்பது பேரும் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை ஒரு ராணுவ வீரரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த விடியோ, ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் அமைப்பு மூலம் சானல் 4 தொலைக் காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடியோ காட்சி நிஜமானதல்ல என்றும் இத்தகைய ஈவிரக்கமற்ற கொடிய செயலில் தமது ராணுவம் ஈடுபடவில்லை என்றும் இலங்கை மறுத்துள்ளது."


நெஞ்சை உருக்கும் செயல். இத்தகைய கொடுமைகளை உலகம் கண்டிக்காமல் இருப்பது, உலகம் தர்மசக்கரத்தின் அடிப்படையில் சுழலுவதில்லை என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

சில காலங்களுக்கு முன்பாக அல்-குவைதா, ஈராக்கில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் பிணையாளிகளைக் கொலை செய்யும் வீடியோக்கள் வெளியிட்ட பொழுது துடித்த உலகம், இறையாணமை உள்ள ஒரு நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை நாட்டின் இராணுவம் செய்யும் பொழுது கண்டும் காணாமலும் இருக்கிறது. இப்படி மனித அத்துமீறல் செய்யும் ஒரு நாட்டிற்கு இந்தியா உதவுவதை எண்ணும் பொழுது இந்தியாவையும் மிருக வெறிபிடித்த தீவிரவாத நாடு என்று சொல்வதில் தவறில்லை. வரலாறும் அதையே சொல்லும்.

செத்துப்போவன் தமிழன் என்பதற்காக மட்டும் அல்ல அவன் மணிப்புரியோ அல்லது பாகிஸ்தானியாகவோ இருந்தால் கூட அவனுக்கு ஆதரவாக இருப்பதே மனித குலத்தை நாகரிகப் பாதைக்கு இட்டுச் செல்லும். இத்தைகய செயல்களை ஆதரிக்கும் இந்தியாவும் அதனை ஆதரிக்கும் இந்தியர்களும் காட்டுமிராண்டி காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவர்கள். இத்தகைய கொடும்பாதாக செயல்களை செய்த ஒரு நாட்டுக்கு ஆதரவாக நான் வாழும் நாடு ஐநாவில் வாக்களித்திருக்கிறது.

ஒட்டுத்துணியின்றி ....உயிரை சுட்டு எடுக்கும் இந்த கேவலத்தை பார்த்துகொண்டு இருப்பதுதான் இந்த இந்தியாவின் இறையாண்மை என்றால் .... அந்த இறையாண்மை எனது தலை மயிருக்கு சமம்

பி.கு : அந்த வீடியோ காட்சி மற்றும் படங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன்.

No comments: