Saturday, August 22, 2009

கந்தசாமி


சுமார் இரண்டு வருட காலத்திற்கு பிறகு விக்ரம் படம்.ஒரே வரியில் சொன்னால் 'அந்நியன்' + 'சிவாஜி' = 'கந்தசாமி' அவ்வளவே. இரண்டு வருட உழைப்பு விக்ரமிடம் நன்றாக தெரிகிறது. தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறார். நாயகி ஸ்ரேயா கிராப்பு மண்டையுடனும், கிழிந்த உடையுடனும் வந்து பாட்டு பாடுகிறார்,காதல் செய்கிறார் - விளைவு கடுப்பு தான் மிஞ்சுகிறது. இது போல கதாபாத்திரங்களுக்கு ஒரு ரகசியாவோ,முமைத் கானோ போதுமே எதற்கு ஸ்ரேயா ? வடிவேலு மிகசரியான வேகத்தடை. சலிப்பே ஏற்படுகிறது.

ஷங்கர் போல MESSAGE படங்களை தர வேண்டும் என நினைத்து அவரது பிரமாண்டத்தை மட்டுமே தந்திருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். அந்த huge list இல் சேர இன்னும் homework தேவை.ஒரு சில பாடல்கள் மொக்கையை போட BGM பட்டையை கிளப்புகிறது. Foreign Exchange,Share Market,Tax Fraud,Black Market போன்றவையான Economic Offence எனப்படும் சிவாஜியில் பார்த்த அதே BLACK MONEY கான்செப்ட் தான். யோசிக்க வைக்கும் மற்றுமொரு படம். கருத்து சொல்ல வேண்டும் என்பதெல்லாம் சரி தான், ஆனால் அதை மிகசரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். காமெடி,கவர்ச்சி,தேவை இல்லாத பிரம்மாண்டம் போன்ற இடை சொருகல்கள் படத்தின் மிகப் பெரிய தொய்வு.

மரத்தில் சீட்டு எழுதி கட்டுபவர்களின் கோரிக்கையை தீர்த்து வைக்கிறார் விக்ரம். தாகம் என்றால் மரக்கன்றை தான் தர வேண்டுமே ஒழிய மினரல் water bottle தர கூடாது. பணம் மட்டுமே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாகாது.


வடிவேலுவின் காமெடி,ஸ்ரேயாவின் காதல்,பல நீளமான காட்சிகள்,சில தேவையற்ற காட்சிகள் என அத்தனையும் நீக்கி இருந்தால் படத்தின் நீளமும் குறைந்திருக்கும் , வேகமும் கூடியிருக்கும். ( படத்தின் நீளம் 3:15 மணி நேரம்). ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும், யோசிங்கள் தானு. அடுத்த படமும் தெலுங்கு மகதீரா rights வாங்கி இருக்கிறார் போல. என்னவென்று சொல்ல... கதை தேர்வு மிக முக்கியம். மொத்தத்தில் புரியாத பல காட்சிகள் இருந்தாலும், ஒரு தடவை மட்டுமே பார்க்கலாம் போன்ற படம்.

எனது மதிப்பீடு : 5/10

No comments: