Saturday, April 4, 2009

அயன்



மசாலா படம் என்றாலும் சன் பிச்சர்ஸ் வெளியிடும் முதல் ரசிக்கவைக்கும் படம் (உபயம்:AVM). பர பர வென முதல் காட்சியில் இருந்து கடைசி வரை தொய்வில்லாமல் திரைகதையை நகர்த்தி இருக்கும் இயக்குனர் கே.வி.ஆனந்திடம் சரக்கு இருப்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். நாயகன் சூர்யா பிரமாதப்படுத்தி இருக்கிறார். நடிப்பு,தோற்றம்,டான்ஸ் என அனைத்து விதத்திலும் வளர்ந்து வரும் நாயகர்களுக்கும சூர்யா ஒரு சிறந்த முன்னுதாரணம். நாயகி தமன்னா ஒருசில காட்சிகளில் அழகாக தெரிந்தாலும், நடிப்பு விஷயத்தில் 0 தான்.

சூர்யாவை தவிர படத்தில் கவர்வது காமெராவும் இசையும். இயக்குனரே ஒரு காமிரா மென் என்பதாலோ என்னவோ காமிரா விஷயத்தில் தனி கவனம் செலுத்தி இருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இளமை துள்ளும் இசையுடன் தாளம் போட வைக்கிறார். பெரிதாக குறை ஒன்றுமில்லை என்றாலும் திரைகதையை இன்னும் ஆழம் படுத்திருக்கலாம். மொத்தத்தில் அயன் ஒரு commercial action thriller.

எனது மதிப்பீடு : 5

No comments: