விவசாய நீர்நிலைகளுக்கும் பேராபத்து:
முன்பு மாதக்கணக்கில் தொடர்மழை பெய்யுமாம். ஆனால் தற்போது நாள் கணக்கில் தான் மழை பெய்கிறது. முன்பை விட மழை அளவு குறைந்துள்ளது- முன்பை விட அதிகமாய் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது-. விவசாயிகளுக்குக் கிடைக்கும் விளைச்சல் பாதித்துப் பொருளிழப்பு ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கத்தின் பணம் செலவழிக்கப்பட்டு வீணாகிறது.
ஏனெனில் நகர்ப்புறங்களிலுள்ள ஏரி, குளங்களில், 60 விழுக்காடு அளவு ஏரி குளங்கள் ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் ஆகிவிட்டன. இன்று குடிக்க குளிக்க எனத் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நிலை. பால் விலைக்கு ஈடாகத் தண்ணீர் விலை ஆகிவிட்டது. குடிநீருக்காகக் கால் கடுக்க நடக்கின்ற, காத்துக் கிடக்கின்ற மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்து நீர் எடுக்கின்ற நிலை ஒருபுறம்.
தேங்குவதற்கு வழியற்று எந்தப் பயனுமின்றி கடலோடு கலந்து தண்ணீர் காணாமல் போவது மறுபுறம். இதற்கு காரணம் நீர்நிலைகளைக் கைப்பற்றுபவர்கள் தான். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? ஆள் பலமும் அதிகார பலமும் எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்தவிடாமல் செய்து விடுகிறது-. வீட்டு வசதி வாரியமும் குளங்களையும் நீர் நிலைகளையும் அதிகாரப்பூர்வமான வீட்டுமனைகள் என்று அறிவித்து அதையும் பல இடங்களில் விற்பனை செய்தது தவறு மட்டுமல்லாமல் மாபெரும் குற்றமாகும்.
விவசாயிகளின் கல்லறைகளின் மீது எழுப்படும் மாடமாளிகைகள்:
இன்னொரு பக்கம் விவசாயிகள் கடன் தொல்லைகள் சென்ற ஆண்டில் உழவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காண்டேசு என்ற பகுதியில் கடந்த 8 மாதங்களில் 81 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்பு 74 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பட்ஜெட் 2006ல் நாடாளுமன்றத்தில் உழவர்கள் தற்கொலை குறித்த 6 மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டது. அது ஆந்திராவில் 1322, மராட்டியத்தில் 666, கர்நாடகாவில் 323, கேரளாவில் 136, ஒரிசாவில் 5 என்றும் கூறப்பட்டுள்ளது.விவசாயிகளின் தற்கொலைகள் மூலம் வேளாண்மைத் தொழில் நெருக்கடியைக் குறித்த விழிப்புணர்வை நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளன. வட்டி தள்ளுபடி மட்டும் விவசாயிகளுக்குத் தீர்வாகாது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியப் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார சமச்சீரின்மை தொடரும் மோசமான சூழலில், நாட்டின் மொத்த ஜனத் தொகையில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இதைப் போக்காமல் ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி, பணக்காரர்களின் பைகளை நிரப்பும் இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் கொண்டு வர வேண்டும். இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
No comments:
Post a Comment