பதினைந்தாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் இந்த சூழ்நிலையில், நிறைய கூத்துகள்,நாடகங்கள் அரங்கேற இருக்கின்றது. அப்படி ஒரு கூத்தை,மிக சிறந்த காமெடி ஒன்றை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முதலில் நடத்தி இருக்கிறார்.
உத்திர பிரதேச மாநில ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த சோனியா தனது சொத்து மதிப்பை தெரிவித்துள்ளார். அதன்படி அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ1.38 கோடி.சொந்தமாக குடி இருக்க வீடு இல்லையாம்,சொந்த கார் இல்லையாம். அவரது சொத்து மதிப்பு விவரம்,
- 18.05 லட்சம் மதிப்புள்ள பூர்வீக வீடு இத்தாலியில்
- 28.61 லட்சம் யூகோ வங்கியில்
- 20 லட்சம் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்
- 1.99 லட்சம் தேசிய சேமிப்பு திட்டத்தில்
- 24.88 லட்சம் தனிநபர் வருங்கால வைப்பு நிதியில்
- 11.08 லட்சம் மதிப்புள்ள தங்கம்
- 18.37 லட்சம் மதிப்புள்ள வெள்ளி
- 2.19 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலங்கள்
கடந்த நிதியாண்டில் 5.58 லட்சம் ரூபாய் வருமான வரியும், 32,512 ரூபாய் சொத்து வரியும் செலுத்தியுள்ளாராம்.
ஆனால் சோனியாவின் மகன் ராகுல் காந்திக்கு 2.23 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அவரது வேட்புமனுவில் கணக்கு காட்டி இருகிறார்கள்.
'குடும்பம் இருந்தால் சொத்து சேர்க்க ஆசை' வரும் என்னும் ஒரே காரணத்திற்காக கடைசி வரை திருமணமே செய்யாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து நாட்டிற்கு உழைத்த கர்ம வீரர் போன்ற தலைவர்கள் எங்கே... தனது சொத்து மதிப்பை கூட மக்களுக்கு உண்மையாக தெரிவிக்காத அன்னை போன்ற தலைவர்கள் எங்கே...
நெஞ்சு பொறுக்குதில்லையே...
No comments:
Post a Comment