அந்தக் கிணறு...
என்றேனும் நிரம்பி வழிந்திருக்கலாம்...
அந்த வற்றிய நதி
என்றேனும் சல சலத்து ஓடியிருக்கும்
அந்த ஆற்றுப் படுகையில்
என்றேனும் ஊத்துத் தோண்டித்
தண்ணீர் ஊறியிருக்கலாம்
ப்ளாஸ்டிக் பாட்டில்
தண்ணீருக்குக் காசு கொடுத்துவிட்டு
பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து
பெய்ய ஆரம்பித்த மழையின்
முதல் துளியுடன் கடைசித் துளியையும்
பத்திரப் படுத்தினேன்
என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!
--- அருணா---
No comments:
Post a Comment