Monday, July 6, 2009

நாடோடிகள்


சுப்ரமணியபுரம் இயக்கிய சசிகுமார் நடிக்க, அதில் நடித்த சமுத்திரகனி இயக்கிய படம் நாடோடிகள். ' நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே' என டைட்டில் கார்டிலேயே கதையை சொல்லி விடுகிறார் இயக்குனர். சசிகுமார்,பரணி,விஜய்,அபிநயா,அனன்யா என நடிகர்கள் அனைவரும் பாத்திரங்களில் அழகாக பொருந்துகிறார்கள். சசிகுமாரின் அத்தை மகளாக வரும் அபிநயா வாய்பேச காதுகேள முடியாதவராம். அற்புதமாக நடித்ததற்கு பாராட்டுக்கள். வேகமாக நகரும் திரைகதையை மிக நேர்த்தியாக தந்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் தவிர பட்டையை கிளப்பியிருக்கும் மற்றொரு நபர் இசைஅமைப்பாளர் சுந்தர்.சி.பாபு . சித்திரம் பேசுதடி,அஞ்சாதே போன்ற படங்களே இவரது இசைக்கு சான்று. இடைவேளைக்கு முன்னால் அந்த பத்து நிமிடங்கள் (சம்போ) அருமை . இது போல் இடைவேளை தமிழ் சினிமாவில் முதல் முயற்சி.

இறுதியாக படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்கு ஒரு கைத்தட்டல். சன்,விகடன் போன்ற நிறுவனங்கள் இது போல படங்களை தயாரித்தால் தமிழ் சினிமாவை உலகம் நிச்சயம் திரும்பி பார்க்கும்.


எனது மதிப்பீடு : 7/10

No comments: