பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
வரிகள்
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.25 லட்சத்திலிருந்து 2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* பெண்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.1.80 லட்சத்திலிருந்து ரூ.1.90 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* ஏனையோருக்கு தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
* தனிநபர் வருமான வரி விதிப்பில், சர் சார்ஜ் 10 சதவீதம் தள்ளுபடி
* நேரடி வரி வருவாய் 56 சதவீதமாக உயர்வு
* சிறுதொழில் நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு.
* கார்ப்பரேட் நிறுவன வரி விதிப்பில் மாற்றமில்லை.
* ஏற்றுமதி கடன் உறுதியளிப்புத் திட்டம் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு
* பயோ டீசலுக்கான சுங்க வரி குறைப்பு.
* வரி விதிப்பில் சீரமைப்பு செய்வதை அரசு உறுதிப்பூண்டுள்ளது.
* 2010 ஏப்ரல் 1 முதல் சுங்க மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படும்.
* புதிய வரிக் கொள்கை 45 நாட்களில் அமைக்கப்படும்.
* பெண்களுக்கான பிராண்டட் ஆபரணங்களின் விலை குறைகிறது.
* செல்பேசி சாதனப் பொருட்கள் விலை குறைகிறது.
* இதய நோய்களுக்கான மருந்துகளின் விலை குறைகிறது.
* செட்-டாப் பாக்ஸ்சுக்கு சுங்க வரி 5 சதவீதம் அதிகரிப்பு. இதனால், அப்பொருளின் விலை அதிகரிக்கிறது.
அரசு எதிர்நோக்கும் சவால்கள் :
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இளைய சமுதாயம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து அரசு முனைப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது.
* சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, வலுவான திட்டங்களை வகுத்து செயல்பட அரசு உறுதிபூண்டுள்ளது.
* நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருத்தில் கொள்ளப்படுகிறது. மீண்டும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்.
* 1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்
* வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை
* ஒரே பட்ஜெட் மூலம் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது.
* கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
* சேவை வர்த்தகத்தில் 2008-ம் ஆண்டில் இருமடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
* அன்னிய முதலீடு வெகுவாக அதிகரித்துள்ளது.
* மாநில அரசுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
* உலக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டு காலாண்டுகளின் முடிவின் நிதிநிலை சற்றே மோசமடைந்துள்ளது.
கட்டுமானம்
* உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு
* கட்டுமான நிறுவனங்களுக்கு உதவ ஐ.எஃப்.எஃப்.சி.எல். அமைக்கப்பட்டுள்ளது.
* வங்கிக் கடன்களால் நெருக்கடி நிலையிலுள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு ஐ.எஃப்.எஃப்.சி.எல் 60 சதவீத நிதியுதவி அளிக்கும்.
* ரயில்வே துறைக்கு ரூ.15,800 கோடி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிப்பு
வேளாண்மை
* வேளாண்மைத்துறைக்கு ரூ. 3.35 லட்சம் கோடி ஒதுக்கீடு
* உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளின் கடனுக்கு 1 சதவீதம் வட்டி குறைப்பு
* நீர்ப்பாசனத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
* உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கப்படும்
* விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
* நாட்டில் 60 சதவீத மக்கள் வேளாண் தொழில் புரிகின்றனர்.
* வேளாண் கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துபவர்களுக்கு 6 சதவீத கடன்.
* மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பிரச்னைக்கு தீர்வு.
* மழை நீர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயர்வு.
* 2009-10 நிதியாண்டுக்கான வேளாண் கடன் இலக்கு ரூ.3,25,000 கோடியாக உயர்த்தப்படுகிறது.
* வேளாண் கடன் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
* ராஜீவ் காந்தி ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
நலத் திட்டங்கள்
* பெண்களின் எழுத்தறிவு சதவீதத்தை 3 ஆண்டுகளில் 2 மடங்காக்க நடவடிக்கை
* ஏழைகளுக்கு ரூ. 3 க்கு 1 கிலோ அரிசி, கோதுமை
*கிராமப்புற வீட்டு வசதி மேம்பாட்டிற்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு
* வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.100 ஆக உயர்வு
* பத்திரிகை துறைக்கான சலுகைகள் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு
* நகர்புற ஏழை மக்களின் குடியிருப்புக்காக ரூ.3,973 கோடி ஒதுக்கீடு.
* மும்பை வெள்ள நிவாரண மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு.
* 2010 மார்ச் வரை ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டம் நீட்டிப்பு.
* வங்கி, காப்பீடு நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாகவே நீடிக்கும்.
* வங்கித்துறையில் விரிவாக்கம்.
* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து திட்டங்களில் 'ஆம் ஆத்மி' திட்டம் இடம்பெறும்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 4,479 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.39,100 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 144 சதவீத உயர்வு.
* பிரதமரின் கிராம சேவை யோஜ்னா திட்டத்துக்கான ஒதுக்கீடு 57% உயர்வு.
* இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்துக்கான ஒதுக்கீடு 8,883 கோடியாக உயர்வு.
* ராணுவத்தை பலப்படுத்த ரூ.1,41,703 கோடி ஒதுக்கீடு. இது கடந்த நிதி ஆண்டை விட 34 சதவீதம் அதிகம்.
* குடிமக்களுக்கு புதுமையான அடையாள அட்டை இன்னும் 12 முதல் 18 மாதங்களில் நடவடிக்கை தொடங்கும்.
* ராணுவ வீரர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகபடுத்தப்படும்
* பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயத்துக்கு நிபுணர் குழு அமைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த எரிசக்தி சட்டத்தின்படி எரிசக்தி சேமிப்பு.
* பெண் கல்விக்கு தனித் திட்டம்.
* தேசிய வீட்டுக்கடன் வங்கிகளின் கீழ் ஊரக வீட்டுக் கடன் நிதிக்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு.
* ரூ. 1 லட்சம் அளவிலான வீட்டுக்கடனுக்கு உதவி.
* கல்விக் கடன் வட்டிக்கு உதவி.
* தேசிய வேலைவாய்ப்பு மையங்கள் நவீனமாக்கப்படும்.
* வானிலை மாற்றத்துக்கு தேசிய அளவில் செயல் திட்டம்.
* முன்னாள் ராணுவத்தினருக்கு ஒன் ராங்க், ஒன் பென்ஷன் திட்டம்.
* தேசிய கங்கை திட்டத்துக்கு ரூ.562 கோடி ஒதுக்கீடு.
* இலங்கை தமிழர்கள் நிவாரண உதவிகள் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* சண்டிகர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* காமன்வெல்த் ஒதுக்கீடு ரூ.16,300 கோடியாக உயர்வு.
* ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களுக்கு ரூ.2,113 கோடி ஒதுக்கீடு.
* மேற்கு வங்க 'அய்லா' புயல் நிவாரணத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
* 2009-10-ம் நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.10,28,03 கோடி.
* பட்ஜெட் பற்றாக்குறை 2.7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்வு
* பட்ஜெட்டில் திட்டமிடப்படாத செலவுகளுக்கு 3.9 கோடி ஒதுக்கீடு
Tuesday, July 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment