கடந்த பூஜை விடுமுறைக்கு ஊர் சென்ற பொழுது வீட்டில் மின்சாரம் இல்லை. கேட்டால் "அது போய் ஒரு வாரம் ஆகிவிட்டது" என்றும், இன்னும் ரெண்டு அல்லது மூன்று வாரம் ஆகும் என்றும் சர்வ சாதாரணமாக சொன்னார்கள்.
MIXI இல்லாததால் சட்னி இல்லை, GRAINDER இல்லாததால் இட்லி,தோசை இல்லை, MOTOR இல்லாததால் தண்ணீர் இல்லை, TV இல்லாததால் கிரிக்கெட் இல்லை. மின்சாரம் இல்லாததால் இன்னும் எத்தனையோ "இல்லைகள் ". ஏழு மணிக்கு ஊரே உறங்கி விடுகிறது.
என்னடா இது என்று தொலைபேசி மூலமாகவும் நேரிலும் பல முறை EB அலுவலகத்தில் புகார் செய்தும் ஒரு பயனும் இல்லை. அவர்கள் சொன்ன பதில் சுளீர் என்றது.
REASON : TRANSFORMER FAILURE --- மின்மாற்று பழுது-----
இது போல் தமிழகத்தில் பரவலாக இருபதுக்கும் மேற்பட்ட மின்மாற்று பழுதடைந்து விட்டதாகவும், ஒவ்வொன்றாக மாற்றி வருவதாகவும் கூறப்பட்டது.
ஆக இது போல் இன்னும் இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்கள்.
ஏன் இந்த மெத்தனம், ஏன் இத்தனை புகார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறது மின் வாரியம், என்ன நடவடிக்கை எடுக்கிறது மின் துறை, இந்த புகார்கள் அரசின் கவனத்திற்கு செல்கிறதா என எண்ணிலடங்கா கேள்விகள்.
கேள்விகள்,கேள்விகள்,கேள்விகள்
அனைத்து துறைகளிலும், தூங்கி கொண்டிருக்கும் அரசை எதிர்த்து, உதவாக்கரை அதிகாரிகளை பார்த்து, ஊழலில் ஊறி போன அரசியல் வாதிகளை கண்டு பல கேள்விகள் எழுகின்றன.
கேள்விகள் கேட்டால் ஒழிய இந்த திரு நாட்டில் பதில் கிடைக்காது. கேள் கேள் நன்றாக கேள்...
பயன் படுத்தி கொள்ளுங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை. மேலும் இதை பற்றிய சந்தேகங்களுக்கு தாராளமாக என்னை வினவலாம். கீழே எனது முதல் மனுவின் SOFT COPY இணைத்துள்ளேன். படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி கொள்ளவும்.
அரசின் வலைத்தளம் : https://www.rtination.com
Saturday, October 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Mannikavendum nanbane, un Muthal kelvi pakkangalai parthu muthalil sirithu viten, piragutan sindithen, anda kashtam enaku nerdadai pondru oru unarvu yerpatathu,
Nee enaitha anda pakkangalai padithen, nam urimayai naam yen vitukoduka vendum, un urimayai vendreduka en Vazhthukal.
Hi Ram,
I don't know how to register a compliant and send to the concern person.
To whom u have sent(Procedure).
In which mode u have sent.
They are asking some fees of Rs.10 for that.
I don't know how to do......?
Either I can apply directly to State Information Commission.
I am waiting for Ur guidance.
Give me the clear information about RTI.
I have studied the handbooks given.
But I don't know what to do...
Please mail me To sekarc at in.com
Hello sekar,
Its a very easy method to file a petition for RTI.
U can file the petition from your workdesk itself.
Pls log on to www.rtination.com. Register it & file petition. The charge for this is RS 120/-.
அல்லது...
தகவல் பெற விரும்பும் நபர், ஆங்கிலம் அல்லது தமிழ்மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான இன்றைய கட்டணமான ரூ.10/- பணமாகவோ வரைவோலையாகவோ அல்லது அரசு கருவூல சீட்டு மூலமாகவோ, அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
தகவல் அளிக்க ஏதுவாக, ஒவ்வொரு அலுவலகங்களிலும், பொது தகவல் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மேலும் உட்பிரிவு 2ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றை பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். (தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் தகவல் பெறுவதற்காக பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், நிகரி எண் போன்றவைகள் தரப்பட்டுள்ளன.)
Post a Comment