Thursday, June 11, 2009

மறந்து போன மனித நேயம்


திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் வசிக்கும் 68 வயது முதியவர் தனது நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்டுத் தர வேண்டும் என மனு கொடுக்க புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம் வந்தபோது அலுவலக வாசலில் வெயிலின் கொடுமையால் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அப்போது ஆட்சியரை சந்தித்து விட்டு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், பொன்னேரி எம்எல்ஏ பலராமன், அதிமுக எம்பி வேணுகோபால் உள்ளிட்டோர் தத்தம் படைகள் சூழ வெளியேறினர். ஆனால் இந்த முதியவரை கண்டுகொள்ளத்தான் மனம் இல்லை போலும்.!

5 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வீடு வீடாக வந்து காலில் விழுந்து ஒட்டு கேட்கும் இவர்களுக்கு என்ன தெரியும் மனித நேயம் பற்றி... (அது மனிதர்களுக்கு மட்டும் தான் தெரியும்) . தனக்கு ஒட்டு போட்டவர் இப்படி கிடக்கிறாரே என்ற ஒரு குற்ற உணர்வே இல்லாமல் திரிகின்றனரே... இவர்களை கண்டு தான்
"நெஞ்சு பொறுக்குதில்லையே..."

No comments: