Wednesday, June 10, 2009

இந்த பெண்களே இப்படி தான்...

சமீபத்தில் குங்குமம் வார இதழில் ஒரு கதை படித்தேன். படிக்க படிக்க சுவராசியமாக இருந்தது. அதை அப்படியே தருகிறேன்.

ஓவர் ஸ்பீடாக கார் ஓட்டி வந்த பெண்ணை மடக்கிய போலீஸ்காரர், உங்க லைசென்ஸை எடுங்க-என்றhர்.

என்கிட்ட லைசென்ஸ் இல்லை!

அப்ப லைசென்ஸ் இல்லாம தான் கார் ஓட்டினீங்களா?

ஆமாம்!

சரி காரோட ஆர்.சி.புக்?

இல்லை...

ஏன்?

இந்த கார் என்னோடது இல்லை. இப்போது தான் திருடினேன்!

என்னது திருட்டா?

ஆமாம். திருடும் போது கார் ஓனர் சத்தம் போட்டான். அவனை கொன்னுட்டேன். பாடியை டிக்கியில தான் வச்சியிருக்கேன்.

மிரண்ட போலீஸ்காரர், இந்த பெண்ணை தனியாக சமாளிக்க முடியாது என்று உணர்ந்து, விஷயத்தை விளக்கி உயர் அதிகாரிகளை போனில் உதவிக்கு அழைத்தார்.

உயர் அதிகாரி வந்ததும் அந்த பெண்ணிடம் லைசென்ஸ் கேட்டார்.

அந்தப் பெண் தனது பர்சில் இருந்து எடுத்து கொடுத்தாள்.

ஆர்.சி.புக் கேட்டதும் அதைப்போல் எடுத்துக்கொடுததாள்.

குழப்பம் அடைந்த அந்த அதிகாரி அந்த பெண்ணிடம், 'நீங்க காரை திருடிட்டு கொலையும் பண்ணினதா எங்க போலீஸ் சொல்றhரே' என்றhர்.

எந்த பதட்டமும் இல்லாமல் காலியாக இருந்த டிக்கியை திறந்து காட்டிய அந்த பெண், 'நான் காரை ஸ்பீடா ஓட்டினதாகவும் அந்த முட்டாள் போலீஸ் சொல்லியிருப்பானே...'

அந்த போலீஸ்காரர் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்.


ரசிக்க மட்டுமே ... உள்குத்து எல்லாம் இல்லை...

No comments: