Tuesday, June 30, 2009

உதவிய நெஞ்சங்கள்

நண்பர்களே வணக்கம்,

கடந்த ஏழு நாட்களில் எனது வலைப்பூவை பார்வை இட்ட சுமார் 200 பேர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பார்த்தது 2oo ஜோடி கண்கள் என்றாலும் உதவிக்கரம் நீட்டிய நெஞ்சங்கள் வெறும் மூன்றே மூன்று. அவர்களும் எனது மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை இங்கு குறிபிட்டே ஆகவேண்டும்.

பணம் இருப்பவரிடம் மனம் இல்லை
மனம் இருப்பவரிடம் பணம் இல்லை

நம்பிக்கை என்பதும் இங்கு பல பேருக்கு கேள்விக்குறியாக இருந்தது என்பதை நாங்கள் அப்பட்டமாக உணர்ந்தோம். உதவி செய்தவர்கள் எனது நெருங்கிய நண்பர்கள் என்பதே இதற்கு சாட்சி.

சுயநலம்,நம்பிக்கையின்மை என பல தடங்கல்களையும் தாண்டி நேசக்கரம் நீட்டிய அந்த மூன்று உள்ளங்களுக்கும், எனது சிரம் தாழ்த்தி நன்றியை தெரிவிக்கிறேன்.

SIVASHANKAR - 10,000
VENKATESH - 100
R.S.THANDABANI - 1,000
RAMESH - 500
RAMACHANDIRAN - 200
SRIRAM - 5,000

மொத்தம் 16,800 ரூபாயும் இந்த வார இறுதிக்குள் ரமேஷிடம் ஒப்படைக்கப்படும்.

நூறாவது மாடி போகவேண்டும் என்றாலும், முதல் அடி முதல் படியில் தான் வைக்க வேண்டும் என்பதை உணர்ந்து, இந்த நால்வர் படை போக போக நூறு,ஆயிரம் என பெருகும் என்ற நம்பிக்கை வைத்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கும் ஸ்ரீராம் எனும் ஒரு சாமானியன்.

Tuesday, June 23, 2009

உதவுங்கள் நண்பர்களே


முந்தைய பதிவின் தொடர் பதிவிது...

என் மேல் நம்பிக்கை இருந்தால், உதவி செய்ய வேண்டும் என மனதிருந்தால் தங்களால் ஆன பொருளுதவியை 'சிறுவன் ரமேஷிற்கு' அளிக்க வேண்டுகிறேன். நீங்கள் தரும் ரூபாய் உயிரை காக்க பயன் படுகிறது என்பதை மறவாதீர்கள்.
தாங்கள் அளிக்க விரும்புவதை கீழ்வரும் வங்கி ACCOUNT இல் செலுத்துங்கள்.
நீங்கள் தந்தவை முழுமையாக ரமேஷிற்கு சென்றடையும் என்பதை உறுதியளிக்கிறேன்.

For ICICI Account Holders:

Pls Transfer Money to the account : 058301503371

For Other Bank :

Pls Deposit the Money to the account :

Number : 058301503371
Name : G.Sriram
Branch : Hosur RD,Bangalore.

தொடர்பிற்கு : G.Sriram,
+919986651565


பின்குறிப்பு :
பண உதவி செய்த அனைவரது விவரங்களும் இதே வலைபதிவில் UPDATE செய்யப்படும் .

நன்றி...

உதவுங்கள் நண்பர்களே

நான் என் வலைப்பூவை தொடங்கி 5 மாதங்கள் ஓடி விட்டன. சமூக அவலங்களை உங்களுக்கு தெரிவிப்பதுடன்,எனது கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பதிவுகள் பற்றிய மாற்று கருத்து இருந்தால் வரவேற்கிறேன் முழுமனதாக.

வெறும் எழுத்திலேயே ஓட்ட நினைக்காமல் செயலில் இறங்க ஆசைபடுகிறேன். நண்பர் மூலமாக என் கவனத்திற்கு வந்த 'குமுதம் கட்டுரை' ஒன்றை உங்களுக்கு அப்படியே தருகிறேன்...

குமுதம் ஜூன் 10,2009


உயிர் வாழத் துடிக்கும் இதயம்


மரணத்தைவிட அதைப் பற்றிய பயம் கொடியது.அதுவும் இளம்-வயதில் அப்படியொரு பயம், வாழ்க்கையையே சூனியமாக்கிவிடும். அந்த சூனியத்தின் நிழல் ராஜேஷின் முகமெல்லாம் படர்ந்திருக்க, மௌன-மாகவே இருக்கிறான்.

ஆனால், அவனின் இதயம் துடிக்கும் சப்தம் மட்டும், உலையில் சோறு கொதிப்பதைப்போல் எதிரில் இருக்கும் நமக்கும் கேட்கிறது. சந்தேகப்பட்டு அவன் சட்டை பட்டனை விலக்கினோம்...


ஒவ்வொரு துடிப்புக்கும் விலா எலும்புகளை துருத்திக்கொண்டு ராஜேஷின் இதயம் வெளிவராத குறையாக, `உதவி... உதவி...' என்று தவிப்பதைப் பார்த்ததும், அவன் கண்கைளக்கூட பார்க்க சக்தியற்று கவிழ்ந்துகொண்டோம்.


``இரவில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க அவன் இதயத்துடிப்பைக் கேட்டு தூங்காமல் நான் அழுத இரவுகள் பல'' என அவன் அம்மா லெட்சுமி சொல்ல, தன் மகனுக்கு நேர்ந்த சோகத்தை விளக்கினார் அப்பா பாஸ்கரன்... கூலிக்கு மீன் பிடிக்கச் செல்லும் சாதாரண மீனவர். ராஜேஷைத் தவிர்த்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு...

``சுனாமி வந்த 26.12.2004 எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அப்பொழுது காசிமேடு சுடுகாட்டுக்கு எதிரில் உள்ள திடீர் நகரில் குடியிருந்தோம்...

கடற்கரையெங்கும் கற்பாறைகள் உயர்ந்து நிற்க, அதனை ஒட்டியிருந்த 516 வீடுகளில் நானூறை அடித்துச் சென்றது சுனாமி.என் இரண்டு பெண் குழந்தைகளை நானும் மனைவியும் தூக்கிக்கொள்ள, மூத்தவன் ராஜேஷை `கரையை நோக்கி ஓடு' என்றேன். அவசரத்தில் பாறையில் தடுமாறி விழுந்த அவனை என் கண் முன்னே நூற்றுக்கணக்கானோர் ஏறி மிதித்துச் சென்றனர். அலை ஓய்ந்து நான் அவனைத் தேடிய போது ஒரு பாறையில் குப்புற விழுந்து மயங்கிக் கிடந்தான்...

பிள்ளை கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்தில் இரண்டு நாள்தான் இருந்திருப்பேன். அதற்குப் பின் அவன் இதயம் நெஞ்சில் துருத்திக்கொண்டு காதில் கேட்கும் சத்தத்துடன் படபடத்தபொழுது பயந்து போனேன்....


பல டாக்டர்கள் பார்த்த பிறகு இதயத்தில் இரத்தம் தவறான பாதையில் வெளியேறுகிறது. தடுப்பதற்கு ஆபரேஷன் செய்ய இரண்டு லட்சம் ஆகும் என்றார்கள். அவ்வளவு பணத்திற்கு வழியில்லாமல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய டெபுடி கலெக்டர் பிரபாகரனைச் சந்தித்து உதவி கேட்டேன். அவரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஆபரேஷன் செய்ய உதவி செய்தார். அதற்குப்பின் தினமும் நூறு இருநூறு செலவு செய்து ஆட்டோவில் என் மகனையும் அழைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் மாதக் கணக்கில் அலைந்தேன். சிகிச்சைக்கு முழுப்பணமும் தருவதாக அவர்கள் சொன்னதை முழுமையாக நம்பினேன். ஆனால், பிரபாகரன் மாற்றலாகிச் செல்ல அந்தத் தொண்டு நிறுவனமும் எங்களைக் கைவிட்டுவிட்டது.


`இந்த ஏழை அப்பாவால் என்ன செய்யமுடியும்?' என்ற சந்தேகம் மகனுக்கும் வந்துவிட்டதோ என்னவோ? எப்பொழுதும் அமைதியாக தனிமையில் இருக்கிறான். எப்பொழுதாவது ஆர்வத்தில் பிள்ளைகளுடன் ஓடி விளையாடினால் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறான். அதன்பின் அவன் கண்திறந்து பார்க்கும் வரை எங்களுக்கு உயிர் போய் வருகிறது'' என்று அப்பா கண்ணீர்விட, பெற்றவர்களின் துயரத்தைப் பார்த்து, அழுவதா அமைதியாக இருப்பதா என்று தெரியாமல், நம்மையே ஏக்கத்துடன் பார்த்தனர் ராஜேஷின் தங்கைகள். இருவரின் பார்வையும், நம்மிடம் ஏதோ உதவியை எதிர்பார்க்கின்றன என்பதை மட்டும் உணர முடிந்தது...


`ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான்' என்று நாமும் மனதிற்குள் நினைத்ததைச் சொல்ல வார்த்தை வராமல் விடை பெற்றோம்..


மண்ணில் பிறந்த அனைவரும் நல்லவர்களே , உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் யாருக்கு, யார் மூலமாக என்பதே அனைவருக்கும் மிகப்பெரிய சந்தேகம்.


Monday, June 22, 2009

ராஜாதி ராஜா


பிட்டு படம் தமிழில் அவ்வளவே.

மற்றபடி என் விமர்சனம் பெற தகுதி இல்லாத திரைப்படம்.


எனது மதிப்பீடு : 0/10

Tuesday, June 16, 2009

உழவுக்கும் உண்டு வரலாறு


இயற்கை விஞ்ஞானி,வேளாண் வித்தகர் டாக்டர் கோ.நம்மாழ்வார் கைவண்ணத்தில், விகடன் பதிபகத்திலிருந்து வெளி வந்த புத்தகம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் போன்றிய வற்றின் தாக்குதலின் விளைவுகளை பொட்டில் அறைந்தது போல் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.ஜப்பான் விஞ்ஞானி மாசானு எழுதிய 'ஒற்றை வைக்கோல் புரட்சி' உள்ளிட்ட பல நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.பசுமை புரட்சி சாமிநாதனை புரட்டி எடுத்திருக்கிறார்.விவசாயிகள் மட்டுமல்லாமல் இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

எனது மதிப்பீடு : நேரம் கிடைத்தால் படிக்கலாம்.

Monday, June 15, 2009

குழந்தையும் தெய்வமும் ஒன்று








"பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. பருவம் தவறிப் பயிர் செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பாராத விளைவுகளே ஏற்படும். குழந்தைத் தொழிலாளர் பெருகுவது தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் அவமானம்; மன்னிக்க முடியாத குற்றம்.

புகழ்பெற்ற "ராய்ட்டர்' என்ற செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வில் குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களாக மூன்று நாடுகளைக் குறிப்பிட்டிருந்தது. அவை ஈராக், சோமாலியா மற்றும் இந்தியா, (பயங்கரவாத மற்றும் ஏழ்மையான நாடு,அடுத்து நம் நாடு ) இந்தியாவுக்கு இந்த இழிநிலை வருவதற்கு என்ன காரணம்? குழந்தைகளிடம் நமக்குள்ள அக்கறையற்ற போக்குதான்.

இதைவிடத் திடுக்கிடச் செய்யும் மற்றொரு தகவல் ஆப்பிரிக்கக் குழந்தைகளைவிட இந்தியக் குழந்தைகளிடம் சத்துணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்னும் அறிவிப்பாகும். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அங்குள்ள குழந்தைகளில் 25 விழுக்காட்டினர் சத்துணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் சுத்தமான குடிநீர் கிடைக்காமையால் ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகின்றனர் என்பது மிகப்பெரிய அவலம்.

இந்தியாவில் 10 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. 3 கோடி பேருக்கு இருக்க இடமே இல்லை. ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் குடிசை இடிக்கப்பட்டு தெருவில் நின்ற காட்சியை நினைத்துப் பார்த்தால் இதன் உண்மை தெரியும்.
இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத்திட்டம் இன்னும் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர்.
இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத்திட்டம் இன்னும் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர்.


"குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது பெரியோர் பொன்மொழி. தெய்வத்தைக் கொண்டாடுகிறோம். குழந்தைகளைக் கொண்டாட வேண்டாமா? இதே நாட்டில் தான் வடக்கே ஒரு பொற்கோவில் ,தெற்கே ஒரு பொற்கோவில் என்றும் , ஒரே நாளில் கோடிக்கணக்காக குவிக்கும் ஆலையங்கள் என்றும் தெய்வத்தை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு தெரியாதா "குழந்தையும் தெய்வமும் ஒன்று " என்று.

என்ன செய்ய இரவு வீடு திரும்பும் பொழுது சிக்னலில் கையேந்தும் சிறுவனை காணும் பொழுதும், மதியம் உணவு உண்ணும் உணவகத்தில் மேஜை துடைக்கும் சிறுவனை காணும் பொழுதும், காலை டீ கடையில் கிளாஸ் கழுவும் சிறுவனை காணும் பொழுதும் மனம் வலிக்க தான் செய்யும்.


அனைத்தும் அறிந்தும் ஒண்ணுமே செய்ய இயலாதவனாய் ஒரு சாமான்யன்.


Thursday, June 11, 2009

மறந்து போன மனித நேயம்


திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் வசிக்கும் 68 வயது முதியவர் தனது நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்டுத் தர வேண்டும் என மனு கொடுக்க புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம் வந்தபோது அலுவலக வாசலில் வெயிலின் கொடுமையால் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அப்போது ஆட்சியரை சந்தித்து விட்டு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், பொன்னேரி எம்எல்ஏ பலராமன், அதிமுக எம்பி வேணுகோபால் உள்ளிட்டோர் தத்தம் படைகள் சூழ வெளியேறினர். ஆனால் இந்த முதியவரை கண்டுகொள்ளத்தான் மனம் இல்லை போலும்.!

5 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வீடு வீடாக வந்து காலில் விழுந்து ஒட்டு கேட்கும் இவர்களுக்கு என்ன தெரியும் மனித நேயம் பற்றி... (அது மனிதர்களுக்கு மட்டும் தான் தெரியும்) . தனக்கு ஒட்டு போட்டவர் இப்படி கிடக்கிறாரே என்ற ஒரு குற்ற உணர்வே இல்லாமல் திரிகின்றனரே... இவர்களை கண்டு தான்
"நெஞ்சு பொறுக்குதில்லையே..."

Wednesday, June 10, 2009

நில்லுங்கள் ராஜாவே...


சுஜாதாவின் 'நில்லுங்கள் ராஜாவே' நேற்று இரவு படிக்க வாய்ப்பு கிடைத்தது. மற்றுமொரு கணேஷ்-வசந்த் கதை. வழக்கம் போல ஆங்கில வார்த்தைகள் பல சொருகி மனித மனம்,hipnotism என போகிற scientific நாவல். பாதியிலேயே ஒருவாறு கதையின் ஓட்டம் புரிந்தாலும் ,தொடர்ந்து படிக்க ஆவலை தூண்டும் ஒரு thriller.சுஜாதாவின் எழுத்து அப்பட்டமாக தெரிந்தாலும், ஏதோ ஒன்று விடுபட்டதை போலவே ஒரு உணர்வு.

எனது மதிப்பீடு : நேரம் கிடைத்தால் படிக்கலாம்

இந்த பெண்களே இப்படி தான்...

சமீபத்தில் குங்குமம் வார இதழில் ஒரு கதை படித்தேன். படிக்க படிக்க சுவராசியமாக இருந்தது. அதை அப்படியே தருகிறேன்.

ஓவர் ஸ்பீடாக கார் ஓட்டி வந்த பெண்ணை மடக்கிய போலீஸ்காரர், உங்க லைசென்ஸை எடுங்க-என்றhர்.

என்கிட்ட லைசென்ஸ் இல்லை!

அப்ப லைசென்ஸ் இல்லாம தான் கார் ஓட்டினீங்களா?

ஆமாம்!

சரி காரோட ஆர்.சி.புக்?

இல்லை...

ஏன்?

இந்த கார் என்னோடது இல்லை. இப்போது தான் திருடினேன்!

என்னது திருட்டா?

ஆமாம். திருடும் போது கார் ஓனர் சத்தம் போட்டான். அவனை கொன்னுட்டேன். பாடியை டிக்கியில தான் வச்சியிருக்கேன்.

மிரண்ட போலீஸ்காரர், இந்த பெண்ணை தனியாக சமாளிக்க முடியாது என்று உணர்ந்து, விஷயத்தை விளக்கி உயர் அதிகாரிகளை போனில் உதவிக்கு அழைத்தார்.

உயர் அதிகாரி வந்ததும் அந்த பெண்ணிடம் லைசென்ஸ் கேட்டார்.

அந்தப் பெண் தனது பர்சில் இருந்து எடுத்து கொடுத்தாள்.

ஆர்.சி.புக் கேட்டதும் அதைப்போல் எடுத்துக்கொடுததாள்.

குழப்பம் அடைந்த அந்த அதிகாரி அந்த பெண்ணிடம், 'நீங்க காரை திருடிட்டு கொலையும் பண்ணினதா எங்க போலீஸ் சொல்றhரே' என்றhர்.

எந்த பதட்டமும் இல்லாமல் காலியாக இருந்த டிக்கியை திறந்து காட்டிய அந்த பெண், 'நான் காரை ஸ்பீடா ஓட்டினதாகவும் அந்த முட்டாள் போலீஸ் சொல்லியிருப்பானே...'

அந்த போலீஸ்காரர் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்.


ரசிக்க மட்டுமே ... உள்குத்து எல்லாம் இல்லை...