Saturday, February 21, 2009

முத்தமிழ் காவலரே போதும் உங்கள் ஆட்சி...

கண்டதும் சுட உத்தரவு
இது பாகிஸ்தானிலோ, இலங்கையிலோ அல்ல ஜெனநாயக இந்திய திருநாட்டில், அதுவும் நம் தமிழகத்தில்.
சரி விடுங்கள் யாரை கண்டால் ?
நாடு காக்கும் காவல் துறையும் , சட்டம் காக்கும் சட்ட துறையும்

காவல் துறை அமைச்சர் :
முதல்வர் கருணாநிதி
சட்ட துறை அமைச்சர் :
திரு துரைமுருகன்

என்ன தான் நடக்கிறது தமிழகத்தில் ......?

சென்னைஅம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக் கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி சட்டக் கல்லூரி வளாகத்திலேயே மூண்ட மோதலில், கத்தியோடு பாய்ந்த ஒருமாணவரை இன்னொரு கோஷ்டி மாண வர்கள் சூழ்ந்துகொண்டு இரும்புத் தடிகள் மற்றும் கம்புகளால் அடித்துத் துவைத்தனர்। அந்த ரத்தக் களறியை அப்போது பக்கத்தில் இருந்தே கை கட்டி வேடிக்கை பார்த்தது போலீஸ்।
இந்தக் கொடூரம் நடந்து சரியாக 100-வது நாளில் அருகிலேயே உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் கலவரம்; கல்வீச்சு; தடியடி; தீவைப்பு! இம்முறை மோதல் மாணவர்களுக்கிடையே இல்லை; போலீசுக்கும் வக்கீல்களுக்கும் இடையில்தான்!
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஆட்சியாளர்களே இப்படி இருந்தால், மக்களின் பாதுகாப்பு கேள்விகுறி தான்.

உருப்படியாக என்ன தான் செய்திருக்கிறார் கலைஞர்?
வெளிப்படையாக சொன்னால் ஒரு எழவும் இல்லை

மின்வெட்டு (இன்று வரை இருக்கும் தலையாய பிரச்சனை),
சட்டம் ஒழுங்கு (சட்டகல்லூரி கலவரம், திருமங்கலம் இடைதேர்தல் கலவரம், இன்று உயர் நீதி மன்ற கலவரம்) ,இலவசம், ஒக்கேனகல் திட்டத்தில் தோல்வி, பெங்களூரில் வள்ளுவன் சிலை திறப்பு, இலங்கை விவகாரம் என நிர்வாகத்தில் ஏக பட்ட குளறுபடிகள்।
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி,கிலோ அரிசி 1 ரூபாய்,இலவச நிலம், வெள்ள நிவாரணம் என முட்டாள் தனமான முடிவுகள் பல।(பின்ன அரசு மதுகடைகளால் வரும் வருமானத்தை எப்படி செலவு செய்வதாம்। அரசு மதுகடைகள் உண்டு ஆனால் கள் இறக்க அனுமதி இல்லை। அடபோங்கப்பா...)

1969 முதல் தி.மு.கவும், அண்ணா.தி.மு.கவும் மாறி மாறி சுமார் 39 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது.
ஆனால் இன்றுவரை காவேரி தமிழ்நாட்டிற்கு வந்தபாடில்லை,
இலங்கை தமிழன் இன்று வரை செத்துக்கொண்டு தான் இருக்கிறான்.

ஆகவே தயவு செய்து விட்டு விடுங்கள் தமிழகத்தை.
80 வயது கலைஞர் ஆகட்டும், 60 வயது அம்மா வாகட்டும்,

கடைசி காலத்தில் ஏதாவது நல்லது செய்ய தோன்றினால்,
அரசியல் விட்டு நீங்கள் விலகுவது தான் மிக பெரிய நல்ல காரியமாக அமையும்.
அன்று தான் தமிழகத்துக்கு உண்மையான சித்திரை திருநாள், தைத்திருநாள், தீபாவளி எல்லாம்.




No comments: