பெயர் காரணம் :
நெஞ்சு பொறுக்குதில்லையே…
ஏன் எதனால்…
ஊழல் மிகு உதவாக்கரை அரசாங்கத்தினை கண்டு
துரு பிடித்திருக்கும் அரசுஇயந்திரத்தை கண்டு
மனசாட்சியே இல்லாத அரசியல்வாதிகளை கண்டு
குற்ற உணர்வே இல்லாத அதிகாரிகளை கண்டு
அலட்சியமாக இருக்கும் இளைஞர்களை கண்டு
எலி உண்ணும் விவசாயியை கண்டு
பணம் உண்ணும் முதலைகளை கண்டு
பொறுப்பில்லாத வாக்காளர்களை கண்டு
லட்சியமற்ற வேட்பாளர்களை கண்டு
கொள்கை இல்லா கட்சிகளை கண்டு
பாவப்பட்ட மக்களை கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே…
இத்தனை கொவமிருந்தும் ஒன்றும் செய்ய இயலாத
என் நிலையினை எண்ணி பார்த்து
நெஞ்சு பொறுக்குதில்லையே…
No comments:
Post a Comment