தெரிஞ்சு தான் வச்சுக்குங்களேன்....
(எனது கண்டனம் சிவப்பு நிறத்தில்)
* பட்ஜெட் மொத்த வருவாய்
58 ஆயிரம் 270 கோடி ரூபாய்.
* நிதிப்பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில்
3 சதவீதம்* சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்க ரூ. 1,448 கோடி மதிப்பீட்டிலான பெருந்திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
* காவல் துறைக்கு ரூ.2855 கோடி ஒதுக்கீடு.
* இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு
ரூ.5 கோடி ஒதுக்கீடு
* புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட
ரூ. 200 கோடி ஒதுக்கீடு
* வழக்குகளை விரைவாக முடிக்க 56 மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கப்படும்.
* சுய நிதி குழுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரிப்பு.
* தேங்காய்பட்டினத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
* ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் மலிவு விலை மளிகைப் பொருட்கள் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு
ரூ. 200 கோடி ஒதுக்கீடு
*
இலவச கலர் டி.வி.க்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடுவேளாண்மை
* கூட்டுறவுக் கடனை உரிய காலத்தில் செலுத்தினால் இனி வட்டி கிடையாது.
* விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் விநியோகிக்கப்படும்.
* பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
* வெள்ள பகுதிகளில் நிலவரி ரத்து
* 5500 கால்நடை முகாம்கள் அமைக்கப்படும்
* சுய உதவி குழுக்களுக்கு 5000 உயர்கலப்பின பசுமாடு.
* மதுரையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புத் திட்டம் அமல்.
* கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1200 வழங்க முடிவு
* மதுரையில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புத் திட்டம் அமல்.
* பயிர்க்கடனுக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு
* விவசாய தொழிலாளர் குடும்ப உதவிக்கு ரூ. 152 கோடி ஒதுக்கீடு
* நீர் வள திட்டத்துக்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு
* நெல்லை நதிகள் இணைப்புக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
* விவசாய வளர்ச்சிக்கு ரூ.5,236 கோடி ஒதுக்கீடு
* சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு
* ஊரக குடிநீர் திட்டத்துக்கு ரூ. 700 கோடி ஒதுக்கீடு
கிராம வளர்ச்சி
* தமிழகத்தில் மேலும் 20 கிராமங்களில் சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
* ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 1750 கோடி
* கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கிராம வளர்ச்சிக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ. 509 கோடி ஒதுக்கீடு.
கல்வி
* அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து.
* அரசு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து.
* பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு
ரூ. 112 கோடி ஒதுக்கீடு.
* மேனிலை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.200 கோடி.
* 2,500 நடுநிலைப் பள்ளிகளில் கணினி வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* பின் தங்கிய மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.
* திருவண்ணாமலை, திண்டுக்கல், கன்னியா குமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில்
பொறியியல் கல்லூரிகள்.
* ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ. 58 கோடியில் இலவச சீருடை
6வது ஊதியக்குழு பரிந்துரை விரைவில் அமல்
* மத்திய 6வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்கள் விரைவில் அமல் செய்யப்படும்.
* ஓய்வூதியதாரர்களின் மனைவி அல்லது கணவரின் மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
* அரசு அலுவலர் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ. 66 கோடி ஒதுக்கீடு
மருத்துவம்:
* சென்ட்ரலில் இருந்து மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ரூ.70 கோடி செலவில் அரசு பொது மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும்.
* சென்ட்ரல் மத்திய சிறைச்சாலை இருந்த எஞ்சிய இடத்தில் மிகப் பெரிய இரத்த வங்கி அமைக்கப்படும்.
* மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்படும்.
* மருத்துவ காப்பீட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* அரசு மருத்துவமனையில் மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.54 கோடி ஒதுக்கீடு.
* தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை அரசு மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்திற்கு உயர்த்தப்படும்.
* சர்க்கரை நோய்க்கான டயாலிசிஸ் கருவி அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும்.
* மருந்துப் பொருட்கள் வாங்க ரூ.224 கோடி ஒதுக்கீடு.
சமூக நலன்
* அரவாணிகள் நலத் திட்டத்திற்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு.
* ஊனமுற்றோருக்கு மோட்டார் தையல் இயந்திரம் வழங்கப்படும்.
* சென்னையில் முதியோர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* சிறு வணிகர்களுக்கு தனி வாரியம்.
* அமைப்பு சாரா தொழிலாளர் நலன் காக்க ரூ.30 கோடி
* மீனவர் நலத் திட்டத்திற்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு
* ஆதி திராவிடர் நலனுக்கு ரூ.2,615 கோடி ஒதுக்கீடு
* அகதிகள் முகாம் மேம்பாட்டுக்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு
* குடிசை, கோயில் இலவச மின்சாரத்துக்கு ரூ. 1,251 கோடி ஒதுக்கீடு
* ஏழைகளுக்கு வீடு வழங்க ரூ. 390 கோடி ஒதுக்கீடு
* நகர்புற குடியிருப்புக்கு ரூ. 441 கோடி ஒதுக்கீடு
* திருமண உதவி திட்டத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு
* மகப்பேறு உதவி திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு
* எரிவாயு அடுப்புகள் வழங்க
ரூ. 140 கோடி ஒதுக்கீடு
* முதியோர் உதவித்தொகைக்கு ரூ. 911 கோடி ஒதுக்கீடு
* ஊனமுற்றோர் உதவி திட்டத்துக்கு ரூ. 75 கோடி ஒதுக்கீடு
* நெசவாளர் நலனுக்கு ரூ. 256 கோடி ஒதுக்கீடு
* ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுக்கு ரூ. 61 கோடி ஒதுக்கீடு
* சத்துணவுக்கு ரூ. 830 கோடி ஒதுக்கீடு
* குழந்தைகள், கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துக்கு ரூ. 176 கோடி ஒதுக்கீடு
வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள்
* அஞ்சரைபெட்டி மளிகைப் பொருட்களில் விடுபட்ட மிளகு, சீரகம் ஆகியவற்றுக்கும் வரிவிலக்கு.
* பருப்பு, பயறு, பட்டாணி ஆகிய பொருட் களுக்கு கொள்முதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* கையினால் தயாரிக்கப்படும் இரும்புப் பெட்டிக்கு தற்போதுள்ள 12.5 சதவிகித வரி ரத்து.
* கையினால் தயாரிக்கப்படும் தகர டின்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
* தற்போது நெய்க்கு விதிக்கப்படும் 12.5 சதவிகித வரி, 4 சதவிகிதமாக குறைக்கப்படும்.
* ஊறுகாய், இரும்பு பெட்டகம், உலர்ந்த திராட்சை, சலவை தண்ணீர், குண்டூசி, ஊக்கு, ஜெம் கிளிப்கள் உள்ளிட்ட கிளிப்கள், ரப்பர்பேண்ட், ஸ்டாப்லர்பின் ஆகியவற்றுக்கும் 12.5 சதவிகித வரி, 4 சதவிகிதமாக குறைக்கப்படும்.
*
ஐபாடு, எம்.பி.-3, எம்பி-4 ஆகியவற்றுக்கும்
வரி குறைக்கப்படுகிறது.
* ஜவ்வரிசிக்கு விதிக்கப்படும் 2 சதவிகித வரி, ஒரு சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
* செங்கல், சூளை அடுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றுக்கு வரி விதிக்கப்படும்.
* இந்த வரிகுறைப்பு மற்றும் வரிவிலக்குகள் 1.4.2009-லிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
* இந்த
வரிச்சலுகைகளால் அரசுக்கு
ரூ.100 கோடி வரி இழப்பு ஏற்படும்.