அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமலாகிறது : முதல்வர் அறிவிப்பு
சமச்சீர் கல்வி திட்டம் குறித்து சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும், தனியார் அமைப்புகளும் பரபரப்பாக பேசி வருகின்றன. ஸ்டேட் போர்டு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., என்று பத்தாம் வகுப்பு வரை நான்கு விதமாக உள்ள கல்வி முறையை ஒரே முறையாக, ஒரே பாடத் திட்டமாக, ஒரே தரத்துடன் கொண்டு வருவது தான் சமச்சீர் கல்வி திட்டம்.
பணமில்லாத ஏழைகளுக்கு மாநிலக் கல்வியும், வாய்ப்பும் வசதியும் உள்ள குழந்தைகளுக்கு மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட மூன்று கல்வித் திட்டங்களும் என்பதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. இப்படியொரு நிலைமை ஏற்படக் காரணமே, அடிப்படைக் கல்வியில் தனியார் துறை நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான். மாநில அரசின் மானியம் பெறும் அனைத்துப் பள்ளிகளும், அரசால் நடத்தப்படும் பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் எப்பவோ வரவேண்டிய அறிவிப்பு, இப்பவாவது வந்திருக்கிறதே என்ற நிம்மதியுடன் வரவேற்கிறேன் முதல்வரின் செயலை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமையான திட்டம் , இனி வரும் நம் அரசு பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரான அறிவையும் முக்கியமாக பல மொழி கற்றவர்களாக பள்ளியிலிருந்து வெளிவருவதே மகிழ்ச்சியான செய்தி .
Post a Comment