மக்களவையும் மாநிலங்கள் அவையும் அமளி துமளியால் ஒத்திவைக்கப்படுவது நமக்கெல்லாம் புதிதல்ல. ''மக்கள் வரிப் பணத்தை இப்படி கரியாக்குகிறார்களே..?'' என்று நாடே வயிறெரிந்து பார்ப்பதும் வழக்கமாகி விட்டது. ஆனால், அண்மையில் மக்களவை தொடங்கிய அரை மணி நேரத்துக்குள், அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்ததற்குக் காரணமே வேறு!
பல்வேறு கேள்விகளைக் கேட்க வாய்ப்புக் கேட்டிருந்த 34 எம்.பி-க்களில் 2 பேர் மட்டுமே அந்த கேள்வி நேரத்தின் போது அவைக்கு வந்திருந்தனர்! சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்தும், எம்.பி-க்கள் இல்லாததால் ஏறத்தாழ 20 கேள்விகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. சபாநாயகர் மீராகுமார், “நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை!” என்றார் வேதனையோடு.
மிஸ் ஆன காங்கிரஸ் எம்.பி-க்களின் பெயர்ப் பட்டியலை வாங்கியிருக்கும் சோனியா காந்தி, அவர்கள் மீது நடவடிக்கைக்கான யோசனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
நாடாளுமன்றத்தை ஒரு மணி நேரம் நடத்த ரூ.14 லட்சம் வரை செலவாகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். பண விரயம் ஒருபுறம் இருக்கட்டும், தங்களது பிரச்னையை எடுத்துரைத்துத் தீர்ப்பதற்கு வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வோர் உறுப்பினரையும் நாடாளுமன்றத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், கேள்வி நேரத்தில்கூட அவர்கள் ஆப்சென்ட் என்றால்..?
இப்படியொரு கேவலமான நிகழ்வு நிகழ்ந்திருப்பதே எத்தனை இந்தியனுக்கு தெரியும்.. ? ஆனால் வேட்டைக்காரன் வெளியீடு என்றைய தினம், சச்சின் டெஸ்டில் எத்தனை ரன்கள் என கேட்டால் யோசிக்காமல் வந்து விழும் பதில்கள். ஆக தப்பு எங்கிருக்கிறது..?
Tuesday, December 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
roamba sariiiiiiiiiiiiiii.
தவறு செய்தி ஊடகம் மீதும் தான். நயன்தாரா பிரபுதேவா விவகாரத்தை அலசியதில் கால்வாசி கூட இந்த விவகாரத்தை தெளிவுபடுத்த வில்லை. வியாபார நோக்குடன் மட்டுமே செயல்படாமல் கொஞ்சாமாவது மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். செய்தி தொலைக்காட்சி என்ற பெயரில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை தனது சொந்த படத்தின் trailer, தனது சொந்த தினசரி, வார பத்திரிகைக்கு விளம்பரம் தரவே அவர்களுக்குநேரம் போத வில்லை.
Post a Comment