கொஞ்சமாவது யோசிங்கப்பு...
தவளைச் சத்தம் கேட்டதும் போச்சு
கவலை நித்தம் படிந்தே போச்சு
கலப்பை பிடிக்கும் கைகள் குறைந்தே போச்சு
கணிணி மோகமே எங்கேயும் ஆச்சு
காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு
மும்மாரி பொழிந்ததெல்லாம்
மலையேறிப் போச்சு
எல்லாமே இப்போ விலையேறிப் போச்சு
சாதம் பிசைந்து
சாப்பிடும் நாளும் அழிந்திடுமோ
பாவம் மனித இனங்கள்
மாத்திரைகளாலே வாழ்ந்திடுமோ
விதைப்பவன் வாழ்க்கையெல்லாம்
விரைவில் கதையாகிப் போய்விடுமோ
காய்கனி உண்பதெல்லாம் - நாளை
கனவாகிப் போய்விடுமோ
மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்
பட்டுப்போகிற பூமியை
பசுமையாக்க முயற்சித்திடுவோம்!
மழை காக்க மரம் வளர்ப்போம்
உயிர் காக்க உழவு காப்போம் !
--உழவன்---
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
kandipa vivasayam aliyathu.aliyarathukana vaipum illai.ana mendum palaya veriyam adaivatharku konja naal agum.mendum varum pothu intha ullagin unavu thevaikalai sariya purinthukondu varum.ithu director sasikumar etho oru patiyil sonnathu.enakum athu than sarnu paduthu.
டேய் கண்ணா, விவசாயம் செய்யறதுக்கு ஆள் வேண்டாமா ? எங்கள் ஊரில் அடுத்த தலைமுறை என்பதே இல்லாமல் போய்விட்டது... இப்போது விவசாயம் செய்பவர்கள் எல்லாம், வயதானவர்கள் தான்.
படித்தவன் எவன் கிராமத்தில் இருந்து விவசாயம் செய்யறான் ? விவசாயத்தில் வியர்வை சிந்தி உழைத்து, பின் இயற்கை,அரசாங்கம் என அத்தனையும் ஒத்துழைத்தால் கிடைக்கும் வருட வருமானம், நகரத்தில் ஏ.சி. அறையில் அமர்ந்துக்கொண்டு கிடைக்கப்பெறும் மாத வருமானம். ஆக தப்பு யார் மேல..? உடல் உழைப்பிற்கு தகுந்த ஊதியமும், மரியாதையும் தரும் வரை,இந்த நாடும்,சமுதாயமும் தவறான் பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
Post a Comment