இன்னும் ஒரு பள்ளி வேன்விபத்து... வேதாரன்னியத்தில்...
பள்ளி வேனை ஒட்டி வந்த டிரைவருக்கு லைசன்ஸ் கிடையாதாம்! செல்போன் பேசிக்கொண்டு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது..விபத்து நடந்தவுடன் டிரைவர் ஓடிவிட்டார்....
கிளீனர் தான் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார்... வேனுக்குள் இருந்த ஆசிரியை சுகந்தி வேனுக்குள் இருந்து வெளிவர முடியாத சூழலிலும் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை வெளியில் அனுப்பி கிளீனர் உதவியுடன் காப்பாற்றி இருக்கிறார்...
பதினோரு குழந்தைகளை தான் அவரால் காப்பாற்ற முடிந்தது....அவருக்கு நீச்சல் தெரியாததால், அவரும் அந்த குலத்திலேயே மூழ்கி இறந்து விட்டார்.... தனது உயிரை பொருட்படுத்தாமல், தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை உயிரைக்கொடுத்து காப்பாற்றிய அந்த இளம் பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அது தான் வீரம்... அது தான் பாராட்டப்படவேண்டிய மனித பண்பு...
தஞ்சை பெண்களின் வீரம் பற்றி குந்தவை நாச்சியார் சொல்வார்... இங்கே இயல்பாகவே துணிச்சல் எங்களுக்கு வருகிறது என்று! உண்மை தான் போல!
சுகந்தியை பற்றி படிக்க படிக்க நெஞ்சு விம்முகிறது!
அவருக்கு 21 வயது தான் ஆகிறது.. பட்டதாரி... திருமணம் ஆகவில்லை! எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த பள்ளிக்கு அந்த வேனிலேயே சென்று வருகிறார்.... குறைந்த சம்பளம் தான்!
அவருடன் குளத்தில் இறந்த குழந்தைகள் பெரும்பாலும் அவரது கிராமத்தை சார்ந்தவர்கள் தான்..... பதினோராவது குழந்தையை காப்பாற்றும்போது அந்த குழந்தை அவரது கை நழுவி குளத்துக்குள் ஆழத்தில் சென்றுவிட்டதாம்.... இவர் நீச்சல் தெரியாத நிலையிலும் உள்ளே குனிந்து அந்த குழந்தையை வெளியே எடுத்து இருக்கிறார்..... அதற்குள் இவர் மூச்சு திணறி.... எல்லாம் முடிந்து விட்டது.... ஆனால் அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார்!
எல்லோருக்கும் செல்ல பெண்ணாக அந்த கிராமத்தில் வளம் வந்த சுகந்தி இப்போது இல்லை! எனினும் தன்னால் ஆன செயலை எல்லாம் இறுதி வரை செய்து விட்டு தான் மறைந்து இருக்கிறார்!
இதை பற்றி ஏடுகளில் வந்த செய்திகள் சில...
’கட்டளைவெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை வசந்தி ,பள்ளியில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.தினமும் அந்த வேனிலேயே செல்லும் அவர் அந்தக் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராம்.வேன் குளத்தில் விழுந்ததுமே நீந்தி வெளியே வர முயன்றிருக்கிறார்.குழந்தைகள் தண்ணீருக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பதறி..அடுத்த கணமே உள்ளே மூழ்கியவர் , நான்கு குழந்தைகள் வரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றி விட்டார்.ஐந்தாவது தடவை உள்ளே போனவர் ...இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் மூச்சு முட்டி உயிரை விட்டுவிட்டார்.உடலைக் கரையேற்றும்போதும் அந்த இரு குழந்தைகளையும் கையில் இறுகப் பிடித்தவாறே சுகந்தி டீச்சர் இருந்த காட்சியைப் பார்த்துக் கிராமமே விம்மியது’’- ஜு.வி.09.12.09
’மகராசி!சுகந்தி ஆசிரியை மட்டும் குப்புறக் கவிழ்ந்த வேனுக்குள்ள இல்லன்னா இன்னைக்கு எங்க எல்லாப் புள்ளைகளையும் இழந்துட்டு நாங்க அனாதையாயிருப்போம்.பாவம் அந்தப் பொண்ணு உசிரக் கொடுத்து எங்க புள்ளகளக் காப்பாத்தியிருக்கு’என,குழந்தைகள் பலரையும் உயிரோடு மீட்ட ஆசிரியை சுகந்தியைப் பற்றிப் பெற்றோர் பலரும் கண்ணீர் ததும்பப் பேசுகின்றனர்.’’-குமுதம்,16.12.09
மற்றவர்களை உயிரோடு எரிப்பவர்களை தீரர்கள் என்றும் அஞ்சாநெஞ்சன் என்றும் பேசும் தமிழகம், இந்த சின்ன பெண்ணின் வீரத்தை, தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிக்கவா போகிறது????
Thursday, December 17, 2009
கேட்குமா நீதியின் குரல்
நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்புக் கூறாவிட்டால் நீதித்துறை நடைமுறையே நாளடைவில் நொறுங்கிவிடும், மக்களுக்கு நீதித்துறை மீதே நம்பிக்கை போய்விடும்,கிளர்ந்து எழுவார்கள் - கலகம் வெடிக்கும் என்று எச்சரித்திருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போதாவது இதுபற்றிய கவலை நீதித்துறைக்கு எழுந்திருக்கிறதே, மகிழ்ச்சி.
சமரசப் பேச்சுவார்த்தை மூலம் வழக்குகளைத் தீர்க்கும் மாற்று வழி குறித்த கருத்தரங்கம் பெங்களூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசியபோது கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.வழக்குகள் தேங்கிவருவது குறித்து கடந்த 20 வருஷங்களாகவே யார் யாரோ எச்சரித்து வருகின்றனர். மத்திய சட்டக் கமிஷன், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம், மத்திய சட்டம், நீதித்துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு போன்றவை இந்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. ஆனால் உரிய பரிகார நடவடிக்கைகள்தான் போதுமான அளவில் எடுக்கப்படாமல் இருக்கின்றன.
பெங்களூர் கருத்தரங்கில் பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நாட்டில் போதிய எண்ணிக்கையில் சார்பு நீதிமன்றங்கள் இல்லதாததே வழக்குகளின் தேக்கத்துக்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்தியிருக்கிறார். வழக்குகள் தேங்குவதற்கான பல்வேறு காரணங்களில் அதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.இப்போதுள்ள 16,000 சார்பு நீதிமன்றங்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பதவிகள் காலியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். காலியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதுடன் சார்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 35,000 அளவுக்கு உயர்த்துவதும் அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அடுத்தப டியாக, இந்தியாவில் வழக்காடுவதற்கான செலவு மிகவும் குறைவு என்பதாலும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். நீதிமன்றங்கள் விதிக்கும் கட்டணங்களும் படிவங்களின் விலையும் வேண்டுமானால் அரசு நிர்ணயிப்பதால் குறைவாக இருக்கலாம், வழக்கறிஞர்களுக்கான கட்டணம் அப்படியா என்பதை அத்துறையில் உள்ளவர்களின் மனசாட்சியே பதில் கூறட்டும் என்று விட்டுவிடுவோம்.நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதமும், செலவும், மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது. எனவே கட்டப்பஞ்சாயத்து என்று அழைக்கப்படும் மாற்று வழிமுறையை நாடுகின்றனர்.
நீதித் துறையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலையிட்டு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னால் நம் நாட்டில் கிராமப் பஞ்சாயத்துகளே நியாயஸ்தலங்களாகவும் திகழ்ந்தன. அப்போது அவற்றின் குறைகளாகப் பட்டியலிடப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானது, அவை நடுநிலையானவை அல்ல என்பதாகும்.பஞ் சாயத்தில் இடம் பெற்றவர்கள், கிடைக்கும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், போதிய சட்ட அறிவு இல்லாமல்,தங்களுடைய செல்வாக்குக்கு பங்கம் வராத வகையில் தீர்ப்பு வழங்கினார்கள் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டின் மையக் கருத்தாகும்.
ஆனால் வழக்குத் தொடுக்கவும், விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் அதிகப் பொருள், நேரச் செலவு இல்லாமல் அந்தப் பஞ்சாயத்துகள் நடந்து முடிந்தன.சட் டம் படித்த வழக்கறிஞர்கள் வாதி, பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் நீதித்துறையை நடுநிலையானது, எவர் பக்கமும் சாயாதது என்று பாராட்டினாலும் அது வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் முக்கியமான பணியை இழுத்துக் கொண்டே போனால் அப்படிப்பட்ட நீதித்துறை யாருக்கு வேண்டும் என்ற கேள்வியே பெரிதாகிறது.
சட்டப்படி வழங்கப்படும் தீர்ப்புகள் தர்மத்துக்கு எதிரானவையாக இருக்கும்போது, மக்கள் ஆட்சி அமைப்பின்மீதே நம்பிக்கை இழப்பதும், தீவிரவாதிகளாக மாறுவதும் தவிர்க்க இயலாதவை.அதிக நீதிமன்றங்கள், அதிக நீதிபதிகள், அதிக வேலை நாள்கள் போன்றவை இந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும்.
அதைவிட முக்கியம் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை நிர்வாகிகள் ஆகியோரின் மனங்களில் ஏற்பட வேண்டிய முக்கியமான மாற்றங்கள்.இந்தியா வறுமையில் உழலும் கோடிக்கணக்கான ஏழைகளைக் கொண்ட நாடு. இங்கு நீதி நிர்வாகத்துக்கு அவர்களுடைய வரிப்பணம்தான் செலவிடப்படுகிறது. நேரடியாக வழக்குச் செலவுகள் குறைவு போலத் தோன்றினாலும் அந்த மானியமே வரிப்பணத்திலிருந்துதான் ஈடுகட்டப்படுகிறது.
ஜூன் மாதப் புள்ளிவிவரப்படி, 1 கோடியே 94 லட்சம் கிரிமினல் வழக்குகளும், 76 லட்சம் சிவில் வழக்குகளும் தீர்ப்புக்குக் காத்திருக்கின்றன. இந்த வழக்குகளை அடுத்த ஓராண்டில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டுமானால், 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், 23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை.
நிர்வாகமும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் அரசின்மீது தொடுத்த வழக்குகளும் ஏராளம், ஏராளம். முறையாகவும், நியாயமாகவும், விரைவாகவும் அரசும் நிர்வாகமும் செயல்பட்டால், பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இந்தியச் சிறைச்சாலைகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் விசாரணைக் கைதிகளாகத் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அவர்களது நிலைமையைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? அதில் எத்தனை பேர் நிரபராதிகளோ, யாருக்குத் தெரியும்?வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. நீதி தாமதப்படுகிறது என்றெல்லாம் கருத்தரங்கம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தால் போதாது. செயல்பட வேண்டும். படுவார்களா...?
என்னை பொறுத்த வரையில் ஒரு நாட்டின் நீதி மன்றமும், சட்ட மன்றமும் சரியாக நியாயமாக நடைபெற்றால் அந்த நாடு வல்லரசாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

Wednesday, December 16, 2009
மக்கள் சக்தி கட்சி
உள்சுயாட்சி:
கட்சித் தலையீடு இல்லாத, சுய அதிகாரம், நிதி ஆதாரம் பெற்ற உள் சுய ஆட்சி.
கிராமப் பஞ்சாயத்தில் இருப்பது போல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமல் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
குறைவான, விரைவான அரசாங்கம்:
இலஞ்ச ஊழலற்ற, வெளிப்படையான, விரைவான அரசாங்கம்... அதே சமயம் குறைவான அரசாங்கம். மக்களின் தேவை, வசதி கருதி குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்கள் வருடம் முழுவது இயங்க வழிவகை செய்தல்.
பூரண மதுவிலக்கு:
அரசாங்கமே மதுவை ஊக்குவிப்பதால், இலட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது. அக்குடும்பத்திலுள்ள பெண்கள்,குழந்தைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல்.
தனி ஈழமே தீர்வு:
மொழி, மத, இன வேற்றுமை கொண்ட சிங்களப் பேரினவாதக் கொள்கைக்கு ஆட்பட்டு அடிப்படை மனித உரிமைகளைக்கூட பெறமுடியாமலும், நிதமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமலும் தவித்து வரும் ஈழ மக்களுக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு.
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு:
மக்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார சமத்துவ நீதியை வழங்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு.
சாதிகளற்ற சமுதாயம்..
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் சாதிகள் அற்ற சமுதாயம் அமையப் பாடுபடுதல்.
கூட்டுத் தலைமை :
மாநில அளவிலிருந்து கிராமக் கிளை வரை சுயநலம், பதவிப் போட்டிகளற்ற, ஜனநாயகத்தன்மை மிகுந்த கூட்டுத்தலைமை கொண்ட உள்கட்சி கட்டமைப்பு.
விரிவான கொள்கைக்கு
http://makkalsakthi.net/index.php?option=com_content&view=article&id=54&Itemid=81
மேலும் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி போட்டியிடுகிறது.
வேட்பாளர் : திரு எஸ். வாஷிங்டன்
சின்னம் : டி.வி.
மற்ற கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக, தங்களது அன்றாட கணக்கு வழக்குகளை அவர்கள் தங்களது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
http://makkalsakthi.net/index.php?option=com_content&view=article&id=51&Itemid=85
அவர்களது முயற்சிகள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
கட்சித் தலையீடு இல்லாத, சுய அதிகாரம், நிதி ஆதாரம் பெற்ற உள் சுய ஆட்சி.
கிராமப் பஞ்சாயத்தில் இருப்பது போல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமல் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
குறைவான, விரைவான அரசாங்கம்:
இலஞ்ச ஊழலற்ற, வெளிப்படையான, விரைவான அரசாங்கம்... அதே சமயம் குறைவான அரசாங்கம். மக்களின் தேவை, வசதி கருதி குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்கள் வருடம் முழுவது இயங்க வழிவகை செய்தல்.
பூரண மதுவிலக்கு:
அரசாங்கமே மதுவை ஊக்குவிப்பதால், இலட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது. அக்குடும்பத்திலுள்ள பெண்கள்,குழந்தைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல்.
தனி ஈழமே தீர்வு:
மொழி, மத, இன வேற்றுமை கொண்ட சிங்களப் பேரினவாதக் கொள்கைக்கு ஆட்பட்டு அடிப்படை மனித உரிமைகளைக்கூட பெறமுடியாமலும், நிதமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமலும் தவித்து வரும் ஈழ மக்களுக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு.
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு:
மக்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார சமத்துவ நீதியை வழங்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு.
சாதிகளற்ற சமுதாயம்..
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் சாதிகள் அற்ற சமுதாயம் அமையப் பாடுபடுதல்.
கூட்டுத் தலைமை :
மாநில அளவிலிருந்து கிராமக் கிளை வரை சுயநலம், பதவிப் போட்டிகளற்ற, ஜனநாயகத்தன்மை மிகுந்த கூட்டுத்தலைமை கொண்ட உள்கட்சி கட்டமைப்பு.
விரிவான கொள்கைக்கு
http://makkalsakthi.net/index.
மேலும் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி போட்டியிடுகிறது.
வேட்பாளர் : திரு எஸ். வாஷிங்டன்
சின்னம் : டி.வி.
மற்ற கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக, தங்களது அன்றாட கணக்கு வழக்குகளை அவர்கள் தங்களது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
http://makkalsakthi.net/index.php?option
அவர்களது முயற்சிகள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
மக்கள் சக்தி கட்சி - ஒரு சீரிய முயற்சி
மக்கள் சக்தி கட்சியானது, கடந்த 5 வருடங்களாக கிராமப்புற மேம்பாடு, தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு, தேசிய நதிநீர் இணைப்பை வலியுறுத்தி மக்கள் ஆதரவைத்திரட்டுதல், சுய முன்னேற்ற நூல்கள், பத்திரிகைகளை வெளியிட்டு இளைஞர்களை தன்னெழுச்சி கொள்ளச் செய்தல் போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளைச் செய்து வந்த இளைஞர்களால் 25.07.2009 அன்று ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சி. அதை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...
கட்சியின் முக்கியக் கொள்கைகள்
இலாபகரமான விவசாயம்:
விவசாயத்தைப் பாதிக்கும் நிலவள மேம்பாடு, நீர்வளம், கட்டுபடியாகும் விலை, விதை, போதிய சந்தை வசதி, கடன்வசதி, அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு, பதப்படுத்துதல், காப்பீடு, இயற்கையோடிணைந்த விவசாய முறை... போன்ற அனைத்துக் காரணிகளையும் ஒரு சேர உயர்த்தும் விவசாயக் கொள்கை.
புதிய பொருளாதாரக் கொள்கை:
அறிவியல் தொழில்நுட்ப, தகவல் தொடர்பு புரட்சி யுகத்தின் காலத்திற்கேற்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவு.
தரமான, கட்டணமில்லா - கட்டாயக் கல்வி:
ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவருக்கும் தரமான, கட்டணமில்லா கட்டாய கல்வி
கல்வியும், மருத்துவமும் முழுமையாக அரசுமயம்..
இலாபமீட்டக்கூடிய தொழில்கள் தனியார் வசமிருப்பதுபோல் அத்தியாவசியத் தேவையுள்ள சேவைத்துறைகளான கல்வியும், மருத்துவமும் முழுமையாக அரசின் வசமாவதற்கு ஆதரவு.
மாநில சுயாட்சி:
ஒரு மாநில அரசு, மக்கள் நல அரசாக பரிபூரண சுதந்திரத்தோடும், நிதியாதாரத்தோடும் செயல்பட வழிவகுக்கும் அரசியல், பொருளாதார உரிமைகள் பெற்ற மாநில சுயாட்சி - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைக்கும் அரசியல் பிரிவு 356ஐ நீக்குதல் - மாநில அரசின் நிர்வாகத் தலைமையாகவும், மாநிலத்தைக் கண்காணிக்கும் பதவியாகவும் உள்ள மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் பதவியை ஒழித்தல்.
மீதி அடுத்த பதிவில்.....

Tuesday, December 15, 2009
சொல்ல மனம் கூசுதில்லையே...
வறுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை...
செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...
நசுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...
தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...
பக்கத்துக் காட்டு வரப்போரம்
பதுங்கிப் போய் பறித்துவந்து
தீயில் வாட்டி உதடு சுடத் தின்ற
கருகிய சோளக்கருது...
காடு மேடெல்லாம் தேடி
கைவலிக்கப் பிடுங்கி வந்து
குமுட்டியடுப்பில் வேகவைத்து
தின்ற பனங்கிழங்கு...
இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என...
---ஈரோடு கதிர்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை...
செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...
நசுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...
தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...
பக்கத்துக் காட்டு வரப்போரம்
பதுங்கிப் போய் பறித்துவந்து
தீயில் வாட்டி உதடு சுடத் தின்ற
கருகிய சோளக்கருது...
காடு மேடெல்லாம் தேடி
கைவலிக்கப் பிடுங்கி வந்து
குமுட்டியடுப்பில் வேகவைத்து
தின்ற பனங்கிழங்கு...
இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என...
---ஈரோடு கதிர்
Tuesday, December 8, 2009
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மக்களவையும் மாநிலங்கள் அவையும் அமளி துமளியால் ஒத்திவைக்கப்படுவது நமக்கெல்லாம் புதிதல்ல. ''மக்கள் வரிப் பணத்தை இப்படி கரியாக்குகிறார்களே..?'' என்று நாடே வயிறெரிந்து பார்ப்பதும் வழக்கமாகி விட்டது. ஆனால், அண்மையில் மக்களவை தொடங்கிய அரை மணி நேரத்துக்குள், அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்ததற்குக் காரணமே வேறு!
பல்வேறு கேள்விகளைக் கேட்க வாய்ப்புக் கேட்டிருந்த 34 எம்.பி-க்களில் 2 பேர் மட்டுமே அந்த கேள்வி நேரத்தின் போது அவைக்கு வந்திருந்தனர்! சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்தும், எம்.பி-க்கள் இல்லாததால் ஏறத்தாழ 20 கேள்விகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. சபாநாயகர் மீராகுமார், “நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை!” என்றார் வேதனையோடு.
மிஸ் ஆன காங்கிரஸ் எம்.பி-க்களின் பெயர்ப் பட்டியலை வாங்கியிருக்கும் சோனியா காந்தி, அவர்கள் மீது நடவடிக்கைக்கான யோசனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
நாடாளுமன்றத்தை ஒரு மணி நேரம் நடத்த ரூ.14 லட்சம் வரை செலவாகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். பண விரயம் ஒருபுறம் இருக்கட்டும், தங்களது பிரச்னையை எடுத்துரைத்துத் தீர்ப்பதற்கு வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வோர் உறுப்பினரையும் நாடாளுமன்றத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், கேள்வி நேரத்தில்கூட அவர்கள் ஆப்சென்ட் என்றால்..?
இப்படியொரு கேவலமான நிகழ்வு நிகழ்ந்திருப்பதே எத்தனை இந்தியனுக்கு தெரியும்.. ? ஆனால் வேட்டைக்காரன் வெளியீடு என்றைய தினம், சச்சின் டெஸ்டில் எத்தனை ரன்கள் என கேட்டால் யோசிக்காமல் வந்து விழும் பதில்கள். ஆக தப்பு எங்கிருக்கிறது..?

உயிர் காக்க உழவு காப்போம்
கொஞ்சமாவது யோசிங்கப்பு...
தவளைச் சத்தம் கேட்டதும் போச்சு
கவலை நித்தம் படிந்தே போச்சு
கலப்பை பிடிக்கும் கைகள் குறைந்தே போச்சு
கணிணி மோகமே எங்கேயும் ஆச்சு
காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு
மும்மாரி பொழிந்ததெல்லாம்
மலையேறிப் போச்சு
எல்லாமே இப்போ விலையேறிப் போச்சு
சாதம் பிசைந்து
சாப்பிடும் நாளும் அழிந்திடுமோ
பாவம் மனித இனங்கள்
மாத்திரைகளாலே வாழ்ந்திடுமோ
விதைப்பவன் வாழ்க்கையெல்லாம்
விரைவில் கதையாகிப் போய்விடுமோ
காய்கனி உண்பதெல்லாம் - நாளை
கனவாகிப் போய்விடுமோ
மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்
பட்டுப்போகிற பூமியை
பசுமையாக்க முயற்சித்திடுவோம்!
மழை காக்க மரம் வளர்ப்போம்
உயிர் காக்க உழவு காப்போம் !
--உழவன்---
தவளைச் சத்தம் கேட்டதும் போச்சு
கவலை நித்தம் படிந்தே போச்சு
கலப்பை பிடிக்கும் கைகள் குறைந்தே போச்சு
கணிணி மோகமே எங்கேயும் ஆச்சு
காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு
மும்மாரி பொழிந்ததெல்லாம்
மலையேறிப் போச்சு
எல்லாமே இப்போ விலையேறிப் போச்சு
சாதம் பிசைந்து
சாப்பிடும் நாளும் அழிந்திடுமோ
பாவம் மனித இனங்கள்
மாத்திரைகளாலே வாழ்ந்திடுமோ
விதைப்பவன் வாழ்க்கையெல்லாம்
விரைவில் கதையாகிப் போய்விடுமோ
காய்கனி உண்பதெல்லாம் - நாளை
கனவாகிப் போய்விடுமோ
மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்
பட்டுப்போகிற பூமியை
பசுமையாக்க முயற்சித்திடுவோம்!
மழை காக்க மரம் வளர்ப்போம்
உயிர் காக்க உழவு காப்போம் !
--உழவன்---
Saturday, December 5, 2009
கி.மு.கி.பி.
பிரபல cartoonist மதன் கைவண்ணத்தில் மற்றுமொரு ரசிக்கவைக்கும் படைப்பு. பூமியில் உயிரினங்கள் உருவாவதில் தொடங்கி, படிப்படியாக ஒவ்வொன்றாக விளக்குகிறார். முதல் 20-30 பக்கங்களில் மனிதன் புகுந்து விளையாடுகிறார். படிப்பவர் முகத்தில் புன்முறுவல் தெரிவது நிச்சயம். பல புதிய விஷயங்கள் புலப்படுகிறது.
மொத்தத்தில் வரலாற்று ரசிகர்களின் பொக்கிஷமான இந்த புத்தகம் ஒவ்வொருவரையும் ரசிக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உருப்பிடியான மற்றுமொரு புத்தகம்.
.
Friday, December 4, 2009
இடைவெளி
சரியாக ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, இதோ வந்து விட்டேன் மீண்டும் உங்கள் கவனத்தை கவர்வதற்கு. சின்ன தயக்கம், சரியான புறிதல் இல்லாதது, நேரமின்மை, அலுவலக சுமை, என்னத்த எழுதி என்னத்த செஞ்சி எனும் வாழ்க்கையின் மீது வெறுப்பு என அத்தனையும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டதனால் இந்த இடைவெளி தவிர்க்க முடியாததாகி போனது.
புது பொளிவுடன், புது தெளிவுடன், புது தெம்புடன் இனி வழக்கம் போல் எனது கோவம்,எதிர்பார்ப்பு,பாராட்டு,ஆற்றாமை என அத்தனையும் உங்கள் முன்னே...
ஒன்பத்துவேளியிளிருந்து ஒரு சாமானியன்.

Subscribe to:
Posts (Atom)