Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன்

நான் இந்த திரைபடத்தை விமர்சனம் செய்தே ஆக வேண்டும். அதற்கு காரணம் நான் சொல்லி தெரிய வேண்டாம். ஆம் முழுக்க முழுக்க இந்த கதை கற்பனைதான், சோழ பாண்டியர்கள் பற்றியது அல்ல என்று title card போட்டே தொடங்கினாலும், கதையை நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை.

12 நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்திற்கு பிறகு கதை தொடங்குகிறது. கதை பல பேருக்கு புரியாது என்பது நிச்சயம். தஞ்சை தரணி முழுவதும் கோவில் எடுத்து, சோறுடைத்த சோழ நாடு என்று பேரெடுத்து, மிக பிரம்மாண்டமாய் சாம்ராஜ்யத்தை விரிவு செய்தனர் சோழர். அப்பேற்பட்ட சோழ இனத்தவரை நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாக காட்சி படுத்தி இருக்கிறார். வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்த பாண்டிய குலத்தையும், சக மக்களை மதிக்காத திமிரு பிடித்தவர்கள் போலவே சித்தரிக்கிறார். ஒன்று வரலாறை ஒழுங்காக படித்து விட்டு படம் பண்ணியிருக்க வேண்டும், அல்லது படம் எடுக்கும் பொழுது வரலாற்றை தொடாமல் போயிருக்க வேண்டும். செல்வராகவன் செய்த மாபெரும் தவறு இது.

ஒரு adventure moovie எடுத்திருகிறார், ஆங்கில படத்திற்கு இணையாக தந்திருக்கிறார், வழக்கமான செண்டிமெண்ட்,குத்து பாட்டுக்கள், வசனங்கள் போன்ற தமிழ் மசாலாவை தவிர்த்திருக்கிறார், என்றெல்லாம் பாராட்டலாம் தப்பே இல்லை. ஆனால் தான் சொல்ல வந்த Point of Concept என்னும் கதை கருவை மிக தெளிவாக, குறியாக சொல்லாமல், தேவை இல்லாத முதல் பாதி வக்கிரங்களும், வரலாற்று இடை சொருகளுடன் தந்து தனது அக்மார்க் கிறுக்கு தனத்தை காட்டி இருக்கிறார் செல்வராகவன். ஒரு சிந்துபாத் கதை போன்ற ஏழு கடல் தாண்டி,மலை தாண்டி புதையல் எடுத்து வரும் கதை. அவ்வளவு தான் ஆனால் அவர் தந்திருக்கும் விதம்... .... ... ?


இன்னும் நிறைய சொல்ல வேண்டும் என்றாலும் நேரம் கருதி இப்போதைக்கு இது போதும்.

1 comment:

mopper said...

Hmm... almost correct!!! But it is a fantasy at the end of the day....

Bye.
Mopper.