Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன்

நான் இந்த திரைபடத்தை விமர்சனம் செய்தே ஆக வேண்டும். அதற்கு காரணம் நான் சொல்லி தெரிய வேண்டாம். ஆம் முழுக்க முழுக்க இந்த கதை கற்பனைதான், சோழ பாண்டியர்கள் பற்றியது அல்ல என்று title card போட்டே தொடங்கினாலும், கதையை நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை.

12 நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்திற்கு பிறகு கதை தொடங்குகிறது. கதை பல பேருக்கு புரியாது என்பது நிச்சயம். தஞ்சை தரணி முழுவதும் கோவில் எடுத்து, சோறுடைத்த சோழ நாடு என்று பேரெடுத்து, மிக பிரம்மாண்டமாய் சாம்ராஜ்யத்தை விரிவு செய்தனர் சோழர். அப்பேற்பட்ட சோழ இனத்தவரை நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாக காட்சி படுத்தி இருக்கிறார். வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்த பாண்டிய குலத்தையும், சக மக்களை மதிக்காத திமிரு பிடித்தவர்கள் போலவே சித்தரிக்கிறார். ஒன்று வரலாறை ஒழுங்காக படித்து விட்டு படம் பண்ணியிருக்க வேண்டும், அல்லது படம் எடுக்கும் பொழுது வரலாற்றை தொடாமல் போயிருக்க வேண்டும். செல்வராகவன் செய்த மாபெரும் தவறு இது.

ஒரு adventure moovie எடுத்திருகிறார், ஆங்கில படத்திற்கு இணையாக தந்திருக்கிறார், வழக்கமான செண்டிமெண்ட்,குத்து பாட்டுக்கள், வசனங்கள் போன்ற தமிழ் மசாலாவை தவிர்த்திருக்கிறார், என்றெல்லாம் பாராட்டலாம் தப்பே இல்லை. ஆனால் தான் சொல்ல வந்த Point of Concept என்னும் கதை கருவை மிக தெளிவாக, குறியாக சொல்லாமல், தேவை இல்லாத முதல் பாதி வக்கிரங்களும், வரலாற்று இடை சொருகளுடன் தந்து தனது அக்மார்க் கிறுக்கு தனத்தை காட்டி இருக்கிறார் செல்வராகவன். ஒரு சிந்துபாத் கதை போன்ற ஏழு கடல் தாண்டி,மலை தாண்டி புதையல் எடுத்து வரும் கதை. அவ்வளவு தான் ஆனால் அவர் தந்திருக்கும் விதம்... .... ... ?


இன்னும் நிறைய சொல்ல வேண்டும் என்றாலும் நேரம் கருதி இப்போதைக்கு இது போதும்.

Saturday, January 9, 2010

இளைய இந்தியா...

இந்தியா மனிதவளம் மிகுந்த தேசம்; அதிலும் இளைஞர்கள் நிறைந்த நாடு என்று பெருமையாகக் கூறலாம். நாட்டின் மக்கள்தொகையில் 54 கோடிப்பேர் இளைஞர்கள் என்றும், அதாவது 51 விழுக்காட்டினர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த இளைஞர்களின் ஆற்றலை நாடு முறையாகப் பயன்படுத்திக் கொண்டதா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது.


அன்று நடந்த இந்திய விடுதலைப் போராட்டமா? இந்தி எதிர்ப்புப் போராட்டமா? இன்று நடக்கும் தெலங்கானா பிரிவினைக் கிளர்ச்சியா? ஒன்றுபட்ட ஆந்திரம் ஆர்ப்பாட்டமா? எல்லாமே இளைஞர்களின் எழுச்சியில்தான் நடந்
தது; நடக்கிறது; நடக்கும்; போராட்ட வரலாறுகள் இப்படித்தான் கூறுகின்றன.

காந்தியடிகள் முதல் காமராஜர், அண்ணா, கருணாநிதி வரை எல்லோ
ருமே இளமையிலேயே பொதுப்பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தாம்.சாதனையாளர்களின் சரித்திரமெல்லாம் இப்படித்தான் இருக்கிறது.

இக்கால இலக்கியத்தின் தலைமகன் பாரதி 39 வயதுக்குள் அவன் செய்தது நூறாண்டு சாதனை; கணிதமேதை இராமானுஜம் 33 ஆண்டுகள்; புரட்சியாளர் பகத்சிங் 24 ஆண்டுகள்; 29 ஆண்டுகளே வாழ்ந்த பட்டுக்கோட்டையார் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்தியாவின் புகழை உலக அரங்குக்குக் கொண்டு சென்ற இளைஞ
ர் விவேகானந்தருக்கு அப்போது 30 வயது. 39 ஆண்டுகளே வாழ்ந்த அந்த மாமனிதரின் பிறந்த நாளே இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பொருளாதார நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் ஒரு நாடு முன்னேற்றம் அடைவதன் மூலம்தான் அந்த நாட்டை வளர்ந்த நாடு என்று கூறுகிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக உயர்த்துவது இளைஞர்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது...'' என்று அறிவியல் மேதை அப்துல் கலாம் சிறார் அறிவியல் மாநாட்டில் பேசியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வெளியேறும் இளைஞர்களில் வேலைவாய்ப்பைப் பெறுபவர் மிகக் குறைவே; இந்தப் பத்து விழுக்காட்டினரும் ஆள்பலம், பணபலம், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியே இந்த இடங்களைக் கைப்பற்றுகின்றனர். மற்றவர்கள் 90 விழுக்காட்டினர் தங்கள் காலத்தை வேலை தேடியே கழித்து விடுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 60 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் ஒருநாள் நம்பிக்கையிழந்து, சோர்வடைந்து வேலை தேடும் வேலையையும் விட்டு விடுகின்றனர்.

அரசுத் துறைகளில் இப்போது காலியாக உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை வேலை தேடிக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அளிக்காமல் காலதாமதம் செய்யப்படுகிறது. அத்துடன் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் அரசாணை ஏன் என்று இளைஞர்கள் கேட்பது நியாயம்தானே!


இன்றைய இளைஞர்கள் மக்கள் பிரச்னைகளில் ஆர்வம் காட்டவில்லை. முதியவர்கள் மட்டுமே பங்கு பெறுகின்றனர் என்பது ஆரோக்கியமான சமுதாயத்துக்கு அழகல்ல. இலக்கியம், சமுதாயம், அரசியல் மேடைகளில் அவர்கள் பார்வையாளர்களாகவும் இல்லாமல், பங்கேற்பாளர்களாகவும் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும்.

இன்று நாட்டை ஆளுவது அரசியல். இந்த மக்களாட்சி நல்லவர்களாலும், வல்லவர்களாலும் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? காலம் கனியட்டும் என்று எத்தனை நாள் தான் காத்திருப்பது...? செயலில் இறங்க வேண்டாமா...?

காலை எட்டு மணிக்கு எழுந்து, அவசர அவசர மாக அலுவலகம் சென்று பத்து மணி நேரம் கணினி முன்னாலே அமர்ந்து, பின் இரவு ஏழு மணிக்கு வழக்கம் போல் வீடு வந்து உண்டு உறங்கப்போகும் வாழ்கை...? யோசித்து பாருங்கள்...