Saturday, May 30, 2009

15 ஆவது இந்திய நாடாளுமன்ற அமைச்சரவை

அமைச்சர்களும், அவர்களது இலாக்காக்களும்:

பிரதமர்: மன்மோகன் சிங்


கேபினட் அமைச்சர்கள்


1.பிரணாப் முகர்ஜி - நிதி


2.சரத் பவார் - வேளாண்மை, உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம்


3.ஏ.கே.அந்தோனி - பாதுகாப்பு


4.ப.சிதம்பரம் - உள்துறை


5.மம்தா பானர்ஜி - ரயில்வே


6.எஸ்.எம். கிருஷ்ணா - வெளியுறவு


7.வீரபத்ர சிங் - உருக்கு


8.விலாஸ்ராவ் தேஷ்முக் - கனரகத் தொழில், பொதுத்துறை நிறுவனங்கள்


10.குலாம் நபி ஆசாத் - சுகாதாரம் மற்றும் குடும்பநலம் .


11.சுஷில்குமார் ஷிண்டே - மின்சாரம்


12.எம்.வீரப்ப மொய்லி - சட்டம் மற்றும் நீதி


13.ஃபரூக் அப்துல்லா - புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி


14.எஸ்.ஜெய்பால் ரெட்டி - நகர்ப்புற வளர்ச்சி


15.கமல்நாத் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை


16.வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம்


17.மீரா குமார் - நீர்வள ஆதாரம்


18தயாநிதி மாறன் - ஜவுளி


19.ஆ.ராசா - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்


20.முரளி தேவ்ரா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு


21.அம்பிகா சோனி - செய்தி மற்றும் ஒலிபரப்பு


22.மல்லிகார்ஜுன் கார்கே - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு


23.கபில் சிபல் - மனித ஆற்றல் மேம்பாடு


24.பி.கே.ஹண்டிக் - சுரங்கம், வடகிழக்கு பிராந்திய மேம்பாடு


25.ஆனந்த் சர்மா - வர்த்தகம் மற்றும் தொழில்


26.சி.பி.ஜோஷி - ஊரக மேம்பாடு, பஞ்சாயத்துராஜ்


27.செல்ஜா - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா


28.சுபோத் காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்


29.எம்.எஸ்.கில் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு


30.ஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்து


31.பவன் கே.பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்


32.முகுல் வாஸ்னிக் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்


33.காந்திலால் பூரியா - பழங்குடியினர் விவகாரம்


34.மு.க.அழகிரி - ரசாயனம் மற்றும் உரம்



இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

1.பிரபுஃல் படேல் - விமானப் போக்குவரத்து


2.பிரித்விராஜ் சவாண் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலக இணையமைச்சர், பணியாளர் மற்றும் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம்


3.ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்


4.சல்மான் குர்ஷீத் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலம்


5.தீன்ஷா ஜே.படேல் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்


6.கிருஷ்ணா தீரத் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்


7.ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல் மற்றும் வனம்


இணை அமைச்சர்கள்


1.ஸ்ரீகாந்த் ஜெனா - ரசாயனம் மற்றும் உரம்


2.இ.அகமது - ரயில்வே


3.முள்ளபள்ளி ராமச்சந்திரன் - உள்துறை


4.வி.நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்


5.ஜோதிராதித்ய சிந்தியா - வர்த்தகம் மற்றும் தொழில்


6.டி.புரந்தேஸ்வரி - மனித ஆற்றல் மேம்பாடு


7.கே.எச்.முனியப்பா - ரயில்வே


8.அஜய் மக்கான் - உள்துறை


9.பனபாக லட்சுமி - ஜவுளி


10.நமோ நாராயண் மீனா - நிதி


11.எம்.எம். பல்லம் ராஜு - பாதுகாப்பு


12.செüகதா ராய் - நகர்ப்புற வளர்ச்சி


13.எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - நிதி


14.ஜிதின் பிரசாத் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு


15.ஏ.சாய் பிரதாப் - உருக்கு


16.பிரணீத் கெüர் - வெளியுறவு


17குருதாஸ் காமத் - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்


18.ஹரீஷ் ராவத் - பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு


19.கே.வி.தாமஸ் - வேளாண்மை மற்றும் நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம்


20.பாரத்சிங் சோலங்கி - மின்சாரம்


21.மகாதேவ் எஸ்.கண்டேலா - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை


22.தினேஷ் திரிவேதி - சுகாதாரம் மற்றும் குடும்பநலம்


23.சிசிர் அதிகாரி - ஊரக மேம்பாடு


24.சுல்தான் அகமது - சுற்றுலா


25.முகுல் ராய் - கப்பல்


26.மோகன் ஜாதுவா - செய்தி மற்றும் ஒலிபரப்பு


27.டி.நெப்போலியன் - சமூக நீதி, அதிகாரமளித்தல்


28.எஸ்.ஜெகத்ரட்சகன் - செய்தி மற்றும் ஒலிபரப்பு


29.எஸ்.காந்திசெல்வன் - சுகாதாரம் மற்றும் குடும்பநலம்


30.துஷார்பாய் செüத்ரி - பழங்குடியினர் விவகாரம்


31.சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்


32. அருண் யாதவ் - இளைஞர் விவகாரம், விளையாட்டு


33. பிரதிக் பாட்டீல் - கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்


34.ஆர்.பி.என்.சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை


35.சசி தரூர் - வெளியுறவு


36.வின்சென்ட் பாலா - நீர்வள ஆதாரம்


37.பிரதீப் ஜெயின் - ஊரக மேம்பாடு


38.அகதா சங்மா - ஊரக மேம்பாடு



வாரிசுகளின் தாக்கம் :


மு.க.அழகிரி ( மு.கருணாநிதி)


தயாநிதி (மாறன்)


ஜி.கே.வாசன் (மூப்பனார்)


சச்சின் பைலட் (ராஜேஷ் பைலட்)


அகதா சங்மா (சங்மா)


பிரதிக் பாட்டீல் (வசுந்தட்டா பாட்டீல்)


பாரத்சிங் சோலங்கி (மாதவ் சிங் சோலங்கி)


தஸ்கர் சௌத்ரி (அமர்சிங் சோலங்கி )

தோரணை


ஒரு மசாலா படம் அவ்வளவுதான். கதை பெருசா ஒன்னும் இல்லை. பேரரசு,தருண் கோபி வரிசையில் சபா ஐயப்பன் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு சாபக்கேடு.விஷாலிடம் விஜய் சாயல் தெரிந்தாலும் ரசிக்க முடியவில்லை. விஷால் தனது பாணியை மாற்றாவிட்டால், தமிழ் சினிமாவில் தாக்குபிடிப்பது மிகப் பெரிய சவாலாக அமையும். கதாநாயகி ஷேரேயா கால்வாசி ஆடையுடன் அடிக்கடி வந்து விட்டு போகிறார். அது யாருப்பா Costume Designer...?

சாதாரண யதார்த்தமான ஆடைகளேஅவருக்கு தெரியாதா?


ஒருவரை பற்றி இங்கு சொல்லியே ஆகா வேண்டும். படத்தின் வசனகர்த்தா... யாரென்று தெரியவில்லை. டிஆர்,பேரரசு போன்றவர்கள் ஜாக்கிரதை. பறவை முனியம்மா முதல் பட்டாபி வரை அனைவரும் வார்த்தைக்கு வார்த்தை பஞ்ச் வசனம் பேசுகிறார்கள். காதல் காட்சிகள் என்ற பெயரில் செம மொக்கையை போடுகிறார்கள். K.S.ரவிகுமார்,ஹரி போன்ற ரசிக்கவைக்கும் மசாலா இயக்குனர்கள் மத்தியில் சபா ஐயப்பன் போன்றவர்களும் இருப்பது ஒரு கரும்புள்ளியே.


எனது மதிப்பீடு :2/10

Wednesday, May 27, 2009

விவசாயி...(3)

இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய உணவு அரிசி. அமெரிக்காவில் அரிசி ஏற்றுமதிச் சரக்கு. ""அமெரிக்காவில் அரிசியின் உற்பத்தித்திறன் 7 டன். இதுவே இந்தியாவில் 3 டன். ஆகவே இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவிலும் ஹெக்டேருக்கு 7 டன் அரிசி விளைவிக்க வேண்டும். இந்த அளவில் இந்திய விவசாயிகள் அரிசி உற்பத்தி செய்தால் போதும். நல்ல லாபம் வரும். நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தும் இல்லை. விவசாயப் பிரச்னைகள் எல்லாமே உற்பத்தித் திறனை உயர்த்தினால் போதும்...'' இப்படித்தான் நமது நிபுணர்கள் நினைக்கின்றனர். இது சரியல்ல.

அமெரிக்காவில் மொத்த அரிசி உற்பத்தியின் பணமதிப்பு 1.2 பில்லியன் டாலர். இந்த அளவில் அரிசி உற்பத்தி செய்ய 1.4 பில்லியன் டாலர் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரொக்கமாக இந்த அளவு மானியம் பெறுவதால் 7 டன் உற்பத்தித்திறன் சாத்தியமாகிறது. இந்திய விவசாயிகளுக்கும் இந்த அளவுக்கு மானியம் வழங்குவது சாத்தியமா? இந்த அளவில் மானியம் பெற முடியாத சூழ்நிலையில் நிபுணர்களின் பேச்சைக்கேட்டு அதிகம் முதலீடுகளைக் கொட்டி அதிக உற்பத்தி செய்தும் அதற்கான சந்தையும் விலையும் இல்லாமல் நஷ்டமடைந்து கடனாளியாகி முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதான் நிஜம்.


நமது விவசாயக் கொள்கை எப்படி உள்ளது என்றால், ""விவசாயிகள் எப்படியாவது கடனை உடனை வாங்கி புதிய முறை விவசாயத்தைக் கடைப்பிடித்து உற்பத்தியை உயர்த்தி முடிவில் விற்க வழியில்லாமல் தற்கொலை செய்து செத்துவிடு அல்லது நிலத்தை வந்த விலைக்குக் கார்ப்பரேட்டுகளிடம் விற்றுவிட்டு வெளியேறு என்று கூறுவதுபோல் உள்ளது''.

ஆமாம். இன்று இந்திய விவசாயத்தில் அமெரிக்காவைப்போல் கார்ப்பரேட்டுகள் நுழைந்துவிட்டனர். இன்று அமெரிக்க உபதேசத்தை வேதமாகக் கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் அமைச்சர்கள் விவசாயத்தை லாபகரமாக மாற்ற ஏற்றுமதிக்குரிய மாற்றுப்பயிர்த்திட்டத்தை முன்வைக்கின்றனர். கொய்மலர், வெள்ளரிக்காய், கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என்ற வரிசையில் பல வகைப் பயிர்கள் உண்டு. இவற்றைப் பயிரிடும் தகுதி உணவு விவசாயம் செய்யும் ஒன்றே முக்கால் ஏக்கர் பேர்வழிகளுக்கு இயலாது. கார்ப்பரேட்டுகள் அல்லது கார்ப்பரேட்டுகளின் பக்கபலம் உள்ள பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் உண்டு.
ஏற்றுமதி எத்தர்களால் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து ஏமாந்துபோன விவசாயிகள் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் உண்டு. அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு தென் அமெரிக்க நாடுகளில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்து கார்ப்பரேட் பயன் அடைந்தார்கள். ஆனால் உணவு உற்பத்தி குறைந்து அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறு - நடுத்தர விவசாயிகள் வெளியேறி விட்டனர்.

இதேபோக்கு இந்தியாவில் தென்படுகிறது. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய அறிவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்கப் பாரம்பரியத்தை ஏற்கும் நிலை புதிய புதிய நவீன ரசாயன - இயந்திரத் தொழில் நுட்பங்கள் மூலம் அறிமுகமாகி விட்டதால் இந்திய மண்ணில் இனி பாரம்பரிய விவசாயிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
இனி எதிர்காலத்தில் இந்திய விவசாயம் முழுமையாகவே கார்ப்பரேட்டுகளின் வசமாகிவிடும். வேறு வழியில்லாமல் விவசாயிகள் வேகமாக சொந்த மண்ணைவிட்டு உள்ளூர் அகதிகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
நன்றி : தினமணி

விவசாயி...(2)

ஓர் அரசு மேல்மட்ட அதிகாரியையோ, அரசுத்துறை விவசாய விஞ்ஞானியையோ பார்த்து, இந்திய விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள். ரெடிமேட் பதில்கள் நிறையக் கிடைக்கும்.

உற்பத்தித்திறன் குறைவதால் வருமானம் குறைகிறது. அதனால் தற்கொலை என்பார். விவசாயம் காரணமல்ல. திருமணச் செலவு காரணமாகக் கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையை மூடி மறைக்கவே இப்படியெல்லாம் விவசாயத் துறையினர் காரணங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

பசுமைப்புரட்சி நிகழ்வதற்கு முன் குறிப்பாக 1960 - 69 பதிற்றாண்டில் விவசாய உற்பத்தித் திறன் குறைவாகத்தான் இருந்தது. அன்று எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்டதாக எதுவும் செய்தி இல்லையே. அன்றும் விவசாயிகளின் பெண்களுக்குக் கல்யாணக்கடன் இருந்தது. அதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியும் உற்பத்தித்திறனும் பன்மடங்கு உயர்ந்தும் கூட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற இலக்கு உலகளாவியதாக இருந்தது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா என்று உலகின் எல்லா இடங்களிலும் உற்பத்தியை உயர்த்துவது ஒரு பொதுவான லட்சியமே. வளர்ச்சியுற்ற நாடுகளில் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டு இயங்கும் இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. இரு நாடுகளின் வேளாண்மைப் பொருளியல் ஒப்பிடக்கூடியதும் அல்ல.


அமெரிக்காவில் 7 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அமெரிக்காவில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 70 லட்சம். ஒட்டுமொத்த அமெரிக்க சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமே விவசாயிகளின் எண்ணிக்கையாக உள்ளது.

இரண்டாவது உலகப் போருக்கு முன்பு அமெரிக்காவில் 3 கோடி விவசாயிகள் இருந்தனர். அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட் என்ற வர்த்தகக் கூட்டணி கைப்பற்றியது. சுமார் 2.7 கோடி விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றியது. இன்றைய அமெரிக்காவின் விவசாயக் கொள்கை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன நிகழ்ச்சி நிரலாக மாறிப்போனது.
2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கு கடைசியாக எடுக்கப்பட்டபோது வேண்டுமென்றே விவசாயிகளின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவில் விவசாயிகளின் தொகை சுருங்குவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இன்று ஐரோப்பாவிலும் விவசாயிகள் அழிந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும் விவசாயிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாக விவசாயக் கொள்கைகளுக்கு மத்தியில் கணிசமாக உள்ளது. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 20 கோடி. உலக விவசாயிகளில் 10-க்கு நால்வர் இந்திய விவசாயிகள். இந்தியாவின் விளைநிலம் 139 கோடி ஹெக்டேர். விவசாயியின் சராசரி நில அளவு 1.4 ஹெக்டேர். இந்தியாவுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவின் சராசரி நில அளவு 2000 மடங்கு கூடுதல். இந்தியாவில் விவசாயம் வாழ்க்கை. அமெரிக்காவில் விவசாயம் வியாபாரம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்காவின் அனுபவம் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும் என்பதே விளங்காத புதிராக உள்ளபோது, இந்தியாவிலும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறும் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது. குறிப்பாக 1980-க்குப் பின் கிராமங்களைவிட்டு வெளியேறிய சிறு - குறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும்.

விவசாயி... (1)


1942 ""வெள்ளையனே வெளியேறு'' என்ற விடுதலைக் குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்ததன் விளைவால் தூங்கிய பாரதம் துணிவுடன் எழுந்தது. விடுதலை பெற்ற இந்தியாவில் இன்று நிகழ்வது என்ன?

ஆட்சியைப் பிடித்தவர்கள் கட்சிகளை மாற்றுகிறார்கள். மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவிக்காக கொள்கைகளைக் குப்பையில் கொட்டியபின்பும் சாயம் வெளுக்காத சில சமரசங்கள் அவர்களுக்குப் பணத்தை அள்ளித் தரலாம்.

எந்தக் கட்சி பதவிக்கு வந்தால் என்ன? யார் ஆண்டால் யாருக்கு என்ன லாபம்? யாராலுமே காப்பாற்ற முடியாத ஒரு கேவல நிலைக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆண்டுதோறும் விவசாயத்தைக் கைவிட்டு பெருநகரங்களின் சேரிகளில் குவியும் விவசாயிகளின் நிலை ஏறத்தாழ இலங்கை அகதிகளைவிடக் கேவலமாயுள்ளது. விவசாயிகளின் வாரிசுகள் இன்று விவசாயம் செய்யத் தயாராக இல்லை. 1980 - 89 காலகட்டத்தில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள் 2004 - 05 காலகட்டத்தில் என்ன ஆனார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் திரட்டப்படுமானால் இந்த உண்மை வெட்டவெளிச்சமாகும்.


5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னமும் மோசம். நகரங்களில் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவியல் நுட்பம் நன்கு தெரிந்த சிறு - குறு விவசாயிகளாவர். பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தாமாகவே வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்கள்.

அரசுத்தரப்பு புள்ளிவிவர அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1993-லிருந்து 2006 வரையில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஊடகங்களின் தகவல்களின்படி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மூன்று லட்சம்.

2006-லிருந்து 2009 வரையில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்தியாவில் இவ்வளவு அரசியல் கட்சிகள் இருந்தும் எந்த ஒரு கட்சியாவது விவசாயிகளின் தற்கொலையை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஒரு தேசம் தழுவிய மாநாடு கூட்டியோ ஊர்வலம் நடத்தியோ ஏதும் ஒரு பொதுக்கூட்டத்தில் விவாதித்ததா? மாநில அளவிலாவது இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டதா? எதுவுமே செய்யப்படாததன் பொருள் என்ன? திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இந்தியாவில், விவசாயிகளை வெளியேற்றுவதும் ஒரு திட்டக் கொள்கையாக மாறிவிட்டதுதான் பரிதாபகரமான உண்மை நிலை. இது எவ்வாறு என்றால் அமெரிக்கா திட்டமிடுகிறது. அதை இந்தியா நிறைவேற்றுகிறது. அமெரிக்காவில் எவையெல்லாம் நிகழ்ந்தனவோ அவையெல்லாம் இந்தியாவில் நிகழப் போகின்றன.

Tuesday, May 26, 2009

இந்திய அரசியல் அமைப்பு

15 ஆவது நாடாளுமன்றம் கூடவிருக்கும் இன்றைய நிலையில், நமது இந்திய அரசியல் அமைப்பை பற்றி சில துளிகள்...
இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது.

அவை மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை.

மாநிலங்களவையின் (Rajya Sabha) 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் (Legistative Assembley) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

மக்களவை (Lok Sabha), மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

இந்திய நாடாளுமன்றம், கழுகின் பார்வையில்...

அமைச்சரவை:
வெளிவிவகாரம், நிதி, சட்டம், மனிதவள மேம்பாடு, விவசாயம், ரயில்வே என நாற்பதுக்கும் மேற்பட்ட துறைகளை கொண்டுள்ளது இந்திய அரசாங்கம். அதில் 30 முதல் 35 அமைச்சகங்களுக்கு ஒரு காபினெட் (Cabinet Minister) மற்றும் இரு இணை அமைச்சர்கள் (Minister Of State) நியமிக்க படுவார்கள்.

இந்திய தொழிலாளர் ம்ற்றும் வேலைவாய்ப்பு, மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, உணவு மற்றும் பதப்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி துறை, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு , உள்நாட்டு விமான அமைச்சகம், புள்ளி விவரம் மற்றும் திட்டக்குழு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் என 8 துறைகளுக்கு காபினெட் அமைச்சர்கள் இல்லாமல் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் (Independent MOS) மட்டுமே நியமிக்க படுகிறார்கள்.
தகவல்கள் தொடரும்...

Saturday, May 16, 2009

ஏமாற்றம்...

கடந்த ஒரு மாத காலமாக 5 கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வர தொடங்கிஉள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிகளை குவித்து வரும் நிலையில் எனது கருத்தை தெரிவிக்க முனைகிறேன்.

முதலில் மாநில நிலவரத்தை ஆராய்வோம். தி.மு.க காங் கூட்டணி மகத்தான வெற்றி அடைந்துள்ளது.தேசியம்,மாநிலம் என இரு இடங்களிலும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு மீண்டும் அரியணை ஏறி இருக்கிறார்கள். இலங்கை தமிழர்,மின்வெட்டு,தமிழக அரசு மீதுள்ள வெறுப்பு என அத்தனையும் தாண்டி மிக பிரமாதமாக வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

இரு முறை `சிறந்த நாடாளுமன்றவாதி' என விருது பெற்ற வைகோ தோல்வியடைய, அரசியலில் முன் அனுபவமே இல்லாமல் வெறும் ஆயுதத்தையும்,பணத்தையும் துணையாக கொண்டு முதல் முறையாக போட்டி இடும் அழகிரி,ரித்தீஷ் போன்றவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

தே.மு.தி.க. நாற்பது இடங்களில் தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் ஓட்டுகளை கனக்கட்சிதமாக பிரித்திருக்கிறார் என்பதே கண்கூடான உண்மை. (விருதுநகரில் தே.மு.தி.க. வேட்பாளர் பெற்ற ஒட்டு ஒரு லட்சத்திற்கு மேல்)இதன்மூலம் காங்கிரஸ் அரசாங்கம் அமைய விஜயகாந்த் மறைமுகமாக உதவினார் என்பது நிதர்சனம்.

5 ஆண்டுகாலமாக அமைச்சரவையில் அங்கம் வைத்து கொண்டு,ஒரு துரும்பை கூட அசைக்காமல், எல்லாம் முடிந்த பின் சரியாக தேர்தலுக்கு ஒரு வாரம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பெயரில் வெறும் ஆறு மணி நேரத்தில் முடித்து கொண்ட முத்தமிழ் கலைஞர்,தமிழின காவலர்,டாக்டர் கருணாநிதி மீண்டும் தனது அரசியல் சாணக்கியத்தை தொடங்க இருக்கிறார்.மாறன்,அழகிரி போன்றவர்கள் நிச்சயம் மத்திய அமைச்சர்களாக வலம் வருவார்கள். மீண்டும் கலைஞரிடமிருந்து ஈழம் பற்றிய கண்டனங்கள் வர தொடங்கும்.

தேர்தல் முடிவுகளை பார்த்தால் இலவச அறிவுப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்வதாகவே தெரிகிறது. மேலும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டளிக்கும் வழக்கமும் அதிகரித்துள்ளது.

இறுதியாக மாநிலத்தில் தி.மு.க. காங் கூட்டணி வெற்றி எனக்கு மிக பெரிய ஏமாற்றத்தையே அளித்துள்ளது.




அடுத்து தேசிய முடிவுகள்.காங்கிரஸ் சர்வ சாதாரணமாக ஆட்சி பொறுப்பில் ஏறும் என்பது தேர்தல் முடிவுகள் தரும் மிகத் தெளிவான பதில்.

விடுதலை அடைந்து 60 ஆண்டுகளில் சுமார் 55 ஆண்டுகள் நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது.விளைவு எதற்கெடுத்தாலும் லஞ்சம்,ஊழல். விரைவாக முடிவெடுக்கும் தெளிவான தலைமை இல்லாதது காங்கிரஸின் பலவீனம் என்றால்,தேசிய அளவில் சரியான எதிர் கட்சி இல்லாதது மிகப்பெரிய பலம
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைகள்,அணுகுண்டு சோதனை என சாதனைகள் பல செய்த போதிலும் மதசார்பு பா.ஜ.க.வின் மிகப்பெரிய மைனஸ்.
ஆட்சி பொறுப்பில் மாற்றம் இருந்தால் நல்லது என்பதே எனது கருத்து. எனவே தேசிய முடிவுகளும் எனக்கு மிக பெரிய ஏமாற்றம் .


ஏமாற்றம் ஏமாற்றம் என கூப்பாடு போடும் நான் தேர்தல் அன்று Loss Of Pay க்கு பயந்து ஒட்டு போடாமல் பெங்களூர் அலுவலகத்திலேயே இருந்து விட்டேன். ஒட்டு போடாமல் இருந்த மீதி 34% சதவீதத்தில் நானும் ஒருவன்.எனது இயலாமையை தார்மீகமாக ஏற்று மிகுந்த குற்ற உணர்வுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நானும் ஒரு சாமான்யன்.

சர்வம்




விஷ்ணுவர்தன்,ஆர்யா,த்ரிஷா,யுவன் ஷங்கர் ,அயிங்கரன்மூவிஸ் என திரை அரங்கிற்கு இழுக்கும் அத்தனை சிறப்பம்சங்கள். பழிவாங்க துடிக்கும் ஒருவனிடம் இருந்து சிறுவனை காப்பாற்றுவதே கதை. மிக பிரமாதமாக தந்திருக்க வேண்டிய படத்தை மிக சொதப்பலாக தந்திருக்கிறார் இயக்குனர்.
ஜொலிக்க வேண்டிய காதல் காட்சிகள் ஜவ்வு போல் நீண்டு சலிப்பையே ஏற்படுத்துகிறது.

Cameraman நீரவ் ஷா , costume designer அனுவர்தன் போன்றவர்கள் கவனம் ஈர்கிறார்கள். மற்றபடி படத்தில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் Heart Transplantation எனப்படும் இதய மாற்று அறுவைசிகிச்சை.ஆர்யா தன் வேலையை சரியாக செய்தாலும் , இனி கதை தேர்வு மிக முக்கியம். த்ரிஷா வருகிறார்,பேசுகிறார்,போகிறார். பில்லாவை எடுத்து தனது தரத்தை தாழ்த்திக்கொண்ட விஷ்ணுவர்தன் இந்த படத்தினால் மீண்டும் தாழ்ந்து விட்டார் என்றே கூறுவேன்.




எனது மதிப்பீடு : 2.5/10

Thursday, May 14, 2009

நியூட்டனின் மூன்றாம் விதி


சாதாரண பழிவாங்கும் கதை. இருந்தாலும் விறு விறு சுருசுரு காட்சிகளால் வித்தியாசம் காட்டுகிறார் அறிமுக இயக்குனர் தாய் முத்துச்செல்வன். ஒரு சில காட்சிகளில் S.J.சூர்யா சுய ரூபம் காட்டினாலும், பொதுவாக அடக்கி வாசித்திருக்கிறார். வில்லன் ராஜீவ் கிருஷ்ணா 'ஆஹா' போட வைக்கிறார்.


இசை சுமார் என்றாலும், வேகமான திரைகதைக்கு பாடல்கள் ஒரு தடையே. அப்புறம் யாருப்பா அந்த நாயகி. நடிக்கவும் தெரியலை காட்டவும் தெரியலை. நாயகி தேர்வு மிகப்பெரிய சொதப்பல்.முதல் பாதி சரவெடி என்றால், பின்பாதி ஊசி பட்டாசு. அதுவும் Climax கொஞ்சம் இழுவையாக தான் தெரிகிறது.


S.J.சூர்யா படமா...? என்று யோசிக்காமல் தாராளமாக சென்று பார்த்து வரலாம்.


எனது கருத்து : 4.5/10

Saturday, May 9, 2009

மரியாதை


மரியாதை புரட்சிக் கலைஞரின் 151 ஆவது படம் என்பதை விட எந்த சிறப்பும் இல்லை. Sentiment தான் என்றாலும் அதையும் சரியாக தர முடியவில்லை விக்ரமனால். சென்னை காதல்,மரியாதை என வரிசையாக மோசமான படங்கள். இயக்குனர் விக்ரமன் அவர்களே கொஞ்சம் யோசித்து வாருங்கள்.


கருப்பு M.G.R சமத்தாக முழு நேர அரசியல்வாதியாகி விடலாம். அல்லது இது போன்ற படங்களினாலே அவருக்கு ஒட்டு குறைய வாய்புண்டு. ரமணா போன்ற படங்கள் அவரின் மேல் மரியாதையை அதிகரித்து என்றால், இது போன்ற படங்கள் அவரை மரியாதை குறைவாக திட்ட தூண்டுகிறது.கதை தேர்வு, திரைக்கதை, நடிகர்கள் என அத்தனை விதத்திலும் கோட்டை விட்டுள்ளனர்.
மற்றபடி படத்தில் விமர்சிக்க ஒன்றுமில்லை.
மொத்தத்தில் படம் ஒரு குப்பை.


எனது மதிப்பீடு : 2/10